பொதுவாக வங்கிகள் மூத்த குடிமக்கள் செய்யும் பிக்சட் டெபாசிட்டுகளுக்கு பிற வாடிக்கையாளர்களுக்கு (60 வயது உட்பட்டவர்கள்) வழங்கும் வட்டியை காட்டிலும் சிறிது வட்டி அதிகமாக வழங்கின்றன. அதேசமயம், சூப்பர் மூத்த குடிமக்களுக்கு அதனை காட்டிலும் வங்கிகள் சிறிது அதிகம் வட்டி வழங்குகின்றன.
முதல்ல சூப்பர் மூத்த குடிமக்கள் என்பவர்கள் யார் என்பதை பார்ப்போம். 1961ம் ஆண்டு வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 194p-ன் படி, முந்தைய ஆண்டில் எந்த நேரத்திலும் 80 அல்லது மேற்பட்ட வயதை எட்டிய ஒரு தனிநபர் சூப்பர் மூத்த குடிமகன் (super senior citizen) ஆவார்.

நாட்டில் செயல்படும் பல்வேறு வங்கிகள் டெபாசிட்டை ஈர்க்கும் நோக்கில் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வட்டி விகிதங்களில் பிக்சட் டெபாசிட் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சூப்பர் மூத்த குடிமக்களுக்காக எஸ்பிஐ பேட்ரோன்ஸ் திட்டத்தை (SBI Patrons scheme) அறிமுகம் செய்துள்ளது. இந்த பிக்சட் டெபாசிட்டுகளுக்கு மூத்த குடிமக்களுக்கு பொருந்தும் வழக்கமான வட்டி விகிதத்தை காட்டிலும் 0.10 சதவீதம் அதிகமாக வட்டி விகிதம் வழங்கப்படும்.
எஸ்பிஐ பேட்ரோன்ஸ் திட்டத்தின்கீழ், சூப்பர் மூத்த குடிமக்கள் குறைந்தபட்சம் ரூ.1,000ம், அதிகபட்சமாக ரூ.3 கோடியும் பிக்சட் டெபாசிட் செய்யலாம். மேலும், இந்த திட்டம் 2 வகைகளில் கிடைக்கிறது. முதிர்வு காலம் முடிவடைந்த பிறகே எடுக்கக்கூடிய குறித்த கால டெபாசிட் மற்றும் சிறப்பு கால டெபாசிட்டின்கீழ், முதிர்வு காலம் முடிவதற்கே முன்பே எடுக்கக்கூடிய காலபிள் டெபாசிட் என 2 வகைகள் உள்ளன.
இந்த திட்டத்தின் டெபாசிட் காலம் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை.சாதாரண குறித்த கால டெபாசிட்களை போல், இந்த டெபாசிட்டுகளை முன்கூட்டியே திரும்ப பெறும்போது அபராதம் விதிக்கப்படும்.
டெபாசிட் காலத்தை பொறுத்து சூப்பர் மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் 4.10 சதவீதம் முதல் 7.60 சதவீதம் வரை வழங்கப்படும். உதாரணமாக ஒரு வருட டெபாசிட்களுக்கு ரூ.7.4 சதவீதமும், 2 ஆண்டு கால டெபாசிட்டுக்கு 7.6 சதவீதமும் வட்டி வழங்கப்படும். 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டிய எஸ்பிஐ பணியாளர்கள் உள்பட அனைத்து தனிநபர்களும் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம்.
தனி அல்லது கூட்டு கணக்குகள் இரண்டுமே விண்ணப்பிக்கலாம். அதேசமயம், கூட்டு கணக்கிற்கு , முதன்மை கணக்கு வைத்திருப்பவர் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இந்த திட்டத்தை அறிமுகம் செய்தபோது, 80 வயதை எட்டிய எஸ்பிஐ பணியாளர்களும் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம்.
டெபாசிட் செய்பவரின் பிறந்த தேதி வங்கியின் சிபிஎஸ் சிஸ்டத்தால் தீர்மானிக்கப்படும். மேலும் கணக்கு வைத்திருப்பவர்கள் கூடுதல் விவரங்களை வழங்க வேண்டியதில்லை. ரூ.3 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இந்த திட்டத்தை தனிநபர் டெபாசிட்தாரர்கள் பெற முடியும்.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications