இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தன் வாடிக்கையாளர்களின் கடன்களை மறுசீரமைக்கும் (Loan Restructuring) வேலையில் இறங்கி இருக்கிறது.
இந்த SBI Loan Restructuring சேவையை யார் எல்லாம் பெற முடியும்? எப்படி கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது? இதில் எந்த கடன்கள் எல்லாம் அடங்கும்? என இந்த திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களையும் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
முதலில் யார் எல்லாம் இந்த SBI Loan Restructuring திட்டத்துக்கு தகுதியானவர்கள் என்பதில் இருந்து தொடங்குவோம்.
எஸ்பிஐ நிர்வாக இயக்குநர்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் கடன் வாங்கி இருப்பவர்களில் கிட்டத்தட்ட அனைவரும், SBI Loan Restructuring திட்டத்துக்கு தகுதியானவர்கள் தான் என, சி என் பி சி பத்திரிகையிடம் சொல்லி இருக்கிறார் எஸ்பிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் சி எஸ் ஷெட்டி. இந்த SBI Loan Restructuring திட்டத்துக்கான கடைசி தேதி 24 டிசம்பர் 2020. அதற்குள் முறையாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SBI Loan Restructuring திட்டத்தால் என்ன பயன்
இந்த கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் வழியாக:
1. கடனுக்கான இ எம் ஐ தவணைகளை, அதிகபட்சமாக 24 மாத காலம் வரை ஒத்திப்போடலாம். (சுருக்கமாக மாரடோரியம் வழங்கப்படும்.)
2. கடன் காலத்தை 24 மாதங்கள் வரை நீட்டிக்கலாம் (extension of tenure) + திருப்பிச் செலுத்தும் அட்டவணையை மாற்றி அமைக்கலாம் (Rescheduling of instalments).
வட்டியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
இப்போது இந்த SBI Loan Restructuring திட்டத்தின் கீழ் மாரடோரியம் பெறுபவர்கள், தாம் செலுத்தாத வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டி இருக்கும். எனவே மிகவும் தவிர்க்க முடியாத சூழல் இருந்தால் மட்டும் இந்த SBI Loan Restructuring திட்டத்தைப் பயன்படுத்தி, கடன் தவணைகளை ஒத்திப் போடுங்கள் அல்லது கடன் செலுத்தும் காலத்தை நீட்டித்துக் கொள்ளுங்கள்.
0.35 % கூடுதல் வட்டி கட்ட வேண்டும்
SBI Loan Restructuring திட்டத்தின் கீழ், கடனை மறு சீரமைப்பு செய்பவர்கள், தங்களின் வட்டி விகிதத்துக்கு மேல் 0.35 % வட்டியை, கடன் முடியும் காலம் வரை கூடுதலாகச் செலுத்த வேண்டி இருக்கும். எனவே தேவையானவர்கள் மட்டும் ஒன்றுக்கு பல முறை யோசித்துவிட்டு, எஸ்பிஐ கடன் மறு சீரமைப்புத் திட்டத்துக்கு விண்ணப்பியுங்கள்.
தகுதியானவர்கள் யார்
1. ஆகஸ்ட் 2020 மாதத்தில், வாடிக்கையாளர்களின் வருமானம் அல்லது சம்பளம், கடந்த பிப்ரவரி 2020 மாதத்தை விட குறைவாக இருப்பவர்கள்.
2. சம்பளக் குறைப்பு அல்லது சம்பள ஒத்திவைப்பு போன்றவைகளை எதிர் கொண்டு இருக்கும் வாடிக்கையாளர்கள்.
3. வேலை இழப்பு அல்லது வியாபாரம் நடத்த முடியாமல் மூடியவர்கள்.
4. வியாபாரம் குறைந்து இருப்பவர்கள்... SBI Loan Restructuring திட்டத்துக்கு தகுதியானவர்கள்.
குறிப்பு: எதிர்காலத்தில் என் வருமானம் குறையலாம் என்பவர்கள் எல்லாம் இந்த திட்டத்துக்கு தகுதியற்றவர்கள் தான்.
எந்த கடன்களுக்கு எல்லாம் SBI Loan Restructuring உண்டு
எஸ்பிஐ வங்கியில் வாங்கி இருக்கும்
1. வீட்டுக் கடன் அல்லது வீடு சார்ந்த கடன்கள்
2. கல்விக் கடன்கள்
3. வாகனக் கடன்கள் (வணிக பயன்பாட்டுக்கு வாங்கிய கடன்கள் நீங்கலாக)
4. தனி நபர் கடன் போன்ற கடன்களுக்கு எஸ்பிஐயின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கடன்களையும் SBI Loan Restructuring திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்யலாம்.
Loan Status: கடன் நிலை எப்படி இருக்க வேண்டும்
எஸ்பிஐ வங்கியில் வாங்கி இருக்கும் கடன், 01 மார்ச் 2020 நிலவரப்படி Standard Account ஆக இருக்க வேண்டும். அதாவது 01 மார்ச் 2020 வரை கடனுக்கான தவணைகளை எல்லாம் முறையாகச் செலுத்தி இருக்க வேண்டும். அதோடு மேலே "தகுதியானவர்கள் யார்" என்கிற பத்தியில் சொல்லப்பட்டிருப்பது போல பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே, SBI Loan Restructuring-க்கு தகுதியானவர்கள்.
மார்ச் 2020-க்கு பிறகு கடன் வாங்கியவர்கள் நிலை
01 மார்ச் 2020-க்குப் பிறகு வாங்கிய கடன்களுக்கு, SBI Loan Restructuring திட்டத்தின் கீழ் பலன் பெற முடியாது. 01 மார்ச் 2020-க்கு முன்பே கடன் வாங்கியவர்கள் மட்டுமே, இந்த கடன் மறு சீரமைப்புத் திட்டத்தில் இருந்து, மாரடோரியம் அல்லது கடனின் கால அவகாச நீட்டிப்பு போன்ற பலன்களைப் பெற முடியும்.
எப்படி விண்ணப்பிப்பது
www.sbi.co.in என்கிற எஸ்பிஐ வங்கியின் வலைதளத்தில் SBI Loan Restructuring திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் ஓடிபி வழியாக உறுதி செய்யப்படும். அப்படி ஆன்லைன் சரிப்பட்டு வராதவர்கள், எங்கு கடன் வாங்கி இருக்கிறார்களோ, அதே வங்கிக் கிளைக்குச் சென்று SBI Loan Restructuring-க்கு விண்ணப்பிக்கலாம்.
என்ன டாக்குமெண்டுகள் எல்லாம் தேவை
1. பிப்ரவரி 2020 & தற்போதைய சம்பளக் கணக்கு (Salary slips)
2. தாம் கோரும் மாரடோரியம் காலத்துக்குப் பிறகு எவ்வளவு சம்பளம் அல்லது வருமானம் வரலாம் என்கிற மதிப்பீடு.
3. வேலை பறி போய் இருந்தால் அந்தக் கடிதம்.
4. சம்பளம் க்ரெடிட் ஆன வங்கிக் கணக்கு ஸ்டேட்மெண்ட்.
5. வியாபாரிகள் என்றால் பிப்ரவரி 2020 முதல் விண்ணப்ப தேதிக்கு 15 நாள் முந்தி வரையான கணக்கு வழக்குகள் (statement of Operating Account).
6. வியாபாரிகள் என்றால், தங்கள் வியாபாரம் கொரோனா பிரச்சனையால் பாதிக்கப்பட்டது என்கிற சுய சான்று.
எத்தனை நாள் ஆகும்
SBI Loan Restructuring திட்டத்தின் கீழ் கடன் மறு சீரமைப்புக்கு விண்ணப்பித்த பின் 7 - 10 வேலை நாட்களுக்குள், விண்ணப்பம் சரி பார்க்கப்பட்டு, கடனுக்கு எத்தனை காலம் மாரடோரியம் வழங்குவது அல்லது கடன் காலத்தை நீட்டிப்பது அல்லது விண்ணப்பத்தை நிராகரிப்பது என ஒரு முடிவு எடுக்கப்படுமாம். இந்த திட்டத்துக்கு பிராசசிங் கட்டணம் கிடையாது.
More From GoodReturns

Salary Slip இல்லாமல் லோன் கிடைக்குமா? இந்த ஆவணங்கள் இருந்தால் ஈஸியா லோன் வாங்கலாம்!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications