கடந்த அக்டோபர் 02, 2020 அன்று, உச்ச நீதிமன்றத்தில், வட்டிக்கு வட்டி வசூலிப்பதை தள்ளுபடி செய்ய , மத்திய அரசு முன் வந்திருப்பதாகச் சொல்லி இருக்கிறது.
சில வாரங்களுக்கு முன், கடன் வாங்கி இருப்பவர்களின் சுமையைக் குறைக்க, மத்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி, சில வங்கிகள் கடன் மறுசீரமைப்புத் திட்டங்களை அறிவித்து இருக்கின்றன.
இந்தியாவிலேயே அதிக வாடிக்கையாளர்கள் மற்றும் அதிகம் கடன் கொடுத்து இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை (SBI Loan Restructuring) அறிவித்து இருக்கிறார்கள்.
எஸ்பிஐ தரப்பு
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் வாங்கி இருப்பவர்களில், கிட்டத்தட்ட அனைவருமே, SBI Loan Restructuring திட்டத்துக்கு தகுதியானவர்கள் தான் என, சி என் பி சி பத்திரிகையிடம் சொல்லி இருக்கிறார் எஸ்பிஐ வங்கியின் எம் டி, சி எஸ் ஷெட்டி. இந்த SBI Loan Restructuring திட்டத்துக்கான கடைசி தேதி டிசம்பர் 24, 2020 எனவும் சொல்லி இருக்கிறார்கள். இந்த தேதிக்குள் முறையாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SBI Loan Restructuring திட்டத்தால் என்ன பயன்
இந்த கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் வழியாக:
1. கடனுக்கான இ எம் ஐ தவணைகளை, அதிகபட்சமாக 24 மாத காலம் வரை ஒத்திப்போடலாம். (சுருக்கமாக மாரடோரியம் வழங்கப்படும்.)
2. கடன் காலத்தை 24 மாதங்கள் வரை நீட்டிக்கலாம் (extension of tenure) + திருப்பிச் செலுத்தும் அட்டவணையை மாற்றி அமைக்கலாம் (Rescheduling of instalments).
Eligibility - SBI Loan Restructuring
1. ஆகஸ்ட் 2020 மாதத்தில், வாடிக்கையாளர்களின் வருமானம் அல்லது சம்பளம், கடந்த பிப்ரவரி 2020 மாதத்தை விட குறைவாக இருப்பவர்கள்.
2. சம்பளக் குறைப்பு அல்லது சம்பள ஒத்திவைப்பு போன்றவைகளை எதிர் கொண்டு இருக்கும் வாடிக்கையாளர்கள்.
3. வேலை இழப்பு அல்லது வியாபாரம் நடத்த முடியாமல் மூடியவர்கள்.
4. வியாபாரம் குறைந்து இருப்பவர்கள்... SBI Loan Restructuring திட்டத்துக்கு தகுதியானவர்கள்.
குறிப்பு: எதிர்காலத்தில் என் வருமானம் குறையலாம் என்பவர்கள் எல்லாம் இந்த திட்டத்துக்கு தகுதியற்றவர்கள் தான்.
SBI Loan Restructuring எந்த கடன்களுக்கு எல்லாம் உண்டு
எஸ்பிஐ வங்கியில் வாங்கி இருக்கும்
1. வீட்டுக் கடன் அல்லது வீடு சார்ந்த கடன்கள்
2. கல்விக் கடன்கள்
3. வாகனக் கடன்கள் (வணிக பயன்பாட்டுக்கு வாங்கிய கடன்கள் நீங்கலாக)
4. தனி நபர் கடன் போன்ற கடன்களுக்கு எஸ்பிஐயின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கடன்களையும் SBI Loan Restructuring திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்யலாம்.
SBI Loan Restructuring-க்கான Loan Status எப்படி இருக்க வேண்டும்
எஸ்பிஐ வங்கியில் வாங்கி இருக்கும் கடன், 01 மார்ச் 2020 நிலவரப்படி Standard Account ஆக இருக்க வேண்டும். அதாவது 01 மார்ச் 2020 வரை கடனுக்கான தவணைகளை எல்லாம் முறையாகச் செலுத்தி இருக்க வேண்டும். அதோடு மேலே "தகுதியானவர்கள் யார்" என்கிற பத்தியில் சொல்லப்பட்டிருப்பது போல பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே, SBI Loan Restructuring-க்கு தகுதியானவர்கள்.
SBI Loan Restructuring-க்கு எப்படி விண்ணப்பிப்பது
www.sbi.co.in என்கிற எஸ்பிஐ வங்கியின் வலைதளத்தில் SBI Loan Restructuring திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் ஓடிபி வழியாக உறுதி செய்யப்படும். அப்படி ஆன்லைன் சரிப்பட்டு வராதவர்கள், எங்கு கடன் வாங்கி இருக்கிறார்களோ, அதே வங்கிக் கிளைக்குச் சென்று SBI Loan Restructuring-க்கு விண்ணப்பிக்கலாம்.
SBI Loan Restructuring-க்கு என்ன டாக்குமெண்டுகள் தேவை
1. பிப்ரவரி 2020 & தற்போதைய சம்பளக் கணக்கு (Salary slips)
2. தாம் கோரும் மாரடோரியம் காலத்துக்குப் பிறகு எவ்வளவு சம்பளம் அல்லது வருமானம் வரலாம் என்கிற மதிப்பீடு.
3. வேலை பறி போய் இருந்தால் அந்தக் கடிதம்.
4. சம்பளம் க்ரெடிட் ஆன வங்கிக் கணக்கு ஸ்டேட்மெண்ட்.
5. வியாபாரிகள் என்றால் பிப்ரவரி 2020 முதல் விண்ணப்ப தேதிக்கு 15 நாள் முந்தி வரையான கணக்கு வழக்குகள் (statement of Operating Account).
6. வியாபாரிகள் என்றால், தங்கள் வியாபாரம் கொரோனா பிரச்சனையால் பாதிக்கப்பட்டது என்கிற சுய சான்று.
நமக்கு நஷ்டம் தான்
இந்த SBI Loan Restructuring திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள், உண்மையில் நஷ்டம் அடைகிறார்கள். எப்படி நஷ்டம் அடைகிறார்கள்? என்ன சிக்கல் இருக்கிறது? SBI Loan Restructuring திட்டத்தால் கடன் வாங்கியவர்கள், என்ன மாதிரியான சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.
1. அசுரத் தனமாக அதிகரிக்கும் வட்டி
SBI Loan Restructuring திட்டத்தின் கீழ் மாரடோரியம் பெறுபவர்கள், தாம் செலுத்தாத வட்டிக்கு, வட்டி செலுத்த வேண்டி இருக்கும். எனவே மிகவும் தவிர்க்க முடியாத சூழல் இருந்தால் மட்டும் இந்த SBI Loan Restructuring திட்டத்தைப் பயன்படுத்தி, கடன் தவணைகளை ஒத்திப் போடுங்கள் அல்லது கடன் செலுத்தும் காலத்தை நீட்டித்துக் கொள்ளுங்கள்.
உதாரணம்
சனா ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். மாதம் 1 லட்சம் சம்பளம். ஆனால் அவர் வங்கியில் 10 % வட்டிக்கு, 20 ஆண்டுகளில் (240 மாத தவணை) திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் 55 லட்சம் ரூபாய் பாக்கி இருக்கிறது என வைத்துக் கொள்வோம். தற்போது மாதம் 53,076 ரூபாய் மாத இஎம்ஐ கடன் தவணையாக செலுத்திக் கொண்டு இருப்பார். இப்போது மேலே சொன்னது SBI Loan Restructuring திட்டம் வழியாக 6 மாத தவணைகளை ஒத்திப் போட்டுக் கொள்கிறார் என வைத்துக் கொள்வோம். இப்போது சனா, எவ்வளவு கூடுதலாக வட்டி செலுத்துவார் என்பதை பார்ப்போம்.
மாதம் 1 - அக்டோபர் 2020
அக்டோபர் 01, 2020 தேதிப் படி, மொத்த கடன் நிலுவைத் தொகை 55,00,000 ரூபாயாக இருக்கும். 55 லட்சம் ரூபாய்க்கு வட்டியை கணக்கிடுவார்கள். ஆக 55 லட்சம் ரூபாய்க்கு 45,833 ரூபாய் வட்டி வரும். முதல் மாதம் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 55 லட்சம் ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 31 அக்டோபர் 2020 தேதி நிலவரப்படி, சனாவின் மொத்த கடன் நிலுவைத் தொகை 55,45,833 ரூபாயாக இருக்கும்.
மாதம் 2 - நவம்பர் 2020
நவம்பர் 01, 2020 தேதிப் படி, மொத்த கடன் நிலுவைத் தொகை 55,45,833 ரூபாயாக இருக்கும். இதற்கு வட்டி கணக்கிட்டால் 46,215 ரூபாய் வட்டி வரும். இரண்டாம் மாதமும் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 55,45,833
ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக, 30 நவம்பர் 2020 தேதி நிலவரப்படி, சனாவின் மொத்த கடன் நிலுவைத் தொகை 55,92,049 ரூபாயாக அதிகரித்து இருக்கும்.
மாதம் 3 - டிசம்பர் 2020
டிசம்பர் 01, 2020 தேதிப் படி, மொத்த கடன் நிலுவைத் தொகை 55,92,049 ரூபாயாக இருக்கும். இதற்கு வட்டி கணக்கிட்டால் 46,600 ரூபாய் வட்டி வரும். 3-ஆம் மாதமும் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 55,92,049
ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 31 டிசம்பர் 2020 தேதி நிலவரப்படி, சனாவின் மொத்த கடன் நிலுவைத் தொகை 56,38,649 ரூபாயாக அதிகரித்து இருக்கும்.
மாதம் 4 - ஜனவரி 2021
ஜனவரி 01, 2021 தேதிப் படி, மொத்த கடன் நிலுவைத் தொகை 56,38,649 ரூபாயாக இருக்கும். இதற்கு வட்டி கணக்கிட்டால் 46,989 ரூபாய் வட்டி வரும். 4-ஆம் மாதமும் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 56,38,649
ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 31 ஜனவரி 2021 தேதி நிலவரப்படி, சனாவின் மொத்த கடன் நிலுவைத் தொகை 56,85,638 ரூபாயாக அதிகரித்து இருக்கும்.
மாதம் 5 - பிப்ரவரி 2021
பிப்ரவரி 01, 2021 தேதிப் படி, மொத்த கடன் நிலுவைத் தொகை 56,85,638
ரூபாயாக இருக்கும். இதற்கு வட்டி கணக்கிட்டால் 47,380 ரூபாய் வட்டி வரும். 5-ஆம் மாதமும் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 56,85,638 ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 28 பிப்ரவரி 2020 தேதி நிலவரப்படி, சனாவின் மொத்த கடன் நிலுவைத் தொகை 57,33,018 ரூபாயாக அதிகரித்து இருக்கும்.
மாதம் 6 - மார்ச் 2021
மார்ச் 01, 2021 தேதிப் படி, மொத்த கடன் நிலுவைத் தொகை 57,33,018 ரூபாயாக இருக்கும். இதற்கு வட்டி கணக்கிட்டால் 47,775 ரூபாய் வட்டி வரும். 6-ஆம் மாதமும் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 57,33,018 ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 31 மார்ச் 2021 தேதி நிலவரப்படி, சனாவின் மொத்த கடன் நிலுவைத் தொகை 57,80,793 ரூபாயாக அதிகரித்து இருக்கும்.
ரூ. 2,80,793 அசல் அதிகரிப்பு
ஆறு மாதங்களுக்கு முன் 55 லட்சம் ரூபாயாக இருந்த கடன் அசல் தொகை, 6 மாதங்களுக்குப் பின் 57.80 லட்சமாக அதிகரித்து இருக்கும். இப்போது இந்த கூடுதல் அசலுக்கு வட்டி, வட்டிக்கு குட்டி என பயங்கரமாக நாம் வங்கிக்குச் செலுத்த வேண்டி இருக்கும்.
இஎம்ஐ கூடும்
மேலே சொன்னது போல 57,80,793 ரூபாய் அசலுக்கு அதே 240 மாதங்களில் கடனை அடைக்க வேண்டும் என்றால் இஎம்ஐ தவணைகள் 53,076 ரூபாயில் இருந்து 55,786 ரூபாயாக அதிகரிக்கும். அதோடு சனா 6 மாத இஎம்ஐ தவணைகளை ஒத்திப் போடவில்லை என்றால் 72.38 லட்சம் வட்டியாகச் செலுத்துவார். ஆனால் இப்போது 6 மாத தவணைகளை ஒத்திப் போட்டதால் 76.07 லட்சம் செலுத்துவார். 3.69 லட்சம் வட்டி கூடுதலாகச் செலுத்துவார்.
அதே இஎம்ஐ-க்கு எவ்வளவு
தற்போது சனா செலுத்தும் 53,076 ரூபாய் இஎம்ஐ தொடர வேண்டும் என்றால், சனா 240 மாதங்களுக்கு பதிலாக, 288 மாதங்களுக்கு இஎம்ஐ செலுத்த வேண்டும். இந்த புதிய இஎம்ஐ 53,032 ரூபாயாக இருக்கும். சனா 6 மாத இஎம்ஐ தவணைகளை ஒத்திப் போடவில்லை என்றால் 72.38 லட்சம் வட்டியாகச் செலுத்துவார். ஆனால் இப்போது 6 மாதம் ஒத்திப் போட்டு, 288 மாதங்களுக்கு இஎம்ஐ நீட்டித்து இருப்பதால் 94.92 லட்சம் வட்டி செலுத்துவார். 22.54 லட்சம் ரூபாய் கூடுதலாக வட்டியைச் செலுத்துவார் நம் சனா.
2. கூடுதல் வட்டி விகிதம் 0.35 %
SBI Loan Restructuring திட்டத்தின் கீழ், கடனை மறு சீரமைப்பு செய்பவர்கள், தங்களின் வட்டி விகிதத்துக்கு மேல் 0.35 % வட்டியை, கடன் முடியும் காலம் வரை கூடுதலாகச் செலுத்த வேண்டி இருக்கும். எனவே தேவையானவர்கள் மட்டும் ஒன்றுக்கு பல முறை யோசித்துவிட்டு, எஸ்பிஐ கடன் மறு சீரமைப்புத் திட்டத்துக்கு விண்ணப்பியுங்கள்.
3. க்ரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படலாம்
மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்த மாரடோரியத்தை பயன்படுத்திக் கொண்டவர்களின் க்ரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது எனச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ. ஆனால் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு க்ரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படலாம் என்கிறது லைஃப் மிண்ட் பத்திரிகை. இது நீங்கள் புதிய கடன் வாங்குவதற்கும் கூட தடையாக இருக்கலாம்.
ஒத்தி வைப்பு வேண்டாம்
எனவே மக்களே, இஎம்ஐ தவணைகளை ஒத்திப் போடுவதற்கு முன், இந்த கணக்கீடுகளை ஒரு முறை பார்த்துவிடுங்கள். கையில் பணம் இருந்தால் எப்படியாவது சமாளித்துவிடலாம் எனத் தோன்றினால், தயவு செய்து கடன் தவணைகளைச் செலுத்துங்கள். வெறும் 6 மாத தவணை ஒத்திப் போட்டாலே லட்சக் கணக்கில் கூடுதலாக வட்டி செலுத்த வேண்டி இருக்கிறது என்றால், 24 மாதங்கள் எல்லாம் மாரடோரியம் பெற்றுக் கொண்டால், எத்தனை லட்சம் ரூபாயை, கூடுதலாக, வட்டியாக செலுத்த வேண்டி இருக்கும் எனக் கணிக்கிட்டுப் பாருங்கள். எனவே யோசித்து முடிவு செய்யுங்கள்.
More From GoodReturns

Salary Slip இல்லாமல் லோன் கிடைக்குமா? இந்த ஆவணங்கள் இருந்தால் ஈஸியா லோன் வாங்கலாம்!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications