இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, தன்னுடைய எம் சி எல் ஆர் வட்டி விகிதங்களை 0.25 % குறைத்து இருக்கிறது.
எஸ்பிஐ வங்கியில் எம் சி எல் ஆர் வட்டி விகித அடிப்படையிலும் ப்ல கடன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அவைகளுக்கான வட்டி விகிதங்கள் இந்த வட்டி குறைப்பினால் குறையும்.
இந்த வட்டி விகிதம் 10 ஜூன் 2020, புதன் கிழமை முதல் அமலுக்கு வருமாம். இப்படி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தன்னுடைய எம் சி எல் ஆர் வட்டி விகிதத்தை தொடர்ச்சியாகக் குறைப்பது 13-வது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 2019
கடந்த ஏப்ரல் 2019 முதல் தொடர்ந்து எஸ்பிஐ வங்கியின் எம் சி எல் ஆர் வட்டி விகிதங்கள் குறைந்து வருகிறது. ஏப்ரல் 2019-ல் 8.5 சதவிகிதமாக இருந்த எம் சி எல் ஆர் வட்டி விகிதம், படிப்படியாக குறைக்கப்பட்டு இப்போது 7.00 சதவிகிதத்தைத் தொட்டு இருக்கிறது. ஏப்ரல் 2019 முதல் கடந்த மே 2020 வரையான, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் எம் சி எல் ஆர் வட்டி விகிதம் எவ்வளவு இருந்தது என்பதைக் கீழே அட்டவணையில் குறிப்பிட்டு இருக்கிறோம்.
| எம் சி எல் ஆர் வட்டி விகித விவரங்கள் (கடந்த காலம்) | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| Effective Date | Interest Rate (%) | ||||||
| ON | 1M | 3M | 6M | 1Y | 2Y | 3Y | |
| 10.05.2020 | 6.95 | 6.95 | 7.00 | 7.20 | 7.25 | 7.45 | 7.55 |
| 10.04.2020 | 7.10 | 7.10 | 7.15 | 7.35 | 7.40 | 7.60 | 7.70 |
| 10.03.2020 | 7.45 | 7.45 | 7.50 | 7.70 | 7.75 | 7.95 | 8.05 |
| 10.02.2020 | 7.60 | 7.60 | 7.65 | 7.80 | 7.85 | 8.05 | 8.15 |
| 10.01.2020 | 7.65 | 7.65 | 7.70 | 7.85 | 7.90 | 8.10 | 8.20 |
| 10.12.2019 | 7.65 | 7.65 | 7.70 | 7.85 | 7.90 | 8.10 | 8.20 |
| 10.11.2019 | 7.65 | 7.65 | 7.70 | 7.85 | 8.00 | 8.10 | 8.20 |
| 10.10.2019 | 7.70 | 7.70 | 7.75 | 7.90 | 8.05 | 8.15 | 8.25 |
| 10.09.2019 | 7.80 | 7.80 | 7.85 | 8.00 | 8.15 | 8.25 | 8.35 |
| 10.08.2019 | 7.90 | 7.90 | 7.95 | 8.10 | 8.25 | 8.35 | 8.45 |
| 10.07.2019 | 8.05 | 8.05 | 8.10 | 8.25 | 8.40 | 8.50 | 8.60 |
| 10.06.2019 | 8.10 | 8.10 | 8.15 | 8.30 | 8.45 | 8.55 | 8.65 |
| 10.05.2019 | 8.10 | 8.10 | 8.15 | 8.30 | 8.45 | 8.55 | 8.65 |
| 10.04.2019 | 8.15 | 8.15 | 8.20 | 8.35 | 8.50 | 8.60 | 8.70 |
தற்போதைய நிலவரம்
எம் சி எல் ஆர் வட்டி விகிதம் ஓவர் நைட் தொடங்கி 3 ஆண்டுகள் வரைக்கும் தனித் தனி வட்டி விகிதங்கள் இருக்கின்றன. புதிதாக குறைத்து இருக்கும் எம் சி எல் ஆர் வட்டி விகிதங்கள் என்ன என்பதையும் விரிவாகப் பார்ப்போம்.
ஓவர் நைட் 6.95%-ல் இருந்து 6.70 %-மாக குறைத்து இருக்கிறார்கள்.
தற்போதைய நிலவரம் 1
ஒரு மாதத்துக்கான எம் சி எல் ஆர் 6.95%-ல் இருந்து 6.70 %-மாக குறைத்து இருக்கிறார்கள்.
மூன்று மாதத்துக்கான எம் சி எல் ஆர் 7.00 %-ல் இருந்து 6.75 %-மாக குறைத்து இருக்கிறார்கள்.
ஆறு மாதத்துக்கான எம் சி எல் ஆர் 7.20 %-ல் இருந்து 6.95 %-மாக குறைத்து இருக்கிறார்கள்.
தற்போதைய நிலவரம் 2
ஒரு வருடத்துக்கான எம் சி எல் ஆர் 7.25 %-ல் இருந்து 7.00 %-மாக குறைத்து இருக்கிறார்கள்.
இரண்டு வருடத்துக்கான எம் சி எல் ஆர் 7.45 %-ல் இருந்து 7.20 %-மாக குறைத்து இருக்கிறார்கள்.
மூன்று வருடத்துக்கான எம் சி எல் ஆர் 7.55 %-ல் இருந்து 7.30 %-மாக குறைத்து இருக்கிறார்கள்.
நன்மைகள்
எம் சி எல் ஆர் வட்டி விகிதத்தின் அடிப்படையில் வாங்கி இருக்கும் எஸ்பிஐ கடன்களுக்கான வட்டி மற்றும் இ எம் ஐ குறையும். இனி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில், எம் சி எல் ஆர் வட்டி விகித அடிப்படையில் வாங்க இருக்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களும் குறையும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications