குறைந்த விலையில் சொத்து வாங்க வேண்டுமா? எஸ்பிஐயின் மெகா மின் ஏலம் சிறந்த வழி தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் சொத்துக்களை ஏலம் விட உள்ளதாக தெரிவித்துள்ளது.

 

நீங்கள் ஒரு வீட்டை வாங்க தயாராக இருக்கிறீர்கள் என்றால் இது உங்களுக்கு சிறப்பான வாய்ப்பே. ஏனெனில் இது சந்தை விலையை விட குறைந்த விலையில் வாங்க உங்களுக்கு வாய்ப்பாக அமையும்.

எஸ்பிஐ-யின் இந்த ஏலத்தில் அனைத்து வகையான வீட்டு வசதி, குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை சொத்துக்கள் உள்ளன.

அடமானக் கடன்

அடமானக் கடன்

வங்கிகளின் முக்கியமான வேலையே கடன் தருவது தான். எனினும் அந்த கடனை பல வழிகளில் வழங்குகின்றன. அதிலும் சில கடன் வகைகளை சொத்துகளுக்கு பிணையமாகவும் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் பல்வேறு தேவைகளை முன்னிட்டு இந்த கடனை பெறும் வாடிக்கையாளர்கள், வீட்டின் பெயரிலோ அல்லது ஏதாவது சொத்தின் பெயரிலோ இந்தக் கடனை பெறலாம்.

கடன் கட்டாதவர்களின் சொத்துக்கள் ஏலம்

கடன் கட்டாதவர்களின் சொத்துக்கள் ஏலம்

அப்படி கடன் பெறுபவர்களில், உரிய காலகட்டத்தில் கடனை திரும்ப செலுத்தாதவர்களின் சொத்துகளை, வங்கிகள் ஆன்லைன் மூலம் ஏலத்தில் விடுகின்றன. அப்படி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் சொத்துக்களை எஸ்பிஐ தற்போது ஏலமிட திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற சொத்துகளைத் தான் தற்போது வங்கி ஆன்லைன் ஏலம் (SBI mega e-auction) மூலம் விற்பனை செய்கிறது.

ட்விட்டர் பக்கத்தில் தகவல்
 

ட்விட்டர் பக்கத்தில் தகவல்

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் தகவலை அளித்துள்ளது. மேலும் இந்த ஏலம் தொடர்பான முழுமையான தகவல்களை வங்கி வெளியிட்டுள்ளது. ஆக இந்த முழு ஏலமும் வெளிப்படையான முறையில் நடத்தப்படுகிறது. ஏலத்திற்கு முன்னர் கொடுக்கப்பட்ட தகவல்களில், சொத்து பற்றிய தேவையான அனைத்து விவரங்களும் வருங்கால வாங்குபவருக்கு வழங்கப்படுகின்றன.

சொத்து குறிதான தகவல்கள்

சொத்து குறிதான தகவல்கள்

இதில், சொத்து, அளவு மற்றும் பிற தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வங்கி கிளையில், இந்த சொத்துக்கள் பற்றிய தகவல்களை வழங்க ஒரு நபர் நியமிக்கப்படுகிறார்.

எஸ்பிஐயின் மின் ஏலத்தில் எடுக்கும் சொத்துக்களின் முழுமையான தகவல்கள் sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன.

ஏலத்தில் எப்படி கலந்து கொள்வது?

ஏலத்தில் எப்படி கலந்து கொள்வது?

எஸ்பிஐயின் இந்த மின் ஏலத்தில் கலந்து கொள்ள e-Auction என்ற தளத்தில் சென்று உங்களது மொபைல் எண் மற்றும் மெயில் ஐடி கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.

இதற்கு பிறகு உங்களது கேஒய்சியை சரியான முறையில் பதிவு செய்து, தேவையான ஆவணங்களையும் அப்லோட் செய்ய வேண்டும். இதனை வங்கி சரிபார்க்கும். இதற்காக வங்கி இரண்டு நாட்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த மின் ஏலத்தில் கலந்து கொள்ள ஆன்லைன் பேமென்ட் அல்லது ஆஃப் லைன் பேமென்ட் என்றாலும் அதற்கான ரசீதினையும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். வங்கிகள் உங்களை ஆவணங்களை சரிபார்த்து உங்களுக்கு தெரியப்படுத்தும்.

இதன் பிறகு ஏலத்தின் போது நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவுரையின் படி ஏலம் நடக்கும் நேரத்தில் நீங்கள் ஆன்லைனில் இருக்க வேண்டும்.

எவ்வளவு சொத்துகள்?

எவ்வளவு சொத்துகள்?

தற்போது எஸ்பிஐ-யின் இணையதள முகவரி மூலம் 3,317 வீடுகள், 935 வணிக சொத்துகள் 513 தொழிற்துறை சொத்துகள், 9 விவசாய சொத்துகள் என இந்த ஏலத்தில் உள்ளன. இந்த ஏலம் குறித்தான முக்கிய விவரங்கள் bankeauctions.com/Sbi; sbi.auctiontiger.net/EPROC/; ibapi.in; and mstcecommerce.com/auctionhome/ibapi/index.jsp என்ற முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sbi எஸ்பிஐ
English summary

SBI mega e-auction for properties, it's great chance for buying assets? Here full details

SBI mega e-auction for properties, it's great chance for buying assets? Here full details
Story first published: Sunday, December 20, 2020, 21:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X