எஸ்பிஐ-யில் உள்ள சூப்பர் திட்டம்.. இனி சில நொடிகளில் இந்த வேலையை செய்யலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக வங்கிகளில் ஏதேனும் விவரங்களை மாற்ற வேண்டுமெனில் வங்கிகளுக்கு சென்று மணி கணக்கில் காத்திருக்க வேண்டும். முன்பெல்லாம் சிறு மாற்றங்களுக்கு கூட வங்கிகளுக்கு தான் செல்ல வேண்டிய கட்டாயம். ஆனால் இன்றோ அப்படி இல்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் செய்து கொள்ளலாம்.

 

அதிலும் நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State bank of india), வாடிக்கையாளர்களுக்காக பல புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

தனியார் வங்கிகளை விட, எஸ்பிஐ-யில் சிறப்பான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல சேவைகளை செய்து வருகின்றது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது, எஸ்பிஐ நாமினி விவரங்களை நாமே எப்படி ஆன்லைனில் மாற்றுவது என்பது தான்.

நாமினியை மாற்ற வேண்டுமா?

நாமினியை மாற்ற வேண்டுமா?

பொதுவாக வங்கிக் கணக்கு தொடங்கும்போதே நாமினி பற்றிய விவரங்களை கொடுத்திருப்போம். அல்லது சிலர் கொடுக்காமல் விட்டிருக்கலாம். அல்லது ஏற்கனவே கொடுத்த பெயருக்கு பதிலாக வேறு பெயர்களை நாமினியாக மாற்ற நினைக்கலாம். அப்படிப்பட்டவர்கள் இனி வங்கிகளுக்கு சென்று அலைய வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே அதனை மாற்றிக் கொள்ளலாம்.

எப்படியெல்லாம் மாற்றலாம்?

எப்படியெல்லாம் மாற்றலாம்?

உங்களது எஸ்பிஐ (SBI) வங்கிக் கணக்கில், ஆன்லைனிலேயே நாமினி விவரங்களை மாற்றிக் கொள்ளலாம். எஸ்பிஐ அனைத்து டெபாசிட் கணக்குகளிலும், பாதுகாப்பு கருதி நாமினி வசதி உள்ளது. ஆக உங்களுக்கு தேவைப்படும்போது அதனை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இந்த விவரங்களை https://www.onlinesbi.com/ என்ற இணையத்திலோ அல்லது யோனோ ஆப் வழியாகவோ மாற்றிக் கொள்ள முடியும்.

வங்கிக் கிளைக்கு சென்றும் மாற்றலாம்
 

வங்கிக் கிளைக்கு சென்றும் மாற்றலாம்

தற்போது வங்கியில் கணக்கு தொடங்கும்போதே, நாமினி விவரங்களும் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். எனினும் இதற்கு முன்பு கொடுக்காதவர்களும் உண்டு. அல்லது கொடுத்த விவரங்களை மாற்ற நினைப்பவர்களும் உண்டு. ஆக இதனை உங்களது வங்கிக் கிளைக்கு சென்று இதனை கொடுத்துக் கொள்ளலாம். அல்லது உங்களது இணைய வங்கி மூலம் மாற்றிக் கொள்ளலாம், மொபைல் வங்கி மூலமாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

நெட் பேங்கிங் ஐடியில் மாற்றிக் கொள்ளலாம்

நெட் பேங்கிங் ஐடியில் மாற்றிக் கொள்ளலாம்

இதற்காக https://www.onlinesbi.com/ என்ற இணையத்தில் சென்று உங்களது ஐடி பாஸ்வேர்டினை கொடுத்து லாகின் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு மெனு பாரில் உள்ள Request & Enquiries என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.அதில் ஆன்லைன் நாமினேஷன் என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருந்தால், அதில் எந்த கணக்கு என்பதனையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். அதன் பிறகு புதிய நாமினி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

சில விவரங்கள் கொடுக்க வேண்டும்

சில விவரங்கள் கொடுக்க வேண்டும்

அதன் பிறகு புதிய நாமினியின் பெயர், பிறந்த தேதி, நாமினி உங்களுக்கு என்ன உறவு என்பதை பதிவு செய்ய வேண்டும். இதனை பதிவு செய்து, சப்மிட் கொடுக்க வேண்டும். இதன் பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு பாஸ்வேர்டு ஒன்று வரும். அதனை கொடுத்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI nominee registration process in online: Check details

SBI latest updates.. SBI nominee registration process in online: Check details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X