சுமாராக 50 - 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், வங்கியில் ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு ஃபிக்ஸட் டெபாசிட் இருப்பது, ஒரு ஆண் வாரிசு இருப்பதற்கு சமம் என்று சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கலாம்.
காரணம் என்ன தெரியுமா, அந்த காலங்களில் வங்கிகள் கொடுத்த அபரீவித வட்டி விகிதம். என்ன பெரிதாக வட்டி கொடுத்து இருப்பார்கள் என்று கேட்கிறீர்களா..?
வாருங்கள் 1990-களில் இருந்து எஸ்பிஐ எந்த டெபாசிட்டுக்கு எவ்வளவு வட்டி விகிதம் கொடுத்து இருக்கிறார்கள். இப்போது எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.
அதிகபட்ச வட்டி
1991 காலகட்டத்தில் அரசின் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, 3 வருடத்துக்கு மேலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு, சுமாராக 13 சதவிகிதம் எல்லாம் வட்டி கொடுத்து இருக்கிறது. அவ்வளவு பின்னோக்கிச் செல்ல்ல வேண்டாம் 21-ம் ஆண் நூற்றாண்டின் தொடக்கத்தில், 2000-ம் ஆண்டு வாக்கில் கூட 3 வருடத்துக்கு மேலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 10 % மேல் வட்டி கொடுத்து இருக்கிறது எஸ்பிஐ. இதெல்லாம் பழைய கதை என்கிறீர்கள..?
2008-ல் வட்டி
கடந்த 2008-ம் ஆண்டு வாக்கில் இதே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் சில திட்டங்களுக்கு 10.5 சதவிகிதம் வரை எல்லாம் வட்டி கொடுத்து இருக்கிறார்கள். இந்த வட்டியை நம்பி பலர் வாழ்க்கையே நடத்தி இருக்கிறார்கள். இப்போது என்ன சொல்கிறீர்கள். சரி அப்படியே 2014-ம் ஆண்டுக்கு வருவோம்.
2014-ல்
கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின் கூட, ஸ்டேட் பேங்க் இந்தியாவில் ஜூன் 2014 கால கட்டத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு சுமாராக 9 சதவிகிதம் வரை வட்டி விகிதங்களைக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். இப்படி 9 - 13%-க்கு மேல் வட்டி வாங்கி பழக்கப்பட்டவர்கள் திடீரென பாதிக்கு பாதி வட்டி வாங்கிக் கொள்ளச் சொன்னால் எப்படி இருக்கும். எஸ்பிஐயிலேயே ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி அவ்வளவு குறைந்து இருக்கிறது.
பொது மக்களுக்கான FD வட்டி
10-03-2020 முதல், எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்).
SBI Fixed Deposit Interest rates
7 days to 45 days-4.00%
46 days to 179 days-5.00%
180 days to 210 days-5.50%
211 days to less than 1 year-5.5%
1 year to less than 2 year-5.90%
2 years to less than 3 years-5.90%
3 years to less than 5 years-5.90%
5 years and up to 10 years-5.90%
மூத்த குடிமக்களுக்கான FD வட்டி
10-03-2020 முதல், மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்).
Senior Citizen SBI Fixed Deposit Interest rates
7 days to 45 days-4.50%
46 days to 179 days-5.50%
180 days to 210 days-6.00%
211 days to less than 1 year-6.00%
1 year to less than 2 year-6.40%
2 years to less than 3 years-6.40%
3 years to less than 5 years-6.40%
5 years and up to 10 years-6.40%... என குறைத்து இருக்கிறார்கள்.
ஒப்பீடு
2008-ம் ஆண்டில் ஒரு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர் 10 சதவிகிதம் வட்டி வாங்கியவர், இப்போது அதே ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வெறும் 5.9 சதவிகிதம் தான் வட்டி வாங்க முடியும் என்றால், எப்படி சார் வாழ்வது..? வங்கியில் இருந்து வரும் வட்டி வருமானங்களை மட்டுமே நம்பி இருக்கும் வயதானவர்களின் கதி என்னாவது..?
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications