இனி ஏடிஎம் போகவேண்டாம்.. வாட்சப்பில் ஒரு மெசேஜ் போதும்.. உங்க வீட்டுக்கே ஏடிஎம் வந்துவிடும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனியார் துறை வங்கிகளுக்கு சவால் விடும் வகையில், அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது கொரோனா நெருக்கடியில் இருந்து வரும் மக்கள், வங்கிகளில் பணத்தினை எடுக்க வேண்டுமெனில் அதற்கும் கூட பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

ஆனால் இதற்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக இவ்வங்கி வாட்சப் வழியாக மொபைல் ஏடிம்எம் சேவையை வழங்கி வருகின்றது. அதனை பற்றித் தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

 லாக்டவுனால் வீட்டில் அடைந்து கிடக்கும் மக்கள்
 

லாக்டவுனால் வீட்டில் அடைந்து கிடக்கும் மக்கள்

இன்னும் நாட்டில் பல இடங்களில் கொரோனா லாக்டவுன் காரணமாக மக்கள் வீட்டிலேயே அடைந்து கிடைக்க வேண்டிய நிலையே நீடித்து வருகின்றது. இன்னும் சிலர் பாதுகாப்பு கருதி வீட்டிலேயே இருந்து வருகின்றனர். எனினும் தங்களது அத்தியாவசிய தேவைக்கு என பணம் எடுக்க ஏடிஎம்களை அல்லது வங்கியையோ நாடி செல்கின்றனர்.

எஸ்பிஐ அதிரடி திட்டம்

எஸ்பிஐ அதிரடி திட்டம்

இப்படி ஏடிஎம்களுக்கு செல்லும்போது கூட்டம் கூடுவதால் கொரோனா அச்சுறுத்தல் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. ஆனால் இவர்களுக்கு சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ இந்த அதிரடியான புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

 வாட்ஸ்அப் மெசேஜ் போதும்

வாட்ஸ்அப் மெசேஜ் போதும்

இதன்படி இனி மக்கள் பணம் எடுக்க ஏடிஎம்-களைத் தேடி செல்லத் தேவையில்லை. மாறாக ஏடிஎம்-களே உங்கள் வீடு தேடி வரும். அதாவது, உங்களுக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டுமென்றால் எஸ்பிஐக்கு வாட்சப்பில் ஜஸ்ட் ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும். அல்லது போன் அழைப்பு விடுத்தாலும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே ஏடிஎம் வந்துவிடும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆக அதன் மூலம் நீங்கள் மிக ஈஸியாகவும், பாதுகாப்பாகவும் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ள முடியும். இதற்கான அறிவிப்பை எஸ்பிஐ வங்கியின் தலைமை பொது மேலாளர் அஜய் குமார் அதிகாரப்பூர்வமாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தற்போது லக்னோவில் மட்டும்

தற்போது லக்னோவில் மட்டும்

தற்போது முதற்கட்டமாக லக்னோவில் மட்டும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் வீட்டிற்கே ஏடிஎம் சேவைகள் விரைவில் கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பாதுகாப்பாக பணம் எடுக்க விரும்பும் மக்களுக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும். அதுபோக, வெளியே செல்ல முடியாத முதியோர், நோயால் அவதிப்படுவோருக்கும் மிக உதவிகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

விதிமுறைகள் என்ன?

விதிமுறைகள் என்ன?

எஸ்பிஐ கடந்த ஜூலை 1 முதல் புதிய ஏடிஎம் விதிகளை அமல்படுத்தியுள்ளது. இந்த விவரங்கள் எஸ்பிஐ தளத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. மெட்ரோ நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எட்டு முறை இலவசமாக ஏடிஎம்களில் இலவசமாக பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்களிலும், 3 முறை மற்ற ஏடிஎம்களிலும் பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். இதே மெட்ரோ அல்லாத நகரங்களில் 10 முறை இலவசமாக பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். இதில் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்களிலும், 5 முறை மற்ற ஏடிஎம்களிலும் பணத்தினை எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI’s launched doorstep mobile ATM services to near your house

SBI ATM services.. SBI launches doorstep mobile ATM services to near your house
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?