எஸ்பிஐ-ன் இந்த அட்டகாசமான ஆஃபர்.. விரைவில் முடியப்போகுது.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் முன்னணி கடன் வழங்குனரான எஸ்பிஐ அவ்வப்போது பல சலுகைகளை வாரி வழங்கும். குறிப்பாக வீட்டுக் கடனுக்கான சலுகை அறிவிக்கும். அப்படி தான் கடந்த அக்டோபர் 4ம் தேதி ஒரு சலுகையினை அறிவித்திருந்தது.

 

இந்த சலுகையானது தற்போது வரையில் அமலில் உள்ளது. இது ஜனவரி 31 தான் கடைசி தேதியாகவும் அறிவிக்கப்பட்டது.

வீட்டுக் கடன் வாங்க விரும்புபவர்கள் இந்த சலுகை மூலம், இந்த பண்டிகை கால கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமை இயங்கும் எஸ்பிஐ வங்கி கிளை.. நிஜமாவா..? ஞாயிற்றுக்கிழமை இயங்கும் எஸ்பிஐ வங்கி கிளை.. நிஜமாவா..?

30 அடிப்படை புள்ளிகள் வட்டி

30 அடிப்படை புள்ளிகள் வட்டி

அதெல்லாம் சரி, இந்த சலுகையின் கீழ் என்னென்ன சலுகை எல்லாம் கிடைக்கும்? வாருங்கள் பார்க்கலாம்

இந்த பண்டிகை கால கடன் திட்டத்தில் எஸ்பிஐ 0.15% - 0.30% வரையில் வட்டி சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

நல்ல சான்ஸ்

நல்ல சான்ஸ்

ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை உயர்த்தி வரும் நிலையில், இது வங்கிகளை கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த வழிவகுத்துள்ளது. எனினும் இந்த காலகட்டத்திலும் குறைந்த வட்டியில் கடன் வாங்க, இது ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

அடமான கடனுக்கான வட்டி
 

அடமான கடனுக்கான வட்டி

எஸ்பிஐ வங்கியில் குறைந்தபட்சம் வட்டி விகிதம் அடமான கடனுக்கு 8.40% ஆகும். மேற்கொண்டு இந்த சலுகையில் செயல்பாட்டு கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது வீட்டுக் கடன், டாப் அப் கடன் என இரண்டுக்கும் பொருந்தும் எனலாம். எப்படியிருப்பினும் இந்த கடனுக்கான வட்டி விகிதம் என்பது வாடிககையாளர்களின் சிபில் ஸ்கோரினை பொறுத்து மாறுபடலாம்.

சிபில் நன்றாக இருந்தால்

சிபில் நன்றாக இருந்தால்

உங்களது கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருக்கும் பட்சத்தில், உங்களது வட்டி விகிதம் குறைவாக இருக்கலாம். வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர் விகிதமானது 800-க்கு மேல் இருந்தால் வட்டி விகிதம் 8.40% ஆக குறையலாம். இந்த வட்டி விகிதம் 8.65 ஆக உள்ளது எனில் 25 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடி செய்யப்பட்டு 8.40% ஆக கிடைக்கும். இதே 700 - 749 ஆக சிபில் இருந்தால், 8.55% ஆக வட்டி விகிதம் கிடைக்கலாம்.

700 கீழாக சிபில் இருந்தால்

700 கீழாக சிபில் இருந்தால்

இதே 700-க்கு கீழாக சிபில் இருந்தால் 8.85% ஆகவும், 650 - 699 ஆக இருந்தால் 9.05% ஆகவும் வட்டி விகிதம் கிடைக்கலாம். இதே சிபில் இல்லாதவர்கள் NTC, இருந்தால் வட்டி விகிதம் 8.75% ஆகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 முன் கூட்டியே திட்டமிடனும்

முன் கூட்டியே திட்டமிடனும்

எஸ்பிஐ-யின் இந்த அறிவிப்பானது கிறிஸ்துமஸ், புத்தாண்டு என இந்த காலகட்டத்திலும் பலனடைய வழிவகுத்துள்ளது. எனினும் ஜனவரி 31 வரையில் மட்டுமே இந்த சலுகை என்பதால், இதனை பெற விரும்பினால் வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே அதற்கு திட்டமிட வேண்டும். இல்லையேல் வழக்கமாக கூடுதல் வட்டியே செலுத்த வேண்டியிருக்கும். ஆக மாத தவணையிலும் கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கும்.

இது சரியான வாய்ப்பு

இது சரியான வாய்ப்பு

தற்போது ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. இந்த போக்கு இன்னும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதனால் வங்கிகள் மேற்கோண்டு வட்டி விகிதத்தினை வீட்டுக் கடனுக்கு அதிகரிக்கலாம். ஆக இது சரியான வாய்ப்பு எனலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sbi எஸ்பிஐ
English summary

SBI's special home loan offer scheme: check here full details

SBI announced special home loan offer on October 4, 2022. This offer is valid till now. It was also announced that January 31 was the last date.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X