சம்பளதாரர்கள் கணக்கிற்கு எஸ்பிஐ-யிலுள்ள சலுகைகள்.. மிஸ் பண்ணிடாதீங்க.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதம் தவறாமல் ஊதியம் பெறும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐயின் சம்பள கணக்கினை தொடங்கலாம். பொதுவாக நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த ஊதிய கணக்கினை தொடங்கிக் கொடுப்பது வழக்கம்.

வங்கிகளில் இந்த ஊதிய கணக்கிற்கு மினிமம் பேலன்ஸ் என்பது தேவையில்லை. இது தவிர இன்னும் பல சலுகைகளை இந்த கணக்கின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

 ரிஸ்க் இல்லா 5 முதலீடுகள்.. நிச்சயம் லாபம் கிடைக்கும்..! ரிஸ்க் இல்லா 5 முதலீடுகள்.. நிச்சயம் லாபம் கிடைக்கும்..!

அந்த வகையில் இன்று எஸ்பிஐயின் சம்பள கணக்கில் எந்த மாதிரியான சலுகைகள் உள்ளது என்பதை பற்றித் தான் பார்க்கவிருக்கின்றோம்.

என்னென்ன வசதிகள்

என்னென்ன வசதிகள்

இந்த சம்பள கணக்கிலும் மற்ற சேமிப்பு கணக்குகளை போல ஏடிஎம், காசோலை வசதி, ஆன்லைன் வங்கி என பலவும் இருக்கும். எனினும் இந்த சம்பள கணக்கில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் சம்பளம் கிடைக்கவில்லை எனில், மற்ற சேமிப்பு கணக்குகளை போல சேமிப்பு கணக்காக தொடர வேண்டும்.

இன்சூரன்ஸ் உண்டு

இன்சூரன்ஸ் உண்டு

பொதுவாக சம்பள கணக்கு என்றாலே அதில் குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை என்பது தான் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதோடு இன்னும் சில சலுகைகளும் கிடைக்கும். குறிப்பாக எஸ்பிஐயில் இந்த சம்பள கணக்கு இருந்தால், இதற்கு இன்சூரன்ஸ் சலுகையும் கிடைக்கும்.

விபத்து பலன்

விபத்து பலன்

குறிப்பாக விபத்து காப்பீடு மூலம் எஸ்பிஐ சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரையில் க்ளைம் செய்து கொள்ள முடியும். அதோடு தனி நபர் கடன், வீட்டுக் கடன், கார் கடன், கல்விக் கடன் போன்றவற்றில் சில சலுகைகள் கிடைக்கும்.

ஏர் ஆக்சிடண்ட் பலன்

ஏர் ஆக்சிடண்ட் பலன்

எஸ்பிஐயின் அதிகாரபூர்வ இணையதளமான sbi.co.inன் படி, சம்பள கணக்கு வாடிக்கையாளர் ஏர் ஆக்சிடண்ட் மூலம் இறந்தால், 30 லட்சம் ரூபாய் வரையில் க்ளைம் செய்து கொள்ள முடியும். உண்மையில் இது வாடிக்கையாளர்களுக்கு மிக நல்ல விஷயமே. ஏனெனில் சம்பளதாரர் இல்லாவிட்டாலும், நிதி ரீதியாக இது அவரது குடும்பத்தினருக்கும் மிக உதவிகரமாக இருக்கும்.

கடனில் சலுகைகள்

கடனில் சலுகைகள்

தனி நபர் கடன், வீட்டு கடன், கார் கடன், கல்விக் கடன் என பல வற்றிலும் சலுகைககள் உண்டு. குறிப்பாக கடன் செயல்பாட்டுக் கட்டணத்தில் 50% தள்ளுபடி உண்டு. இது தவிர ஓவர்டிராப்ட் வசதியும் உண்டு. இதன் மூலம் இரண்டு மாத சம்பளத்தினை பெற முடியும்.

லாக்கர் கட்டணம் தள்ளுபடி

லாக்கர் கட்டணம் தள்ளுபடி

இது தவிர எஸ்பிஐ சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு லாக்கர் கட்டணத்தில் 25% வரை தள்ளுபடி உண்டு. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் உங்களது சம்பளத்தினை பொறுத்து இந்த சேமிப்பு கணக்கு தொடங்கப்படும். சம்பள கணக்கிலேயே நான்கு வகையான கணக்குகள் உள்ள நிலையில், அதனை பொறுத்து சில சலுகைகள் மாறும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI salary account benefits that you can't afford to miss

SBI latest updates.. SBI salary account benefits that you can't afford to miss
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X