எஸ்பிஐ-யில் இப்படி ஒரு சூப்பர் ஸ்கீம் இருக்கா.. இது நல்ல விஷயமாச்சே.. மிஸ் பண்ணிடாதீங்க..!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த கடன் வழங்குனரான எஸ்பிஐ, வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு தொடர்ந்து பல நல்ல விஷயங்களை அறிவித்து வருகிறது.

இது உண்மையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் எஸ்பிஐ-யில் உள்ள SBI Savings plus Account பற்றித் தான் தெரிந்து கொள்ள போகிறோம். இது எந்த மாதிரி அதன் வாடிக்கையாளர்களுக்கு நல்ல விஷயங்களை கொடுத்து வருகிறது. இது எப்படி வாடிக்கையாளர்களுக்கு பலனை அளிக்கிறது என்று. வாருங்கள் பார்க்கலாம்.

எஸ்பிஐ சேவிங்ஸ் பிளஸ்

எஸ்பிஐ சேவிங்ஸ் பிளஸ்

எஸ்பிஐ சேமிப்பு கணக்கு திறக்க தகுதியுள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், எஸ்பிஐ சேவிங்ஸ் பிளஸ் (Savings Plus) என்ற கணக்கை வழங்குகிறது. இந்த வங்கி கணக்கில் வாடிக்கையாளர்களின் உபரி பணம் தானாகவே நிரந்தர வைப்பாக (fixed deposits FD) மாறிவிடும். இது தான் இந்த கணக்கின் மிகப்பெரிய பிளஸ் பாயின்டே.

விவரங்கள் இதோ?

விவரங்கள் இதோ?

அதுமட்டும் அல்ல, எஸ்பிஐ நிரந்தர வைப்புக்கான வட்டி விகிதம், இந்த உபரி வைப்புக்கு கிடைக்கும். எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கு குறித்த விவரங்கள், https://sbi.co.in/web/personal-banking/accounts/saving-account/savings-plus-account என்ற பக்கத்தின் மூலம் அறியலாம். மற்ற சேமிப்பு கணக்குகளில் கிடைக்கும் அதே சலுகைகள் இதிலும் கிடைக்கும்.

கடன் தொகையும் பெறலாம்

கடன் தொகையும் பெறலாம்

எஸ்பிஐயின் மல்டி ஆப்ஷன் வைப்பு திட்டத்தின் கீழ் உள்ள எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஒருவருடைய வைப்பு குறிப்பிட்ட வரம்புக்கு மேலே தானாக நிரந்தர வைப்பாக மாறிவிடும். அதுமட்டும் அல்ல இந்த மல்டி ஆப்ஷன் வைப்பு திட்டத்தின் கீழ் ஒருவர் கடனும் வாங்கிக்கொள்ள முடியும்.

எவ்வளவு எஃப்டி

எவ்வளவு எஃப்டி

எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு 35,000 ரூபாயாக இருக்க வேண்டும். அப்படியென்றால் ஆரம்ப குறைந்தபட்ச உபரி தொகை ரூபாய் 10,000 ஆக இருக்க வேண்டும், அது தானாக எஸ்பிஐ எப்டி ஆக மாறிவிடும். அதிலிருந்து கூடுதல் 1,000 ரூபாய் எஸ்பிஐ எப்டி ஆக மாறிவிடும்.

இப்படித்தான் செயல்படுகிறது?

இப்படித்தான் செயல்படுகிறது?

உதாரணத்திற்கு உங்களது எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் வங்கி கணக்கில் 35,000 ரூபாய் இருக்கிறதென்றால், 10,000 ரூபாய் தானாக எப்டி ஆக மாறிவிடும். அதன் பிறகு நீங்கள் 1,500 ரூபாயினை உங்கள் எஸ்பிஐ சேவிங்ஸ் பிளஸ் கணக்கில் செலுத்தினால், 1,000 ரூபாய் எஸ்பிஐ எப்டியில் சேர்ந்து விடும். மீதம் உள்ள 500 ரூபாய் உங்கள் சேமிப்பு கணக்கிலேயே இருக்கும்.

இப்படித்தான் செயல்படுகிறது?

இப்படித்தான் செயல்படுகிறது?

உதாரணத்திற்கு உங்களது எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் வங்கி கணக்கில் 35,000 ரூபாய் இருக்கிறதென்றால், 10,000 ரூபாய் தானாக எப்டி ஆக மாறிவிடும். அதன் பிறகு நீங்கள் 1,500 ரூபாயினை உங்கள் எஸ்பிஐ சேவிங்ஸ் பிளஸ் கணக்கில் செலுத்தினால், 1,000 ரூபாய் எஸ்பிஐ எப்டியில் சேர்ந்து விடும். மீதம் உள்ள 500 ரூபாய் உங்கள் சேமிப்பு கணக்கிலேயே இருக்கும்.

அபராதம் கிடையாது?

அபராதம் கிடையாது?

இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில், எஸ்பிஐ சேவிங்ஸ் பிளஸ் கணக்கில் 25,000 ரூபாய்க்கும் கீழே இருப்பு வைத்திருந்தாலும் வாடிக்கையாளர்களிடன் அபராதம் வசூலிக்கப்படாது. எஸ்பிஐ சேவிங்ஸ் பிளஸ் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு (minimum balance) தேவையில்லை. எஸ்பிஐ சேமிப்பு கணக்கை போல, எஸ்பிஐ சேவிங்ஸ் பிளஸ் கணக்கிற்கும் வாடிக்கையாளர்கள் னெட் பேங்கிங் வசதி மொபைல் வங்கி, ஏடிஎம் அட்டை மற்றும் மெயில் அலர்ட் ஆகிய வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இது நல்ல விஷயம் தான்

இது நல்ல விஷயம் தான்

ஆக நீங்கள் எஸ்பிஐ சேமிப்பு கணக்கு வைப்பு மூலம் அதிக பணம் ஈட்ட வேண்டும் என நினைத்தால் எஸ்பிஐ சேவிங்ஸ் பிளஸ் கணக்கு ஒரு நல்ல தேர்வு தான். இதில் பழைய விஷயம் தான் என்றாலும் இன்றளவிலும் பலருக்கு தெரியாமல் தான் உள்ளது. நிச்சயம் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு உதவும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+