ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) அனைத்து வகையான முதலீட்டாளர்களுக்கும் ஏற்ற பல பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு.. பொது வாடிக்கையாளர்களை விட அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகிறது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலகட்டங்களில் பிக்சட் டெபாசிட்கள் வழங்கப்படுகிறது.
SBI அம்ரித் விருஷ்டி: SBI பேங்க் அம்ரித் விருஷ்டி என்ற சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். 444 நாட்கள் கொண்ட இந்த FD திட்டத்திற்கு மூத்த குடி மக்களுக்கு 7.75 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ. 1 லட்சம், ரூ. 2 லட்சம் மற்றும் ரூ. 3 லட்சத்தை முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

ரூ. 1 லட்சம் முதலீடு: 60 வயதைக் கடந்த ஒரு முதியவர் எஸ்பிஐ-இன் அம்ரித் விருஷ்டி திட்டத்தில் ரூ. 1 லட்சத்தை முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 444 நாட்கள். 7.75% வட்டியில் ரூ. 1 லட்சம் முதலீட்டுக்கு ரூ. 9,930 வட்டி கிடைக்கும். முதிர்வில் 1,09,930 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
ரூ. 2 லட்சம் முதலீடு: எஸ்பிஐ-இன் அம்ரித் விருஷ்டி திட்டத்தில் ஒருவர் ரூ. 2 லட்சத்தை முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 444 நாட்கள் கழித்து 7.75% வட்டியில் ரூ. 2 லட்சம் முதலீட்டுக்கு ரூ. 19,859 வட்டி கிடைக்கும். முதிர்வில் 2,19,859 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
ரூ. 3 லட்சம் முதலீடு: எஸ்பிஐ-இன் அம்ரித் விருஷ்டி திட்டத்தில் ஒருவர் ரூ. 3 லட்சத்தை முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 444 நாட்கள் கழித்து 7.75% வட்டியில் ரூ. 3 லட்சம் முதலீட்டுக்கு ரூ. 29,789 வட்டி கிடைக்கும். முதிர்வில் 3,29,789 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
1 வருட பிக்சட் டெபாசிட்: ஸ்பெஷல் FD திட்டங்களை தவிர பிற திட்டங்களையும் எஸ்பிஐ வழங்குகிறது. 1 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு மூத்த குடிமக்களுக்கு 7.30 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
ரூ.1 லட்சம் முதலீடு: மூத்த குடிமக்கள் ரூ.1 லட்சத்தை 1 வருடத்திற்கு முதலீடு செய்தால் வட்டியாக 7,502 ரூபாயை பெறலாம். முதிர்வில் 1,07,502 ரூபாய் கிடைக்கும்.
ரூ.2 லட்சம் முதலீடு: மூத்த குடிமக்கள் ரூ.2 லட்சத்தை 1 வருடத்திற்கு முதலீடு செய்தால், 7.30 சதவீத வட்டி விகிதத்தில், வட்டியாக 15,005 ரூபாயை பெறலாம். முதிர்வில் 1,15,005 ரூபாய் கிடைக்கும்.
ரூ.3 லட்சம் முதலீடு: மூத்த குடிமக்கள் ரூ.3 லட்சத்தை 1 வருடத்திற்கு முதலீடு செய்தால், 7.30 சதவீத வட்டி விகிதத்தில், வட்டியாக 22,507 ரூபாயை பெறலாம். முதிர்வில் 1,22,507 ரூபாய் கிடைக்கும்.
5 வருட பிக்சட் டெபாசிட்: 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
ரூ.1 லட்சம் முதலீடு: மூத்த குடிமக்கள் ரூ.1 லட்சத்தை 5 வருடத்திற்கு முதலீடு செய்தால் வட்டியாக 7,714 ரூபாயை பெறலாம். முதிர்வில் 1,07,714 ரூபாய் கிடைக்கும்.
ரூ.2 லட்சம் முதலீடு: மூத்த குடிமக்கள் ரூ.2 லட்சத்தை 5 வருடத்திற்கு முதலீடு செய்தால், 7.50 சதவீத வட்டி விகிதத்தில், வட்டியாக 15,427 ரூபாயை பெறலாம். முதிர்வில் 1,15,427 ரூபாய் கிடைக்கும்.
ரூ.3 லட்சம் முதலீடு: மூத்த குடிமக்கள் ரூ.3 லட்சத்தை 5 வருடத்திற்கு முதலீடு செய்தால், 7.50 சதவீத வட்டி விகிதத்தில், வட்டியாக 23,141 ரூபாயை பெறலாம். முதிர்வில் 1,23,141 ரூபாய் கிடைக்கும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications