மூத்த குடிமக்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் கிடைப்பது அவசியம். ஓய்வுக்குப் பிறகு தங்களுடைய செலவுகளை தங்களால் சமாளிக்கக்கூடிய நிலை ஏற்பட்டு விட்டால் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்த தேவைக்கு ஏற்ப பல்வேறு பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. இது வழக்கமான பிக்சட் டெபாசிட்ட்களுடன் ஒப்பிடும்போதும் பாதுகாப்பையும் அதிக வட்டி விகிதங்களையும் உறுதி செய்கிறது.
இவற்றில் SBI வழங்கும் சிறப்பு திட்டங்களான அம்ரித் விருஷ்டி மற்றும் அம்ரித் கலாஷ் போன்ற பிக்சட் டெபாசிட் திட்டங்களும் அடங்கும். இது மட்டுமின்றி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 1 ஆண்டு பிக்சட் டெபாசிட், 3 ஆண்டு பிக்சட் டெபாசிட் மற்றும் 5 ஆண்டு பிக்சட் டெபாசிட் என பல்வேறு பிக்சட் டெபாசிட் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. இந்தப் பதிவில் ரூ.6 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பதைப் பார்ப்போம்.

வட்டி விகிதங்கள்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) 444 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட அம்ரித் விருஷ்டி பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதேபோல 3 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு 7.25% வட்டியும், 5 வருட பிக்ஸட் டெபாசிட்களுக்கு 7.50 சதவீத வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது.
அம்ரித் விருஷ்டி திட்டத்தில் ரூ.6 லட்சம், ரூ.12 லட்சம் மற்றும் ரூ.18 லட்சத்தை முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?:
ரூ.6 லட்சம் முதலீடு: SBI அம்ரித் விருஷ்டி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7.75% வட்டி விகிதத்தில் ரூ.6 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் அதற்கு வட்டியாக ரூ.58,722.25 கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை ரூ.6,58,722.25 ரூபாய் கிடைக்கும்.
ரூ.12 லட்சம் முதலீடு: 7.75% வட்டி விகிதத்தில், SBI அம்ரித் விருஷ்டி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் ரூ. 12 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் அதற்கு வட்டியாக ரூ.1,17,444.50. இதன் மூலம் 444 நாட்கள் கழித்து ரூ.13,17,444.50 பெற்றுக் கொள்ளாலாம்.
ரூ.18 லட்சம் முதலீடு: SBI அம்ரித் விருஷ்டி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7.75% வட்டி விகிதத்தில் ரூ.18 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் அதற்கு வட்டியாக ரூ.1,76,166.76 கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை ரூ.19,76,166.76 கிடைக்கும்.
மற்ற பாரம்பரிய 1 வருட பிக்சட் டெபாசிட், 3 வருட பிக்சட் டெபாசிட், 5 வருட பிக்சட் டெபாசிட்களோடு ஒப்பிடுகையில் இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டம் குறுகிய காலத்தில் அதிக வருவாயை வழங்குகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications