முதியோர்கள் தங்கள் வாழ்க்கையில் பல சவால்களைச் சந்திக்கின்றனர். இதில் நிதி நிலையும் ஒரு முக்கியமான காரணி. ஓய்வு பெற்ற பின்னர் நிலையான வருமானம் இல்லாமல் இருப்பது பலருக்கும் கவலை அளிக்கும் ஒன்றாக இருக்கும். இந்த நிலையில் முதியோர்கள் தங்களின் நிதி நிலையை மேம்படுத்தவும், எதிர்காலத்திற்காக திட்டமிடவும் பல்வேறு முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்யலாம். இந்தப் பதிவில் 5 லட்ச ரூபாய் SBI பேங்க் பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் வரும்? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
பிக்சட் டெபாசிட்கள் பல முதியோர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முக்கிய காரணம் இதில் வழங்கப்படும் உத்தரவாதமான வருமானம். அதனால் தான் நிறைய மூத்த குடிமக்கள் FD-களில் முதலீடு செய்கின்றனர். இதில் மொத்தமாக முதலீடு செய்து விட்டு மாதம் வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம். வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. SBI போன்ற பல்வேறு வங்குகளும் வெவ்வேறு காலகட்டங்களில் FD திட்டங்களை வழங்கி வருகிறது.

மூத்த குடிமக்களுக்காக SBI அம்ரித் கலாஷ் என்ற பெயரில், 1 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு FD திட்டங்களை வாழங்குகிறது. அனைத்து அம்ரித் கலாஷ் SBI FD-களிலும், 7.75 சதவீதம் என்ற அதிகபட்ச வட்டி வழங்கப்படுகிறது.
SBI பேங்கில் மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட்களில் 1 வருடத்திற்கு 7.30 சதவீத வட்டியும், 3 வருடத்திற்கு 7.25 சதவீத வட்டியும், 5 வருடத்திற்கு 7.50 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
1, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு எஸ்பிஐ மூத்த குடிமக்கள் எஃப்டி திட்டங்களில் ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் என்பதைப் பார்ப்போம்.
1 வருட SBI மூத்த குடிமக்கள் FD திட்டம்: 1 வருட SBI மூத்த குடிமக்கள் FD திட்டத்திற்கு 7.30 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் ரூ. 37,511 வட்டி கிடைக்கும். அப்படியானால் முதிர்வுத் தொகையாக ரூ. 5,37,511 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.
3 வருட SBI மூத்த குடிமக்கள் FD திட்டம்: 3 வருட SBI மூத்த குடிமக்கள் FD திட்டத்திற்கு 7.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் ரூ. 1,20,273 வட்டி கிடைக்கும். அப்படியானால் முதிர்வுத் தொகையாக ரூ. 6,20,273 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.
5 வருட SBI மூத்த குடிமக்கள் FD திட்டம்: 5 வருட SBI மூத்த குடிமக்கள் FD திட்டத்திற்கு 7.50 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் ரூ. 2,24,974 வட்டி கிடைக்கும். அப்படியானால் முதிர்வுத் தொகையாக ரூ.7,24,974 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.
மேலே கூறப்பட்டுள்ள விவரங்கள் 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற தகவல் மட்டுமே. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்க சொல்லவில்லை. எந்த ஒரு திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன்பு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications