இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இலவச டெபிட் கார்டு பயன்பாட்டு அளவை பாதியாக குறைத்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் வங்கிகள் டெபிட் கார்டு அளிக்கிறது.
இந்த டெபிட் கார்டு பயன்பாடுத்துவதில் நகரம், கிராம், கணக்கு வகைகளின் அடிப்படையில் இலவச பயன்பாட்டு முறை நிர்ணயம் செய்யப்படுகிறது. இப்படி சம்பள கணக்கிற்கு கொடுக்கப்படும் இலவச டெபிட் கார்டு பயன்பாட்டு முறையை பாதியாக குறைந்துள்ளது. மேலும் இப்புதிய நடைமுறை ஆக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

எஸ்பிஐ வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி சம்பள கணக்கு வைத்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், தங்களுடைய இலவல டெபிட் கார்டு பயன்பாட்டு எண்ணிக்கையில் 10ல் இருந்து 5 ஆக குறைக்கப்பட உள்ளது.
இது சம்பள கணக்கின் வகை, நகரம் - கிராம் என எவ்விதமான வித்தியாசமும் இல்லாமல் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
மேலும் இந்த 5 முறை இலவச பயன்பாட்டு முறையில் பணம் எடுப்பது, பாஸ்வோர்டு மாற்றுவது, பேலென்ஸ் செக் செய்வது என அனைத்து பயன்பாடுகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் 5 முறை இலவச பயன்பாட்டு முறை முடிந்த பின்பு ஒருவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் 23 ரூபாய் கட்டணம் + அதற்கான ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும். இதுவே பாஸ்வோர்டு மாற்றுவது, பேலென்ஸ் செக் செய்வது போன்ற நிதியியல் அல்லாத பரிவர்த்தனை முறையை பயன்படுத்தினால் 11 ரூபாய் + ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும் (5 முறை இலவச பயன்பாட்டு முடிந்த பின்பு).
இந்த கட்டணங்கள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய கட்டண முறைகளாகும். எஸ்பிஐ வங்கி நிர்வாகம் பெரும்பாலான கணக்குகளின் ஏடிஎம் பயன்பாட்டு முறை எண்ணிக்கையை மாற்றியிருந்தாலும், சம்பள கணக்கிற்கு அளிக்கப்பட்டு வரும் சேவையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு மாற்றப்பட்டு உள்ளது.
மேலும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இலவசமாக ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க வேண்டுமாயின் Cardless withdrawal முறையை பயன்படுத்தலாம், இது தொடர்ந்து இலவசமாகவே அளிக்கப்பட்டு வருகிறது. இந்த Cardless சேவை ஏடிஎம் மற்றும் டெபாசிட் இயந்திரம் என இரண்டிலுமே இருக்கும் காரணத்தால் மக்கள் YONO SBI செயலியை பயன்படுத்தி எளிதாக பணத்தை எடுக்கலாம்.
எப்படி Cardless withdrawal முறை பயன்படுத்துவது?
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் YONO SBI செயலியைத் திறக்கு. லாக்கின் செய்த உடன் முதல் பக்கத்தில் YONO Cash என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் ATM என்ற பிரிவைக் கிளிக் செய்து, நீங்கள் எடுக்க விரும்பும் தொகையை கொடுக்கவும், குறைந்தபட்சம் 500 ரூபாய் கொடுக்க வேண்டும். அதன்பின் உங்களுக்கான 6 இலக்க YONO Cash PIN எண்ணை நீங்கள் உருவாக்க வேண்டும்.
இறுதியாக உங்களுடைய வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு Transaction Reference Number எஸ்எம்எஸ் ஆக வரும். இதுதான் முக்கியம்.
அடுத்தாக அருகில் இருக்கும் SBI ATMக்குச் சென்று, இதில் YONO Cash என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் மொபைலுக்கு வந்த Transaction Reference Number எண்ணையும், அதற்கான பாஸ்வோர்டு-ஐயும் டைப் செய்ய வேண்டும். நீங்கள் கொடுத்த விபரம் உறுதி செய்யப்பட்ட பின்பு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications