SBI கிரீன் டெபாசிட்டில் ரூ.2.5 லட்ச முதலீட்டுக்கு எவ்வளவு லாபம்? அடேங்கப்பா அசத்தல் ரிட்டன்ஸ்! வாவ்!

ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட்கள் உண்மையில் மக்களுக்கு குறுகிய காலத்தில் சிறந்த வருமானத்தை வழங்கக் கூடியவை. ஆனால் அவற்றில் முதலீடு செய்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதுபோன்ற ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட்களுக்கு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதமும் சற்று அதிகமாக தான் இருக்கும். அந்த வகையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் (SBI) கிரீன் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்தை வழங்குகிறது.

இந்தப் பதிவில் SBI கிரீன் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் ரூ.2.50 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.7.50 லட்சம் மற்றும் ரூ.10 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தால் எவ்வளவு முதிர்வு தொகை கிடைக்கும்? என்பதை விரிவாகப் பார்ப்போம்.

SBI கிரீன் டெபாசிட்டில் ரூ.2.5 லட்ச முதலீட்டுக்கு எவ்வளவு லாபம்? அடேங்கப்பா அசத்தல் ரிட்டன்ஸ்! வாவ்!

SBI கிரீன் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் கீழ் 3 முதிர்வு காலங்களில் முதலீடு செய்ய முடியும். அவை 1111 நாட்கள் கொண்ட FD, 1777 நாட்கள் கொண்ட FD, மற்றும் 2222 நாட்கள் கொண்ட FD.

SBI கிரீன் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் என்ன?: SBI ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டமானது சில்லரை பிக்சட் டெபாசிட்களுக்கும், பல்க் டெபாசிட்களுக்கும் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகிறது. ரூ.3 கோடி வரையிலான சில்லறை பிக்சட் டெபாசிட்களுக்கு 1111 நாட்கள் மற்றும் 1777 நாட்கள் கொண்ட திட்டங்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 6.65 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதே போல 2222 நாட்கள் கொண்ட FD திட்டத்திற்கு 6.15 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

1111 நாட்கள் கொண்ட பிக்சட் டெபாசிட்கள் மற்றும் 1777 நாட்கள் கொண்ட பல்க் டெபாசிட்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 6.40% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 2222 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட பல்க் பிக்சட் டெபாசிட்களுக்கு 6.15 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?: இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இல்லை. எனவே எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

2.50 லட்சம், 5 லட்சம், 7.50 லட்சம் மற்றும் 10 லட்ச ரூபாய் முதலீட்டுக்கு எவ்வளவு லாபம்?:

1777 நாட்கள்: பொது வாடிக்கையாளர்கள் 1777 நாட்கள் கொண்ட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 2.50 லட்சம், 5 லட்சம், 7.50 லட்சம் மற்றும் 10 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

1777 நாட்கள் கொண்ட பிக்சட் டெபாசிட்-இன் வட்டி விகிதம் 6.65 சதவீதம் என்பதால், இத்திட்டத்தில் ரூ.2.50 லட்சம் முதலீட்டிற்கு முதிர்வுத் தொகையாக ரூ.3,44,658.46 கிடைக்கும்.

ரூ.5 லட்சம் முதலீட்டிற்கு முதிர்வுத் தொகை ரூ.6,89,316.92 ஆக இருக்கும்.

ரூ.7.50 லட்சம் முதலீட்டிற்கு முதிர்வுத் தொகை ரூ.10,33,975.39 ஆக இருக்கும்.

ரூ.10 லட்சம் முதலீட்டிற்கு முதிர்வுத் தொகை ரூ.13,78,633.85 ஆக இருக்கும்.

2222 நாட்கள்: பொது வாடிக்கையாளர்கள் 2222 நாட்கள் கொண்ட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 2.50 லட்சம், 5 லட்சம், 7.50 லட்சம் மற்றும் 10 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

2222 நாட்கள் கொண்ட பிக்சட் டெபாசிட்-இன் வட்டி விகிதம் 6.15 சதவீதம் என்பதால், இத்திட்டத்தில் ரூ.2.50 லட்சம் முதலீட்டிற்கு முதிர்வுத் தொகையாக ரூ.3,62,492.48 கிடைக்கும்.

ரூ.5 லட்சம் முதலீட்டிற்கு முதிர்வுத் தொகை ரூ.7,24,984.96 ஆக இருக்கும்.

ரூ.7.50 லட்சம் முதலீட்டிற்கு முதிர்வுத் தொகை ரூ.10,87,477.44 ஆக இருக்கும்.

ரூ.10 லட்சம் முதலீட்டிற்கு முதிர்வுத் தொகை ரூ.14,49,969.92 ஆக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+