பணத்தை அதிகம் வைத்துள்ளவர்கள் அந்த பணத்தை எங்கே முதலீடு செய்வது? அந்த பணத்தை எப்படி அதிகரிப்பது? என்பது குறித்த சிந்தனை செய்து கொண்டே இருப்பார்கள். சரியான சிறந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு குழப்பம் இருந்து கொண்டேதான் இருக்குகிறது. சிலர் அதிக பணத்தை குறைந்த வட்டி கொடுக்கும் வங்கிகளில் டெபாசிட் செய்வார்கள். அதனால் குறைந்த வட்டியே திரும்ப கிடைக்கிறது. எனவே அவர்களுக்கெல்லாம் நன்மை அளிக்கும் வகையில் எஸ்பிஐ வங்கி வரி சேமிப்பு திட்டம் சிறந்ததாக உள்ளது.
அந்த வகையில், எஸ்பிஐ-ன் 5 ஆண்டு வரி சேமிப்பு எஃப்டி (SBI 5 வருட Tax Saver FD) உங்கள் டெபாசிட்களுக்கு உத்தரவாதமான வருமானம் மற்றும் வரி விலக்கு அளிக்கிறது. இந்த எஸ்பிஐ வரி சேமிப்பு திட்டம் ஆனது உறுதியான வருமானம் மற்றும் டெபாசிட்டுகளுக்கு வரிவிலக்கு அளிக்கும் திட்டமாகும். இந்த எஃப்டியில் ஒருவர் டெபாசிட் செய்யும் போது, ஒரு நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் வரை வரி சலுகை பெறுகிறார். இந்த எஃப்டிக்கான லாக்-இன் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இது தனிநபர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 5 வருட கால அடிப்படையில் வழங்குகிறது.

இந்த திட்டத்தில் எஸ்பிஐ ஆனது, பொது வைப்பாளர்களுக்கு 5 வருட எஃப்டிக்கான வட்டி விகிதம் ஆண்டுதோறும் 6.50 சதவீதமாக ஆகவும்,மூத்த குடிமக்களுக்கு வங்கி 7.50 சதவீத வருடாந்திர வட்டியையும் வழங்குகிறது. இது 2 வகையான கணக்குகளை வழங்குகிறது. ஒன்று கால வைப்பு மற்றொன்று சிறப்பு கால டெபாசிட் கணக்குகள் ஆகும். இதில் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டு டெபாசிட் செய்யலாம். இந்த திட்டங்களில் குறைந்தபட்ச தொகையானது பொது வைப்பாளர்களுக்கு ரூ.1000 ஆகவும், அதன்பிறகு ரூ.100 ஆகவும், மூத்தகுடிமக்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10000 ஆகவும் உள்ளது.
SBI இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த எஃப்டி-களில் பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகளைப் பெற முடியும் என்றும், ஒரு நிதியாண்டில் அதிகபட்ச டெபாசிட் தொகை ரூ.1,50,000க்கு மேல் இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒருவர் மாதாந்திர, காலாண்டு அல்லது வருடாந்திர வட்டிக் கடனை வாங்கலாம். இதில் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், எஃப்டி வைத்திருப்பவர் டெபாசிட் செய்த நாளிலிருந்து ஐந்து வருடங்கள் காலாவதியாகும் முன், டெபாசிட் செய்பவர் இறந்தால் தவிர, டெபாசிட்டை பணமாக்க முடியாது.
இந்த 5 வருடம் எஃப்டி திட்டத்தில் பொது வைப்பாளர்கள் ரூ.1,00,000 முதலீடு செய்தால் வட்டி ரூ.38,042 கிடைக்கும். அதாவது வட்டியுடன் சேர்ந்து ரூ.1,38,042 ஆகவு திரும்ப கிடைக்கும். இதுவே, மூத்தகுடிமக்கள் முதலீடு செய்திருக்கும்போது அவர்களுக்கு வட்டி ரூ.44,995 கிடைத்திருக்கும். எனவே, அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக, ரூ.1,44,995 தொகை திரும்ப கிடைக்கும்.


Click it and Unblock the Notifications