நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த கடன் வழங்குனரான எஸ்பிஐ-யில் பெஞ்ச்மார்க் பிரைம் லெண்டிங் ரேட் (BPLR) விகிதமானது 0.70% அதிகரித்து, 14.85% ஆக அதிகரித்துள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது மார்ச் 15 முதல் அமலுக்கு வரவுள்ளது.
தற்போதைய BPLR விகிதமானது 14.15% ஆக உள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யில் அடிப்படை வட்டி விகிதம் என்பது 70 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம் 9.40%ல் இருந்து 10.10% ஆக அதிகரித்துள்ளது,
வீட்டுக் கடன் பாதிப்பில்லை
எஸ்பிஐ ஏற்கனவே கடந்த டிசம்பர் 15, 2022ல் அதன் பெஞ்ச்மார்க் விகிதத்தினை திருத்தம் செய்தது. எனினும் இதன் எம்.சி.எல். ஆர் விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆக இதன் காரணமாக வீட்டுக் கடன் என்பது பாதிக்கப்பட வாய்ப்பில்லை.
எம்.சி.எல்.ஆர் விகிதம் மாற்றமில்லை
எஸ்பிஐ-யின் எம்.சி.எல்.ஆர் விகிதம் என்பது கடந்த பிப்ரவரி 15, 2023ல் அதிகரிக்கப்பட்டது. தற்போது ஓவர் நைட் எம்.சி.எல், ஆர் விகிதமானது 7.95% ஆக உள்ளது. இதே மாத எம்.சி.எல், ஆர் விகிதமானது 8.10% ஆகவும், இதே 3 மாத எம்.சி.எல், ஆர் விகிதமானது 8.10% ஆகவும், இதே 6 மாத எம்.சி.எல், ஆர் விகிதமானது 8.40% ஆகவும் உள்ளது. இதே 1 வருடத்திற்கான எம்.சி.எல், ஆர் விகிதமானது 8.50% ஆகவும், 2 வருட மற்றும் 3 வருட எம்.சி.எல், ஆர் விகிதமானது முறையே 8.60% மற்றும் 8.70% ஆகவும் உள்ளது.
மிக கடினம்
இது ரிசர்வ் வங்கியானது கடந்த முறை ரெப்போ விகிதத்தினை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 6.50% ஆக அதிகரித்த நிலையில் வந்துள்ளது. இது கடந்த பிப்ரவரி 8 அன்று அதிகரிப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
SBI-ஐயின் இந்த அறிவிப்பின் மத்தியில் பிபிஎல்ஆருடன் இணைக்கப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்துவது முன்பை விட இப்போது கடினமாகியுள்ளது.
சுமை அதிகரிக்கலாம்
பெரும்பாலான நுகர்வோர் கடன்களின் வட்டி விகிதங்கள் BPLR-இன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆக எஸ்பிஐயின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, BPLR அடிப்படையில் கடன் வாங்கியவர்கள் வாங்குபவர்களின் இஎம்ஐ சுமை அதிகரிக்கும். கடன் வாங்குபவர்கள் இப்போது முன்பை விட அதிக வட்டி விகிதத்தில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.
வெளிப்படை தன்மை இருக்கணும்
பிபிஎல் ஆர் விகிதத்தினை கடந்த 2003ம் ஆண்டில் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இந்த வட்டி விகிதத்தினை வணிக வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கின்றனர். இந்த பெஞ்ச் மார்க் கடன் விகிதம் என்பது, வாடிக்கையாளர்களுக்கு ஒரு வெளிப்படைத் தன்மை என்பது இருக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு திட்டமாகும்.
இனியும் அதிகரிக்கலாம்
தற்போதைய காலகட்டத்தில் வங்கிகள் பெரும்பாலும் EBLR மற்றும் RLLR அடிப்படையிலேயே கடன் கொடுக்கின்றன. ஆக பழைய கடன் வாடிககையாளர்களே இந்த BPLR திட்டத்தின் அடிப்படையில் இருக்கலாம்.
எப்படியிருப்பினும் ஏப்ரல் 6ம் தேதி ரிசர்வ் வங்கி கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்த விகிதம் என்பது இன்னும் அதிகரித்தாலும் சொல்வதற்கில்லை. இதற்கிடையில் அடுத்த வாரத்தில் அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த கூட்டத்தில் 25 - 50 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிக்கலாம். இதன் காரணமாக ஆர்பிஐயும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications