ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து 6வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. குறிப்பாக வீட்டுக் கடன் வட்டி அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
குறிப்பாக ஏற்கனவே கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்கள், புதியதாக கடன் வாங்குபவர்கள் என பலருக்கும் வட்டி விகிதம் அதிகரித்திருக்கலாம். இதன் காராணமாக அவர்களின் மாத தவணை தொகையானது அதிகரிக்க வழிவகுத்துள்ளது. குறிப்பாக இதன் மூலம் வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு இது மாத தவணை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
என்னென்ன வங்கிகள்?
இந்த பட்டியலில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல வங்கிகளிலும் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. இவ்வங்கிகளின் வீட்டுக் கடன் வாங்கியோருக்கு எவ்வளவு மாத தவணை தொகையானது அதிகரித்திருக்கும். இதே புதிய வாடிக்கையாளர்கள் எவ்வளவு செலுத்த வேண்டியிருக்கும்? வாருங்கள் பார்க்கலாம்.
எவ்வளவு EMI அதிகரித்திருக்கலாம்?
25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதமானது அதிகரிப்பு என்பது 2 - 4% அதிகரிக்க வழிவகுக்கலாம். ஆக கடன் வாங்கியோர் தங்கள் கடன் தொகையில் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கலாம். அப்படி இல்லையேல் செலுத்தும் காலத்தினை கூடுதலாக்க வேண்டியிருக்கும் என நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
எஸ்பிஐ
எஸ்பிஐ-யில் உதாரணத்திற்கு ஒரு நபர் மே 2022ல் 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன், 10 ஆண்டு தவணையில் எடுத்துள்ளார் என வைத்துக் கொள்வோம். வட்டி விகிதம் 6.65% என வைத்துக் கொண்டால், மாத தவணையானது சுமார் 34,294 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கலாம். எனினும் இது பிப்ரவரி வட்டி அதிகரிப்புக்கு பிறகு வட்டி விகிதம் 9.15% ஆக அதிகரித்திருக்கலாம். இதன் காரணமாக மாத தவணையாக சுமார் 38,241 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஆக மாத தவணையானது 3953 ரூபாய் அதிகரித்திருக்கலாம்.
பேங்க் ஆப் பரோடா
மே 2022ல் ஒரு நபர் 30 லட்சம் ரூபாய் கடன் எடுத்துள்ளார் என வைத்துக் கொள்வோம். தவணை காலம் 10 ஆண்டுகள் என வைத்துக் கொண்டால், அவரின் அப்போதைய வட்டி விகிதம் 7% என்றால், மாத தவணையாபது 34,833 ரூபாயாக செலுத்தியிருப்பார். இது பிப்ரவரி வட்டி அதிகரிப்புக்கு பிறகு, 8.55% ஆக வட்டி அதிகரித்திருக்கலாம். இதன் மூலம் மாத தவணையானது 37,276 ரூபாயாக அதிகரித்திருக்கும். இதன் மூலம் மாத தவணையானது 2443 ரூபாய் அதிகரித்திருக்கலாம்.
பேங்க் ஆப் இந்தியா
பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் மே 2022ல் 30 லட்சம் ரூபாய் கடனை 10 ஆண்டு தவணையில் வாங்கியுள்ளார் என வைத்துக் கொள்வோம். அப்போதைய வட்டி விகிதம் 7% என வைத்துக் கொண்டால் அப்போது அவர் 34,833 ரூபாய் மாத தவணையாக செலுத்தியிருப்பார். இதே பிப்ரவரியில் வட்டி அதிகரிப்புக்கு பிறகு 9.35% ஆக வட்டி அதிகரித்திருக்கலாம். இதன் காரணமாக மாத தவணையானது 37,276 ரூபாயாக அதிகரித்திருக்கலாம். இதன் மூலம் மாத தவணையாப்னது 3740 ரூபாய் அதிகரித்திருக்கலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி
இதே பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி (RLLR) 9% ஆக அதிகரித்துள்ளது. மேல் 2022ல் 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் 10 ஆண்டு தவணையில் எடுத்துள்ள ஒருவர், 7% வட்டி என்றால், 34,833 ரூபாய் மாத தவணையாக செலுத்தியிருப்பார். இது தற்போது வட்டி அதிகரிப்புக்கு பிறகு 38,003 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாத தவணையானது 3740 ரூபாய் அதிகரித்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வட்டி (RLLR) 9.357% ஆக அதிகரித்துள்ளது. மேல் 2022ல் 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் 10 ஆண்டு தவணையில் ஒருவர் கடன் வாங்கியுள்ளார் என வைத்துக் கொள்வோம். அப்போது 7% வட்டி எனக் கொண்டால் 34,833 ரூபாய் மாத தவணையாக செலுத்தியிருப்பார். இது தற்போது வட்டி அதிகரிப்பு க்கு பிறகு 3170 ரூபாய் மாத தவணை அதிகரிக்கலாம்.
இனி என்ன செய்வது?
பெரும்பாலும் இந்த சமயத்தில் கடனை முடிந்த அளவுக்கு பகுதி தொகையினை முன் கூட்டியே செலுத்துவது சரியான தீர்வாக இருக்கும். அப்படி இல்லாவிடில் உங்களது மாத தவணை அதிகம் வந்தாலும் அப்படி செலுத்தி விடலாம். இல்லையெனில் உங்களது கடன்களுக்கான தவணை காலம் என்பது பெரியளவில் அதிகரிக்கலாம். நிபுணர்கள் பெரும்பாலும் கடனை முன் கூட்டியே செலுத்துவது தான் இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்க முக்கிய வழி என்றும் கூறுகின்றன
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications