நாம் எந்த வங்கிகளில் வங்கிக் கணக்கினை தொடங்கினாலும், அதற்கு குறைந்தபட்ச இருப்பு என்பது கட்டாயமாக உண்டும். எனினும் அனைவரும் வங்கிக் கணக்கு வேண்டும் என்பதனை ஊக்கப்படுத்தும் விதமாக சில வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால் பலர் பல ஆயிரம் ரூபாய்களையும் இழந்திருக்ககூடும். ஏனெனில் மினிமம் பேலஸினை சரியாக வங்கிக் கணக்கில் வைக்காவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்படும்.
இப்படி இருக்கையில் பெரியவர்கள் நமக்கே வங்கி கணக்கினை துவங்கி, அதில் மினிமம் பேலன்ஸினை வைக்க முடியாமல் தவிக்கும் நிலையில், குழந்தைகளுக்கு மினிமம் பேலன்ஸ் வைப்பது முடியாத காரியம். சொல்லப்போனால் இன்று நம்மில் பலரும் குழந்தைகளுக்கு எதற்காக வங்கிக் கணக்கு என்று விட்டு விடுகிறோம்.
குழந்தைகளுக்கான திட்டம்
ஆனால் இதனை ஊக்கப்படுத்தும் விதமாக எஸ்பிஐ ஒரு அதிரடி திட்டத்தினை வைத்துள்ளது. அது குழந்தைகளுக்கான உதவும் நோக்கில் எஸ்பிஐ ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டினை கொடுத்துள்ளது. அது SBI's Pehla Kadam and Pehli Udaan savings accounts. அதாவது பெஹ்லாகதம் மற்றும் பெஹ்லிஉதான் என்ற கணக்குகள் தான் இவை.
பல வசதிகள் உண்டு
இந்த வங்கிக் கணக்கானது குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தினை கற்றுக் கொடுக்கிறது. இதில் மினிமம் பேலன்ஸ் என்பது இல்லை. ஆக இது குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு திட்டமாக உள்ளது. இந்த குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கில் போட்டோ பதித்த ஏடிஎம் கார்டு, ஸ்வைப் வசதி மற்றும் இணைய வங்கி வசதி உள்ளிட்ட பல வசதிகளும் இந்த சேமிப்பு கணக்கில் உள்ளது.
இது பழைய திட்டம் தான்
இந்த திட்டம் பழையது என்றாலும், இன்றும் பலருக்கும் தெரிவதே இல்லை. இந்த திட்டமானது குழந்தைகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். ஆக குழந்தைகளுக்காக நீங்கள் வங்கி கணக்கு துவங்க நினைத்தால், இதனை விட சிறந்த ஆப்சன் வேறு இருக்க முடியாது.
இந்த கணக்கினை திறக்க தகுதி என்ன?
Pehla Kadam: பெஹ்லா கதம் குழந்தைகளுக்கான ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கினை துவங்க, மைனர் வயதுடைய எந்த குழந்தையும் இதற்கு தகுதியானவர்கள் தான். ஆனால் இந்த கணக்கினை பெற்றோர் அல்லது சரியான பாதுகாவலருடன் தான் திறக்க முடியும்.
Pehli Udaan: பெஹ்லா உதான் இந்த கணக்கினை 10 வயதிற்கு மேற்பட்ட மைனரின் பெயரில் துவங்க முடியும். அவர்கள் ஒரே மாதிரியாக கையெழுத்திட வேண்டும்.
எவ்வளவு பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம்?
பெஹ்லா கதம் மற்றும் பெஹ்லா உதான் ஆகிய இரு கணக்கிலுமே ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் வரை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இதே இணைய வங்கி அல்லது மொபைல் வங்கியில் 2000 ரூபாய் வரையிலும் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
இதன் மூலம் உங்களது பில்களை செலுத்திக் கொள்ள முடியும். அதோடு இண்டர்பேங்க்கிற்குள்ளேயே நெஃப்ட் வசதியும் உண்டு. மேலும் இதன் மூலம் டிடி-யும் எடுத்து கொள்ள முடியும்.
வட்டி எவ்வளவு?
இதில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், பெஹ்லா கதம் மற்றும் பெஹ்லாஉதான் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக பணம் வைத்திருந்தால் ஆண்டுக்கு 3.25 சதவீதம் வட்டி கிடைக்கும். இதுவே 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அதற்கு 3% வட்டி கிடைக்கும்.
எவ்வளவு பணம் எடுத்துக் கொள்ள முடியும்
பெஹ்லா கதம் கணக்கில் மூலம் குழந்தைகளின் புகைப்படம் பொறிக்கப்பட்ட ஏடிஎம் கார்டு மூலம் 5000 ரூபாய் வரையில் எடுத்துக் கொள்ள முடியும். இந்த கார்டில் குழந்தையின் பெயர் மற்றும் பாதுகாவலர் பெயர் இருக்கும்.
இதே பெஹ்லாஉதான் கணக்கிலும் 5000 ரூபாய் வரையில் நீங்கள் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இந்த ஏடிஎம் கார்டும் குழந்தையின் படத்துடன், அவரின் பெயர் பொறிக்கப்பட்டு இருக்கும்.
செக் புக் வசதியும் உண்டு
பெஹ்லா கதம் கணக்கிற்கு செக் புக் வசதியும் உண்டு. இதற்கு பாதுகாவலரின் பெயர் மற்றும் குழந்தையின் பெயர் இருக்கும். இதில் 10 காசோலைகள் இருக்கும்.
இதுவே பெஹ்லாஉதான் கணக்கில் குழந்தை ஒரே மாதிரியாக கையெப்பம் போட முடிந்தால், தனிப்பயனாக்கப்பட்ட 10 காசோலைகள் வழங்கப்படும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications