ஓய்வு காலத்திற்கு பிறகும் ஒவ்வொரு மாதமும் ஒரு கௌரவமான சம்பளம், உங்கள் வங்கி கணக்கிற்கு வந்தால் எப்படி இருக்கும்? அதுவும் பங்குச் சந்தை ரிஸ்க் எதுவுமில்லாமல், மத்திய அரசின் 100% பாதுகாப்புடன். அப்படியான திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS). இப்போது இது ஒரு சாதாரண சேமிப்பு திட்டமாக மட்டுமல்லாமல், சீனியர் சிட்டிசன்களுக்கு பொருளாதாரப் பாதுகாப்பு அரணாக மாறியுள்ளது.
ஆண்டுக்கு 8.2% என்ற வட்டி விகிதத்தில், உங்கள் முதலீட்டிற்கு மாதந்தோறும் சுமார் 20,500 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதுடன், வருமான வரிச் சட்டம் 80C-ன் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரியையும் மிச்சப்படுத்தலாம். இது வெறும் சேமிப்பல்ல, உங்கள் உழைப்பிற்கு அரசு தரும் கௌரவ ஊதியம். இந்த மேஜிக் எப்படி சாத்தியம்? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். முழுமையான கணக்கீடு இதோ.

மாத மாதம் வங்கிக் கணக்கிற்கு வரும் சம்பளம் நின்றுவிட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும். அதேபோன்று தான் ஓய்வு காலத்தை எட்டியவர்களும். ஆனால் இனி அதற்கெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. சரியாக திட்டமிட்டு முதலீடு செய்தால் ஓய்வு காலத்திலும் சீரான வருமானத்தை வரி சலுகையுடன் பெற முடியும். அதற்கு அரசின் எஸ் சி எஸ் எஸ் எனப்படும் மூத்த குடிமக்கள் திட்டம் நிச்சயம் உதவும் எனலாம். அஞ்சலக திட்டமானது இது, தற்போது மற்ற திட்டங்களை காட்டிலும் அதிக வட்டியை கொடுக்கிறது. இதை வங்கிகள், அஞ்சலகம் என எங்கு வேண்டுமானாலும் தொடங்கி கொள்ளலாம்.
நிலையான வருமானம் தரும் இந்த திட்டத்திற்கு, தற்போது 8.2% வட்டி கிடைக்கிறது. ஆக முன்கூட்டியே உங்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம். ஆக உங்கள் தேவைக்கு ஏற்ப முதலீடு செய்து கொண்டால், பிற்காலத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓய்வு காலத்தை கழிக்க முடியும். அரசின் இந்த திட்டத்தின் வட்டியானது ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இது பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படாது.
எஸ்சிஎஸ்எஸ் திட்டத்தில் ஒருவர் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாயை முதலீடு செய்து கொள்ளலாம். அப்படி 30 லட்சம் ரூபாயை ஒருவர் முதலீடு செய்துள்ளதாக வைத்துக் கொள்வோம். 8.2% வட்டி வீதத்தில் ஆண்டுக்கு 2.46 லட்சம் ரூபாய் அவருக்கு கிடைக்கும். இதை மூன்று மாதத்திற்கு ஒரு முறை 61,500 ரூபாயாக பெற்றுக் கொள்ளலாம். இதை மாத வாரியாக பிரித்தால் 20,500 ரூபாய் பெற முடியும். இது மாத மாதம் பென்ஷன் போலவும் கிடைக்கும். 60 வயதான அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். 60 வயதுக்கு முன்னதாக ஓய்வை எட்டியவர்களும் இதில் பயனடையலாம். இதில் உங்கள் துணையுடன் இணைந்து இந்த கணக்கை தொடங்கி கொள்ளலாம். ஆனால் அதிகபட்ச முதலீட்டு வரம்பு 30 லட்சம் ரூபாய் மட்டுமே.
இந்த திட்டத்தில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கு வரிச் சலுகையும் உண்டு. இருப்பினும் இந்த திட்டத்தில் நீங்கள் பெறும் வட்டி வருமானம், உங்கள் அந்த ஆண்டின் மொத்த வருமானத்துடன் சேர்க்கப்படும். உங்கள் மொத்த வருமானம் எந்த வரி வரம்பில் வருகிறதோ, அதற்கேற்ப வரி விதிக்கப்படும். அதோடு ஒரு நிதியாண்டில் உங்கள் வட்டி வருமானம் 50,000 ரூபாயை தாண்டினால், 10% TDS பிடித்தம் இருக்கும். ஒருவேளை உங்கள் மொத்த ஆண்டு வருமானம் வரி கட்ட வேண்டிய வரம்பிற்குள் இல்லை என்றால், படிவம் 15H (Form 15H) சமர்ப்பித்து TDS பிடிப்பதை தவிர்க்கலாம். ஐந்து ஆண்டு திட்டமான இதை, மேற்கொண்டு 3 ஆண்டுகள் நீட்டித்துக் கொள்ளலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications