அஞ்சலக திட்டங்களுக்கு ஏப்ரல் - ஜூன் 2023க்கான காலாண்டுக்கான வட்டி விகிதத்தினை, மத்திய அரசு இன்று 70 அடிப்படை புள்ளிகள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி அதிகரிப்பானது மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், மாதாந்திர வருவாய் திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் என பல்வேறு திட்டங்களுக்கு வட்டி அதிகரிப்பினை செய்துள்ளது.
இவற்றோடு டைம் டெபாசிட் மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கும் வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய வட்டி விகிதம்?
அஞ்சலக சேமிப்பு கணக்கு - 4% வருடத்திற்கு
1 வருட டைம் டெபாசிட் - காலாண்டுக்கு 6.8%
2 வருட டைம் டெபாசிட் - காலாண்டுக்கு 6.9%
3 வருட டைம் டெபாசிட் - காலாண்டுக்கு 7%
5 வருட டைம் டெபாசிட் - காலாண்டுக்கு 7.5%
5 வருட தொடர் வைப்பு நிதி திட்டம் - காலாண்டுக்கு 5.8%
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - 8.2%
மாதாந்திர வருவாய் திட்டம் - 7.4%
தேசிய சேமிப்பு பத்திரம் - 7.7%
பொது வருங்கால வைப்பு நிதி - 7.1%
கிசான் விகாஸ் பத்திரம் - 7.5%
சுகன்யா சம்ரிதி யோஜனா - 8.0%
காலாண்டுக்கு ஒரு முறை
ஓவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறையும் மத்திய அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வட்டி விகிதத்தினை, அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. இந்த வட்டி அதிகரிப்பால் நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் பெரும் பலன் அடையலாம்.
என்ன காரணம்?
தொடர்ந்து மத்திய வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் சூழலில், வங்கிகள் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இதனால் சமீபத்திய காலமாக வைப்பு நிதிகள் கவர்ச்சிகரமான திட்டங்களாக மாறி வருகின்றன. இந்த நிலையில் தான் மத்திய அரசு அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.
வங்கிகளில் என்ன நிலவரம்?
எஸ்பிஐ வங்கியில் வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 3%ல் இருந்து, 7% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சலகத்தின் சேமிப்பு கணக்குக்கான திட்டம் தற்போது வருடத்திற்கு 4% ஆக உள்ளது. இதே எஸ்பிஐயில் 3.5% வரையில் வட்டி விகிதம் கிடைக்கலாம்.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications