மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா இரு திட்டங்களுமே மூத்த குடிமக்களுக்கு ஏற்றதொரு திட்டமாக உள்ளது. இது சிறந்த ஓய்வுகால திட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு திட்டங்களையும் அரசு கீழ் இயங்கும் நிறுவனங்கள் வழங்கும் நிலையில், பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பட்ஜெட் 2023ல் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் சேமிப்பு வரம்பானது 15 லட்சம் ரூபாயில் இருந்து, 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு இன்னும் பயனுள்ள ஒரு விஷயமாக இருக்கும் எனலாம். தற்போது இந்த திட்டத்திற்கு 8% வட்டி விகிதமாக வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
இதே ஜாய்ண்ட் அக்கவுண்டாக தொடங்கும்போது இதில் 60 லட்சம் ரூபாயில் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். இந்த சேமிப்பு திட்டத்தில் சேர ஒரு நபர் 55 வயது அல்லது 60 வயது, அதற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளர்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் தான். இந்த ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். மூத்த குடி மக்களுக்கான திட்டம் என்பதால் இதில் வரி சலுகையும் உண்டு. இதில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம். வருமான வரி விதிக்கப்பட்டாலும், 15h அல்லது 15g படிவத்தை வழங்கி சலுகையினை பெறலாம்.
முதிர்வு காலம் எப்படி?
மூத்த குடிமக்கள் ஓய்வூதிய திட்டத்தின் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள் தான். இருப்பினும் இந்த திட்டத்தினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். இந்த திட்டத்தில் முன் கூட்டியேவும் கணக்கினை முடித்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு தான் அனுமதிக்கப்படுகிறது. இதற்கு டெபாசிட் தொகையில் 1.5% அபராதம் உண்டு. இதே 2 வருடங்களுக்கு பிறகு முடித்தால் 1% டெபாசிட் தொகையில் இருந்து கழிக்கப்படும்.
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா
எல்ஐசி காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தப் பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா திட்டத்தின் கீழ், ஓய்வூதியதாரர்களைச் சார்ந்து உள்ள மனைவி அல்லது கணவன் அல்லது பிறருக்கு இந்த ஓய்வூதியத்தின் கீழ் தவணை முடிய 10 ஆண்டுகள் இருக்கும் போது இறக்க நேர்ந்தால் தொடர்ந்து ஓய்வூதியம் பெற அனுமதி உண்டு.
வரிச்சலுகை கிடையாது
இந்த திட்டத்தினை வாங்கிய மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, பிணையமாக வைத்துக் கடன் வாங்கிக் கொள்ள முடியும். தற்போது வட்டி விகிதம் 7.66% ஆக வழங்கப்படுகிறது. இது வங்கி டெபாசிட்டுக்கு மாற்றாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் இந்த திட்டத்தில் இடையில் வெளியேறினால் 2% அபராதம் விதிக்கப்படுகிறது. எனினும் தவிர்க்க முடியாத அவசர சிகிச்சைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.எனினும் இந்த திட்டத்தில் வரிச்சலுகை கிடையாது.
எது பெஸ்ட்?
இந்த இரு திட்டங்களுமே வயதான காலகட்டத்திற்கு ஏற்ப பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது. வட்டி விகிதமும் அதிகம் தான். குறிப்பாக வங்கி வைப்பு நிதிகளை காட்டிலும் அதிகம் தான். இதில் எஸ்.சி.எஸ்.எஸ் திட்டத்தில் வரிச்சலுகை கிடைத்தாலும், பி எம் வி வி ஓய் திட்டத்தில் வரி சலுகை கிடையாது. இதில் வருமானமும் சற்று குறைவு.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications