இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), பரஸ்பர நிதிகளின் செலவு விகிதங்களைக் குறைத்து, தெளிவான அடிப்படைச் செலவு விகித (BER) கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த மாற்றங்கள், செலவு வரம்புகளை 10-15 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைப்பதால் முதலீட்டாளர்களுக்குப் பெரிய லாபத்தை ஏற்படுத்தி தரும்.
செபி வெளியிட்ட புதிய கட்டமைப்பின் கீழ், முன்னிருந்த மொத்தச் செலவு விகிதம் (Total Expense Ratio - TER) தற்போது பிரிக்கப்பட்டுள்ளது. நிதிச் செலவுகள் இனி மூன்று தனித்தனி கூறுகளாகப் பகிரப்படும்: நிதி நிர்வாகத்தின் உண்மையான செலவைக் குறிக்கும் அடிப்படைச் செலவு விகிதம் (BER); வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கான தரகு; மற்றும் ஜிஎஸ்டி (GST), பத்திர பரிவர்த்தனை வரி (STT) போன்ற சட்டபூர்வ மற்றும் ஒழுங்குமுறை வரிகள் என பிரிக்கப்பட்டுள்ளது.

ஷேர்.மார்க்கெட் (ஃபோன்பே வெல்த்) முதலீட்டுத் தயாரிப்புகளின் தலைவர் நீலேஷ் டி நாயக், "செபியின் இந்த அறிவிப்பு மியூச்சுவல் ஃபண்டு நிதிச் செலவுகளில் அவசியமான வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருகிறது" என்றார். BER வரம்புகள் 10-15 bps குறைக்கப்பட்டுள்ள நிலையில், சட்டரீதியான வரிகள் உண்மையான செலவின் அடிப்படையில் தனியாக வசூலிக்கப்படும். இதனால், பல திட்டங்களின் ஒட்டுமொத்தச் செலவு முன்பு இருந்த அளவிலேயே இருக்கலாம். எனினும், எக்சிட் லோட் உள்ள திட்டங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட கூடுதல் 5 bps கட்டணம் நீக்கப்பட்டது, முதலீட்டாளர்களுக்கு நேரடி சேமிப்பை வழங்குகிறது என்று அவர் விளக்கினார்.
குறைந்த செலவுகளும் நீண்ட காலத்திற்கு கணிசமான தொகையாக உருவாகும். அவிசா வெல்த் கிரியேட்டர்ஸின் தலைமை முதலீட்டு அதிகாரி ஆதித்யா அகர்வால், 10-15 bps குறைப்பு (குறுகிய காலத்தில் சிறியதாகத் தோன்றினாலும்) பல தசாப்தங்களில் முதலீட்டுப் பலனை கணிசமாக மேம்படுத்தும் என்றார். உதாரணமாக, 20 வருடங்களுக்கு மாதம் ரூ 10,000 SIP மூலம் 12% மொத்த வருமானத்துடன், 0.15% குறைந்த செலவு விகிதத்தால் மட்டும் கூடுதலாக ரூ 3-5 லட்சம் பெற முடியும். 25 வருட முதலீடு இந்த பலனை ரூ 7-8 லட்சமாக உயர்த்தும் என்றும் அகர்வால் விளக்கினார்.
ஆனந்த் ரதி வெல்த் லிமிடெட் தலைவர் ஸ்வேதா ரஜனி சற்று மாறுபட்டக் கருத்தைக் கூறுகிறார். சட்டபூர்வக் கட்டணங்கள் மற்றும் தரகுச் செலவுகளுக்குப் பிறகு, முதலீட்டாளர்களுக்கான நிகரப் பலன் 4-8 bps ஆகக் குறையக்கூடும் என்றார். இருப்பினும், இதுகூட கூட்டுத்தொகை (compounding) செயல்திறனை மேம்படுத்தி, 15-20 ஆண்டுகளில் நீண்டகாலச் செல்வத்தில் 0.5-0.8% கூடுதல் வருமானத்தைச் சேர்க்கும் என அவர் குறிப்பிட்டார்.
முதலீட்டாளர்கள் குறைந்த செலவுகளை மட்டுமே கொண்டு போர்ட்ஃபோலியோவை மாற்றக் கூடாது என்று நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். “எக்சிட் லோட் (exit load), மூலதன ஆதாய வரி (capital gains tax), மற்றும் கூட்டுத்தொகைக்கு (compounding) ஏற்படும் இடையூறுகள் சிறிய கட்டணச் சேமிப்புகளை விட பெரும்பாலும் அதிகமாக இருக்கும்,” என்று அகர்வால் குறிப்பிடுகிறார். அதற்குப் பதிலாக, செயல்திறன் நிலைத்தன்மை, ரிஸ்க்-சரிசெய்யப்பட்ட வருமானங்கள் மற்றும் நிதி இலக்குகளுடன் பொருந்திப் போவது ஆகியவற்றில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று ரஜனி வலியுறுத்துகிறார்.
ரூபாய் சேமிப்பைத் தாண்டி, இந்த மாற்றத்தின் பெரிய நன்மை வெளிப்படைத்தன்மையே ஆகும். அடிப்படைச் செலவு விகித (BER) கட்டமைப்பு, நிதி நிர்வாகம், வரிகள் மற்றும் வர்த்தகச் செலவுகளுக்கான கட்டணங்களை முதலீட்டாளர்கள் தெளிவாக அறிய உதவுகிறது. சுருக்கமாக, செபியின் இந்த நடவடிக்கை மலிவான நிதியைத் தேடுவது அல்ல. மாறாக, செலவுகள், செயல்திறன் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை ஒருங்கே கருத்தில் கொண்டு, தகவலறிந்த, நீண்டகால முடிவுகளை எடுக்க முதலீட்டாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதே இதன் முதன்மை நோக்கம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications