Mutual Fund முதலீட்டாளர்களுக்கு செபி முக்கிய அறிவிப்பு.. நவம்பர் முதல் அமலுக்கு வரும் மேஜர் மாற்றம்..!!

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் பணத்தை முதலீடு செய்கின்றனர். இவ்வாறு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதில் இரண்டு வகை திட்டங்கள் உண்டு, ஒன்று Direct Plans, இரண்டாவது Regular Plan. இதில் தான் முக்கியமான மாற்றத்தை செபி அறிவித்துள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் டிஜிட்டல் தளங்கள் அதாவது செயலிகள் மற்றும் இணையதளங்கள் வழியாக நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது, இனி நேரடி திட்டங்கள் (Direct Plans) மட்டும் தான் உங்களுக்கான default ஆப்ஷனாக இருக்கும். இது நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.

Mutual Fund முதலீட்டாளர்களுக்கு செபி முக்கிய அறிவிப்பு.. நவம்பர் முதல் அமலுக்கு வரும் மேஜர் மாற்றம்

அதாவது ரெகுலர் பிளான் என்ற ஆப்ஷனே இல்லாமல் நேரடியாக டைரக்ட் பிளான்களில் தான் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் மேற்கொள்ள முடியும். ஒரு வேளை ஒரு நபர் ரெகுலர் பிளான் எனப்படும் நேரடி திட்டத்தை தேர்ந்தெடுக்க விரும்பினால், அத்திட்டங்களில் உள்ள அதிகப்படியான செலவுகள் மற்றும் கட்டணங்கள் (Higher Expense Ratio) பற்றிய தகவலை கட்டாயம் முதலீட்டாளருக்கு தெரிவிக்க வேண்டும் என செபி உத்தரவிட்டுள்ளது.

டைரக்ட் பிளான் எனப்படும் நேரடி திட்டங்களில் இடைத்தரகர்கள் அல்லது ஏஜெண்டுகள் கிடையாது. முதலீட்டாளர்கள் நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் முதலீடு செய்கிறார்கள். இதனால் இடைத்தரகர்களுக்கான கமிஷன் தொகை மிச்சமாவதுடன், இதன் Expense Ratio மிகவும் குறைவாக இருக்கும்.

ஆனால் ரெகுலர் பிளானில் ஏஜெண்டுகள், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் அல்லது ஆலோசகர்கள் மூலமாக தான் நம் முதலீட்டு பணம் செல்கிறது. இதில் விநியோகஸ்தர்களுக்கான கமிஷன் தொகை சேருவதால், இதன் செலவு விகிதம் டைரக்ட் பிளானை விட அதிகமாக இருக்கும். அதாவது நம் முதலீட்டில் குறிப்பிட்ட தொகை கமிஷனுக்கு செல்லும். இரண்டும் ஒரே மாதிரியான போர்ட்ஃபோலியோ மற்றும் முதலீட்டு திட்டங்களில் தான் முதலீடு செய்கின்றன என்றாலும், டைரக்ட் பிளான்களின் மூலம் நீண்ட காலத்தில் லாபம் அதிகமாக கிடைக்கும்.

Also Read

இந்த புதிய மாற்றத்தால் நீண்ட காலத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்க்கலாம். மாதம்தோறும் 10,000 ரூபாய் SIP முறையில் ஒருவர் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். இதில் டைரக்ட் பிளானில் முதலீடு செய்தால், 20 ஆண்டுகளுக்கு பின் உங்கள் மொத்த முதலீடு சுமார் 84.53 லட்சம் ரூபாயாக வளர்ந்திருக்கும். ஆனால் அதுவே ரெகுலர் பிளான் என்றால் 20 ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் பணம் 75.06 லட்சம் ரூபாய் தான். அதாவது டைரக்ட் பிளான் மூலம் உங்களுக்கு கூடுதலாக கிடைக்கும் பணம் 9.47 லட்சம் ரூபாய்.

Recommended For You

செபியின் இந்த அறிவிப்பால் உங்களின் தற்போதைய முதலீடுகள் தானாக மாறுமா என்றால் இல்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள ரெகுலர் எஸ்ஐபி-கள் அல்லது பழைய முதலீடுகள் எவையும் தானாக டைரக்ட் பிளானுக்கு மாறாது. தற்போதைய முதலீடுகளை மாற்ற விரும்பினால், அதற்குரிய வரிகள் மற்றும் எக்சிட் லோட் விதிகளை பரிசீலித்துவிட்டு நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டும். புதிய முதலீடுகளுக்கே இந்த புதிய விதி பொருந்தும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+