தற்போதுள்ள காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பதை விட அந்த பணத்தை பாதுகாப்பாக சேமித்து வைப்பதும் , ஓரிடத்தில் முதலீடு செய்து பணத்தை பெருக்குவதும் தான் பெரிய சவாலாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் இதில் முதலீடு செய்யுங்கள் , அதில் முதலீடு செய்யுங்கள் வட்டி கிடைக்கும் என போலியாக விளம்பரம் செய்து பொதுமக்களை பெருமளவில் ஏமாற்றுகிறார்கள்.
பல்வேறு இடங்களிலும் நிதி நிறுவனங்கள் மோசடி என்ற செய்தியை நாம் பரவலாக பார்த்து வருகிறோம். ஆனால் நம்முடைய முதலுக்கு மோசம் போகாத அதிகபட்ச வட்டி வருமானம் தரக்கூடிய பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நம் வீட்டிற்கு அருகிலேயே இருக்கக்கூடிய தபால் நிலையங்கள் வாயிலாகவே நமக்கு கிடைக்கின்றன. அப்படி தபால் நிலைய திட்டங்களிலேயே அதிக வட்டி வருமானம் கொண்ட ஒரு திட்டம் குறித்து தற்போது நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தபால் நிலையங்களில் மூத்த குடிமக்களுக்காகவே பிரத்தியேக சேமிப்பு திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. அதுதான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். பணி ஓய்வு பெற்ற பலருக்கும் நிதி பாதுகாப்பு என்பது ஒரு பெரிய கவலை. அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினம், ஒரே அளவிலான ஓய்வூதியம் இவை அனைத்துமே மூத்த குடிமக்களுக்கு பெரிய கவலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றால் உங்கள் கையில் இருக்கும் பணத்தை தபால் நிலையங்களில் கிடைக்கும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துவிட்டால் போதும். மாதம் தோறும் ஒரு கணிசமான வருமானம் உங்களைத் தேடி வந்து கொண்டே இருக்கும்.

தபால் நிலையங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ஆண்டுக்கு 8.2% வட்டி வருமானம் கிடைக்கிறது இந்த திட்டத்தில் ஒரு நபர் 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். இந்த 25 லட்சம் ரூபாய் முதலீடு தொகைக்கு 8.2% வட்டி வருமானம் கிடைக்கும். அதாவது ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு 17,000 ரூபாய் வட்டி வருமானத்தை பெற்றுத்தரும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் அதிகபட்சமாக ஒரு நபர் 30 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். ஐந்து ஆண்டு காலம் கொண்ட இந்த திட்டத்தில் ஒரு நபர் 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருந்தால் 5 ஆண்டுகள் முடியும்போது அவருக்கு வட்டி வருமானமாகவே கூடுதலாக 10.25 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். அதாவது மொத்தமாக கைக்கு 35. 25 லட்சம் ரூபாய் கிடைக்கும் . அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு இந்த திட்டத்தில் 17,000 ரூபாய் வரை வருமானம் கிடைப்பது உறுதி ஆகிறது.
பணி ஓய்வின் போது கிடைத்த பணத்தை எடுத்து இதில் முதலீடு செய்து விட்டு நிம்மதியான ஓய்வுகாலத்தை கழிக்கலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமில்லாமல் 55 முதல் 60 வயதிற்குள் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் கூட இந்த திட்டத்தில் சேர்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.5 ஆண்டுகால திட்டத்தை மேலும் 3 ஆண்டுகள் கூட நீட்டித்து கொள்ளலாம், ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறையும் வட்டி பணம் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications