மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் என்பது வயதானவர்களுக்கு என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு சிறு சேமிப்பு திட்டம். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் என்பது இம்மாத இறுதிக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்து மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் சூழலில், வங்கிகள் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. சொல்லப்போனால் மூத்த குடிமக்களுக்கு நல்லதொரு வருமானத்தினை கொடுக்கும் வகையில் கவர்ச்சிகரமான திட்டங்களாகவும் பார்க்கப்படுகின்றன.
தற்போது வட்டி விகிதம்?
ஆக இந்த நிலையில் தான் அரசு மூத்த குடிமக்களுக்கான இந்த பிரத்யேக திட்டமான SCSS திட்டத்திற்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் மூன்றாவது காலாண்டிற்கான வட்டி விகிதம் என்பது மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 8% ஆக உள்ளது.
பணவீக்கத்தின் தாக்கம்
கடந்த சில காலாண்டுகளாகவே தொடர்ந்து வட்டி விகிதம் என்பது மத்திய வங்கிகள் அதிகரித்து வரும் சூழலில், மூத்த குடி மக்களுக்கும் அதிகரிக்க வழிவகுக்கலாம். இதில் சந்தை அபாயம் என்பது இல்லை.
தொடர்ந்து நாட்டில் பணவீக்கத்தின் தாக்கம் என்பது அதிகரித்து வரும் நிலையில், இது மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிலை இருந்து வருகின்றது.
பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு
ஆக மூத்த குடி மக்களுக்கு விரைவில் பாதுகாப்பு அளிக்கும் விதமாக வட்டி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு பலன் அளிக்கும் விதமாக பட்ஜெட் 2023ல், 15 லட்சம் ரூபாயில் இருந்து, 30 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இது மேற்கொண்டு முதலீட்டாளர்களுக்கு பயனுள்ள ஒன்றாக அமையலாம்.
ரூ.40,000 வரையில் வருமானம்
மூத்த குடி மக்கள் 30 லட்சம் ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக் கொண்டால், அதன் மூலம் வட்டி விகிதமாக மாதத்திற்கு 20,000 ரூபாய் வரையில் வருமானம் பார்க்க முடியும். இதே மூத்த குடிமக்கள் கணவன் மனைவி இருவரும் இணைந்து முதலீடு செய்வதாக வைத்துக் கொண்டால், மாதம் 40,000 ரூபாய் வரையில் வருமானம் பெற முடியும்.
முதிர்வு காலம்
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். இது நிரந்தமான நிலையான ஒரு வருமானத்தினை தருகின்றது. இந்த திட்டத்தினை மேற்கொண்டு 3 ஆண்டுகளுக்கும் நீட்டித்துக் கொள்ள முடியும். மொத்தத்தில் சந்தை அபாயம் இல்லாமல், நல்ல லாபகரமான ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. ஆக இது பாதுகாப்பானதொரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
கூடுதல் வட்டி கிடைக்குமா?
இந்த SCSS திட்டத்தில் ஒவ்வொரு காலாண்டிலும் செலுத்த வேண்டிய வட்டி கணக்கு வைத்திருப்பவரால் கோரப்படாவிட்டால், அத்தகைய வட்டிக்கு கூடுதல் வட்டி கிடைக்காது. கூட்டுக் கணக்கில் வைப்புத் தொகையின் முழுத் தொகையும் முதல் கணக்கு வைத்திருப்பவருக்கு மட்டுமே காரணமாகும்.
கணவன்-மனைவி இருவரும் ஒற்றைக் கணக்கு மற்றும் கூட்டுக் கணக்குகளைத் தொடங்கிக் கொள்ளலாம். .


Click it and Unblock the Notifications