இன்றைய காலகட்டத்தில் மூத்த குடிமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள திட்டங்களில், வங்கி பிக்சட் டெபாசிட்கள் என்பது இருந்து வருகின்றது. குறிப்பாக மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் சூழலில், வங்கி வைப்பு நிதிகள் என்பது கவர்ச்சிகரமான திட்டங்களாகவே பார்க்கப்படுகின்றன.
இப்படி வட்டி விகிதங்கள் என்பது அதிகளவில் இருந்து வரும் சூழலில், இதனுடன் கூடுதலாக வரி சலுகையும் கிடைத்தால் நல்ல விஷயம் தானே. ஆக அப்படி நல்ல வட்டி விகிதத்துடன், வரி சலுகையும் கிடைக்கும் திட்டங்கள் எது? என்பதை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
பாதுகாப்பான முதலீடு
இது மற்ற முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது நிரந்தர வருமானம் தரக்கூடிய திட்டங்களாக உள்ளது. குறிப்பாக இதில் சந்தை அபாயம் என்பது இல்லை. ஆக இதுவும் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒரு காரணமாக அமைந்துள்ளது. எனினும் இந்த பிக்சட் டெபாசிட் திட்டங்களில் கவனிக்க வேண்டிய அம்சங்களாக உள்ளன.
இதையும் தெரிஞ்சுக்கோங்க?
வரி சலுகையுள்ள இந்த டெபாசிட் திட்டங்கள் 5 ஆண்டு திட்டங்களாகும். எனினும் இந்த திட்டத்தில் முன் கூட்டியே பணம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆக இதில் டெபாசிட் செய்யும் முன்னர் இதனை தெரிந்து கொள்வது அவசியமானது. பொதுவாக இந்த டெபாசிட் திட்டங்களில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதங்களை காட்டிலும், இதில் வட்டி விகிதமும் சற்று அதிகம்.
வட்டி எப்படி பெறலாம்?
ஆக 60 வயதுக்கு மேலான மூத்த குடிமக்கள் இந்த திட்டங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் கிடைக்கும் வட்டி விகிதத்தினை மாத மாதமோ அல்லது காலாண்டுக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுகு ஒரு முறையோ பெற்றுக் கொள்ளலாம். இதில் முதிர்வு காலத்திற்கு பிறகும் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரி சலுகையும் பெற்றுக் கொள்ளலாம்.
இப்படியும் ஒரு சலுகை இருக்கு?
மூத்த குடிமக்கள் வைப்புத்தொகை, சேமிப்புகள் உள்ளிட்ட பிறவற்றிற்கு கிடைக்கும் வட்டிக்கு 50,000 ரூபாய் வரை வருமான வரிச்சட்டம் 80டிடிபி பிரிவின்கீழ் தள்ளுபடி தரப்படுகிறது. மேலும், வருமான வரிச் சட்டம் 194ஏ பிரிவின் கீழ் இத்தகைய வருமானத்துக்கு கழிக்கப்படும் வரி (TDS) பிடித்தம் கிடையாது. இநதச் சலுகை நிரந்தர சேமிப்பு (fixed deposits), தொடர் சேமிப்பு (recurring deposit) ஆகிய அனைத்து சேமிப்புகளுக்கும் பொருந்தும். இதே வட்டி தொகை என்பது 50,000 ரூபாயினை தாண்டினால், டிடிஎஸ் பிடித்தம் 10% ஆக உள்ளது.
எவ்வளவு வட்டி?
டிசிபி வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 8.1%
ஆக்ஸிஸ் வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 7.75%
இந்தஸ் இந்த் வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 7.75%
யெஸ் வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 7.75%
ஹெச்.டி.எஃப்.சி வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 7.5%
ஐசிஐசிஐ வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 7.5%
ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 7.5%
ஆர்பிஎல் வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம்- 7.5%
ஃபெடரல் வங்கி - 7.25% - 5 ஆண்டு எஃப்டி திட்டம்
யூனியன் பேங்க் ஆப் இந்தியா - 7.2% - 5 ஆண்டு எஃப்டி திட்டம்
பேங்க் ஆப் பரோடா - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 7.15%
கனரா வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 7%
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 7%
பஞ்சாப் நேஷனல் வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 7%
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா - 7.5%
ஐடிபிஐ வங்கி - 7%
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா - 6.75%
பஞ்சாப் சிந்த் வங்கி - 6.75%
கோடக் மஹிந்திரா வங்கி - 6.7%
பந்தன் வங்கி - 6.6%
தனலட்சுமி வங்கி - 6.6%
பேங்க் ஆப் மகாராஷ்டிரா - 6.25%
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications