இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச் டி எஃப் சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்றவர்கள், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு கொஞ்சம் கூடுதல் வட்டி கொடுக்கிறார்கள்.
எந்த வங்கி எவ்வளவு வட்டி கொடுக்கிறது. இந்த மூன்று வங்கிகளில், யார் அதிக வட்டி விகிதத்தைக் கொடுக்கிறார்கள்? முன் கூட்டியே பணம் எடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும் போன்ற விவரங்களைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
முதலில் அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் இருந்து தொடங்குவோம்.
SBI We Care FD scheme for senior citizens
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, SBI We Care என்கிற பெயரில், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது.
31 டிசம்பர் 2020 வரை இந்த திட்டம் இருக்கிறதாம்.
காலம் - 5 ஆண்டுகள்
80 அடிப்படைப் புள்ளிகள் கூடுதலாக வட்டி கொடுக்கிறார்களாம்.
எஸ்பிஐ திட்டத்தில் வட்டி + முன் கூட்டி பணம் எடுத்தல்
வட்டி விகிதம் - 6.2 % (10 செப் 2020 முதல்)
முதிர்ச்சிக்கு முன் பணம் எடுக்க முடியும், ஆனால் 0.5 % அபராதம் செலுத்த வேண்டி வரலாம். முன் கூட்டி பணம் எடுத்தால், 30 அடிப்படைப் புள்ளிகள் கூடுதல் பிரீமியம், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படாது என்கிறது லைவ் மிண்ட் பத்திரிகை.
HDFC Senior Citizen Care
ஹெச் டி எஃப் சி வங்கியின் HDFC Senior Citizen Care திட்டம் 31 டிசம்பர் 2020 வரை இருக்கிறது.
காலம் - 5 வருடம் 1 நாள் முதல் 10 வருடங்கள் வரை
75 அடிப்படைப் புள்ளிகள் கூடுதல் வட்டி கொடுக்கிறார்களாம்.
வட்டி விகிதம் - 6.25 % (25 ஆக 2020 முதல்).
ஹெச் டி எஃப் சி வங்கியின் திட்டத்தில் வட்டி + முன் கூட்டி பணம் எடுத்தல்
அதோடு 25 அடிப்படைப் புள்ளிகள் பிரீமியமும் வழங்குகிறார்களாம்.
முதிர்ச்சிக்கு முன் பணம் எடுத்தல்: 5 வருடத்துக்கு முன் பணம் எடுத்தால் 1% அபராதம் செலுத்த வேண்டும்.
5 வருடத்துக்குப் பிறகு பணம் எடுத்தால் 1.25 % அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
ICICI Bank Golden Years
இந்தியாவின் தனியார் வங்கிகளில் மற்றும் ஒரு முக்கிய வங்கியான ஐ சி ஐ சி ஐ வங்கி ICICI Bank Golden Years என்கிற பெயரில் மூத்த குடி மக்களுக்கு ஒரு சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிவித்து இருக்கிறது.
காலம் - 5 வருடம் 1 நாள் முதல் 10 வருடங்கள் வரை
ஐசிஐசிஐ வங்கியின் திட்டத்தில் வட்டி + முன் கூட்டி பணம் எடுத்த
வட்டி விகிதம் - 6.30 % (7 செப் 2020 முதல்). 80 அடிப்படைப் புள்ளிகள் கூடுதல் வட்டி கொடுக்கிறார்களாம்.
முதிர்ச்சிக்கு முன் பணம் எடுத்தல்: 5 வருடத்துக்கு முன் பணம் எடுத்தால் 1% அபராதம் செலுத்த வேண்டும்.
5 வருடத்துக்குப் பிறகு பணம் எடுத்தால் 1.3 % அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications