இன்றே கடைசி நாள்.. தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமா.. ஏன் பெஸ்ட் தெரியுமா?

நடப்பு நிதியாண்டின் 4ம் கட்ட வெளியீடான தங்க பத்திர (SGB) விற்பனை என்பது மார்ச் 6 அன்று தொடங்கியது. அதன் கடைசி வெளியீட்டு தேதி மார்ச் 10 ஆகும். இந்த பத்திரங்கள் நடப்பு நிதியாண்டில் கடைசி வெளியீடாகும். இந்த பத்திரங்கள் மார்ச் 14, 2023 அன்று வெளியீடு செய்யப்படலாம் என தெரிகிறது.

ரிசர்வ் வங்கி இந்த பத்திரத்திற்கு விலையானது கிராமுக்கு 5611 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஆன்லைன் மூலமாக வாங்கும்போது 50 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும்.

எத்தனை வெளியீடுகள்

எத்தனை வெளியீடுகள்

2022- 23 சீரிஸ் 1 - ஜூன் 20 - 24, 2022 - விலை கிராமுக்கு ரூ.5041

2022 - 23 சீரிஸ் 2 - ஆகஸ்ட் 22 - 26, 2022 - விலை கிராமுக்கு ரூ.5090

2022 - 23 சீரிஸ் 3 - டிசம்பர் 19 - 27, 2022 - விலை கிராமுக்கு ரூ.5409

2022 - 23 சீரிஸ் 4 - மார்ச் 6 - 10, 2023 - விலை கிராமுக்கு 5611 ரூபாய்

சாதகமான விஷயங்கள்

சாதகமான விஷயங்கள்

இந்த தங்க பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடுவதால் பாதுகாப்பானதாகவும் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக பிசிகல் தங்கத்திற்கு மாற்றாக பார்க்கப்படும் இந்த பத்திரங்களுக்கு, வட்டியும் வரி சலுகையும் உண்டு. ஆக நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கும்போது லாபமும் கிடைக்கும். கூடாக வட்டியும் கிடைக்கும்.

விலை தொடர்ந்து அதிகரிப்பு

விலை தொடர்ந்து அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல் வெளியீட்டிலேயே விலை 5041 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், 4வது சீரிஸில் 5611 ரூபாயாக உள்ளது. ஆக இது 8 ஆண்டுகள் கழித்து பார்க்கும்போது நல்ல லாபம் கிடைக்கலாம்.

குறிப்பாக நிபுணர்கள் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என கூறி வரும் நிலையில், இது லாபகரமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. அதிலும் ரிசர்வ் வங்கி இந்த பத்திரங்களை வெளியிடுவதால் லாபமும் அதிகம் கிடைக்கலாம்.

முதிர்வு காலம்

முதிர்வு காலம்

இந்த விலை நிர்ணயமானது மார்ச் 1 மற்றும் மார்ச் 2, மார்ச் 3 அன்று இருந்த விலைகளில் செய்யப்பட்ட சராசரி விலையினை தான், நிறுவனம் 5611 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பத்திரங்களின் முதிர்வு காலம் 8 ஆண்டுகளாகும். இது 5 ஆண்டுகளில் இருந்தே வெளியேறும் ஆப்சன் உண்டு.

எவ்வளவு வாங்கலாம்?

எவ்வளவு வாங்கலாம்?

ஒரு தனி நபர் 1 கிராம் முதல் 4000 கிராம் வரையில் வாங்கிக் கொள்ளலாம். இதே ஹெச் யு எஃப் (HUFs), அறக்கட்டளைகள் மற்றும் பல்கலைக் கழங்கள், தொண்டு நிறுவனங்கள் என பலரும் 20 கிலோ கிராம் வரையில் வாங்கி வைக்கலாம்.

எப்படி வாங்கலாம்?

எப்படி வாங்கலாம்?

தங்க பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இங்கு வாங்க உங்கள் டீமேட் கணக்கு தேவைப்படும். ஆக டீமேட் இல்லாதவர்கள் வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலமும் வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைனிலும் எளிதாக வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+