தங்கம் என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியம் உங்களது முதலீட்டு போர்ட்போலியோவில் இருக்க வேண்டிய முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதுவும் பிசிகல் தங்கமாக அல்லாமல் டிஜிட்டல் தங்கமாக, பேப்பர் தங்கமாக இருப்பது நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
ஆக அந்த வகையில் முதலீட்டாளர்களுக்கு இன்று தொடங்கவிருக்கும் தங்க பத்திர விற்பனை என்பது நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்க பத்திர விற்பனையானது 2022 - 23ம் நிதியாண்டின் IV சீரிஸ் ஆனது வெளியாகவுள்ளது.
எப்போது தொடக்கம்? விலை எப்படி?
இந்த சீரிஸ் மார்ச் 6 அன்று வெளியிடப்படவுள்ளது. இதன் கடைசி தேதி மார்ச் 10 ஆகும். இந்த வெளியீட்டில் ஒரு கிராமுக்கு விலை 5611 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஆன்லைன் மூலமாக வாங்கும்போது 50 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும். ஆக ஆன்லைன் மூலமாக முதலீடு செய்யும்போது கிராமுக்கு 5561 ரூபாய் கொடுத்தால் போதுமானது.
யார் வாங்கலாம்?
இந்த தங்க பத்திரங்கள் இந்தியர்கள், ஹெச் யு எஃப் (HUFs), அறக்கட்டளைகள் மற்றும் பல்கலைக் கழங்கள், தொண்டு நிறுவனங்கம் என பலரும் வாங்கி வைக்கலாம்.
இந்த தங்க பத்திரங்கள், அரசுப் பத்திரச் சட்டம் 2006ன் கீழ் இந்திய அரசின் மூலம் ரிசர்வ் வங்கியால் அரசின் பத்திரங்கள் வடிவிலேயே வழங்கப்படுகின்றன.
எப்படியெல்லாம் வாங்கலாம்?
இந்த தங்க பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இங்கு வாங்க உங்கள் டீமேட் கணக்கு தேவைப்படும். இது தவிர வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலமும் வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைனிலும் எளிதாக வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எவ்வளவு வாங்கலாம்?
பொதுவாக ஒரு தனி நபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை வாங்கிக் கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும்.
வட்டி எவ்வளவு?
இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். எனினும் வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை. இதே பிசிகல் தங்கமாக வாங்கும்பட்சத்தில் இதனை எதிர்பார்க்க முடியாது.
கால அவகாசம்
இந்த தங்க பத்திர திட்டத்திற்கு 8 ஆண்டுகள் முதிர்வுகாலம். ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு. பிசிகல் தங்கத்தினை போன்றே இந்த தங்க பத்திரங்களையும் பிணையமாக வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம். எளிதில் கிடைக்கும். வட்டியும் குறைவு தான். மற்ற கடன்களை காட்டிலும் எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.
எப்படி பணம் செலுத்துவது?
இந்த தங்கப் பத்திரங்களுக்கான தொகையை ஒருவர் பணமாக செலுத்தினால் 20,000 ரூபாய் வரையில் செலுத்திக் கொள்ளலாம். அதற்குஜ் மேல் செலுத்த வேண்டும் எனில் டிடி ஆகவோ அல்லது இணைய வங்கி மூலமாகவோ செலுத்திக் கொள்ளலாம்.
வரி சலுகை?
தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால் முன் கூட்டியே உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு.
பிசிகல் தங்கமாக கிடைக்குமா?
தங்க பத்திரங்கம் முதிர்வுக்கு பிறகு தங்கமாக வாங்கிக் கொள்ள முடியுமா என்றால், நிச்சயம் முடியாது. இந்த தங்க பத்திர திட்டம் என்பது, பிசிகல் தங்கத்தின் தேவையை குறைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். மேலும் முதலீட்டு நோக்கில் உருவாக்க பட்ட ஒரு திட்டம். ஆக இந்த திட்டத்தில் பிசிகல் கோல்டாக பெற முடியாது. பணமாக மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.
பாதுகாப்பு புகலிடம்
தங்கம் பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படும் நிலையில், அதற்கு வட்டியும் கொடுத்து, விலை நிலவரத்திற்கு ஏற்ப விற்பனை செய்து கொள்ளலாம். வட்டி விகிதம், வரி சலுகை, பாதுகாப்பு, டிஜிட்டல் வடிவம், தங்கத்தினை போல பிணையமாக வைத்துக் கடன் வாங்கிக் கொள்ளலாம் என சலுகைகள் இதில் உள்ளன. அதோடு ரிசர்வ் வங்கி இப்பத்திரங்களை வெளியிடுவதால் பாதுகாப்பானதாகவும் பார்க்கப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கலாம் என பலதரப்பு நிபுணர்களும் கூறி வரும் நிலையில், தங்க பத்திரங்கள் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகின்றன.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications