இந்த ஆண்டு வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு மோசமான ஆண்டாக மாறிவிட்டது. வெள்ளி விலை கடந்த ஜனவரி மாதம் எட்டிய வரலாற்று உச்சத்திலிருந்து சுமார் 60% வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் வெள்ளி விலை இனி என்ன ஆகும் என்பது குறித்து முன்னணி நிதி நிறுவனமான BMO Capital Markets முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஸ்பாட் சந்தையில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 48.7 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த ஜனவரி மாதத்தில் 121.65 டாலராக இருந்தது. அதாவது, உச்சத்தில் இருந்து வெள்ளியின் விலை கிட்டதட்ட 60% சரிந்துள்ளது. இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை கடந்த ஜனவரியில் ஒரு கிராம் 425 ரூபாய் மற்றும் ஒரு கிலோ 4.25 லட்சன் ரூபாய் என வரலாற்று உச்சத்தை தொட்டது. தற்போது ஒரு கிராம் 195 ரூபாய்க்கும் ஒரு கிலோ 1.95 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் வெள்ளி விலை உயர்வதற்கும், அதற்கான தேவை அதிகரிப்பதற்கும் சோலார் துறைதான் முக்கிய காரணமாக இருந்தது. அதாவது மொத்த தேவையின் வளர்ச்சியில் சுமார் 55% பங்களித்தது. ஆனால், சோலார் துறையில் வெள்ளியின் பயன்பாடு குறைந்து வருவதால், அதன் தேவை குறைந்து விலையும் சரிகிறது.
பிஎம்ஓ கேபிடல் மார்க்கெட்ஸ் கணிப்பின்படி, உலகளாவிய வெள்ளி சந்தையானது 2030-ம் ஆண்டிற்குள் வரலாறு காணாத அளவுக்கு அதிகப்படியான உபரி நிலைக்கு தள்ளப்படலாம் என கூறுகிறது. எனவே வெள்ளிக்கான டிமாண்ட் இன்னமும் குறைய வாய்ப்புள்ளது என்கிறது. எனவே விலையும் சரியும் என்கிறது. வெள்ளி ஆபரணமாக மட்டுமில்லாமல் தொழில்துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே தொழில்துறை மந்த நிலையில் வெள்ளியின் டிமாண்டில் ஏற்ற இறக்கத்தை கொண்டு வந்து விலையையும் சரிய செய்கிறது.
இந்நிலையில் வெள்ளி விலை இனி என்ன ஆகும் என்பது தான் பலரும் முன் வைக்கப்படும் கேள்வி. தங்கம் பாதுகாப்பான முதலீடு என்ற அந்தஸ்தை தக்க வைத்து கொண்டு இருப்பதால் விலை இறங்கினால் வேகமாக உயர்ந்துவிடும், அது நீண்ட நாட்களுக்கு நீடிக்கும், ஆனால் வெள்ளி அப்படி இல்லை என்கின்றனர் நிபுணர்கள். அதாவது குறுகிய காலத்திலேயே வேகமாக விலை உயர்ந்து குறுகிய காலத்திலேயே வேகமாக சரியும் தன்மை கொண்டது. எனவே வெள்ளி முதலீட்டில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர்.
தங்கம் மற்றும் வெள்ளி மீது முதலீடு செய்துள்ளவர்கள் தங்களது முதலீடுகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். வெள்ளியின் விலை ஏற்றம் என்பது இனிவரும் காலங்களில் சர்வதேச சந்தை நிலவரங்கள், சோலார் தொழில்துறையின் தேவை மற்றும் முதலீட்டாளர்களின் ஆதரவை பொறுத்தே அமையும் என்பதால், எச்சரிக்கையுடன் இருக்க பரிந்துரைக்கின்றனர். புதிதாக வெள்ளி முதலீடுகளை தவிர்க்க அறிவுரை வழங்குகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

