நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கடந்து செல்லும் போது, காத்திருக்கும் நேரத்தினை குறைக்க பாஸ்டேக் திட்டமானது கொண்டு வரப்பட்டது.
இதன் படி, வாகனத்தின் முன்னால் பார்கோடு அடங்கிய பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும். இதன் மூலம் வாகனங்கள் ஒவ்வொரு சுங்கச் சாவடியை கடக்கும்போது பாஸ்டேக் கணக்கிலிருந்து பணம் தானாக கழித்துக் கொள்ளும்.
இந்த சேவையை பல்வேறு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஐசிஐசியை வங்கியின் பாஸ்டேக் பற்றித் தான்.
என்னென்ன ஆவணங்கள் தேவை
பாஸ்டேக் பெறுவதற்கு வாகனத்தின் ஆர்.சி. புத்தக நகல், இருப்பிடம் மற்றும் அடையாளச் சான்று நகல்கள், பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவை கட்டாயம் தேவை. பாஸ்டேக் ஸ்டிக்கர் 5 ஆண்டுகள் வரை செல்லத்தக்கது. பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் பிரத்யேக பாஸ்டேக் பாதையில் நுழைந்தால் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். சமீபத்தில் தான் பாஸ்டேக் கட்டாயம் என்று அறிவித்தது. எனினும் தற்போது கொரோனா காரணமாக சில சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தாலும், விரைவில் கடினமாக அறிவிப்புகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிஐசிஐ வங்கி – கூகுள் பே ஒப்பந்தம்
இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி, கூகுள்பேயுடன் பாஸ்டேக்கிற்கான ஒப்பந்தம் செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக இனி நீங்கள் உங்கள் பாஸ்டேக்கினை எளிதில் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்காக நீங்கள் உங்களது நெட்பேங்கினை லாகின் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. கூகுள் பேயினை பயன்படுத்தி எளிதில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
கூகுள் பே மூலம் பாஸ்டேக்
கடந்த 2013ம் ஆண்டு மும்பை - வதோதரா நடைபாதையில், தேசிய அளவில் பாஸ்டேக் சேவையினை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தியது. அதெல்லாம் சரி எப்படி கூகுள் பே மூலம் பாஸ்டேக் சலுகையினை பெற முடியும் வாருங்கள் பார்க்கலாம். உங்களது ஸ்மார்ட்போனில் கூகுள் பே செயலியினை பதிவிறக்கம் செய்து கொண்டு, பின் லாகின் செய்து கொள்ள வேண்டும். அதில் வர்த்தகம் பகுதியில், ஐசிஐசிஐ வங்கி பாஸ்டேக் என்ற பகுதியினை க்ளிக் செய்ய வேண்டும்.
பாஸ்டேக்கிற்கு எப்படி பதிவு செய்வது?
அதன்பிறகு Buy new Fastag என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு பான் எண், ஆர்சி நகல், வாகன எண், உங்களது முகவரியினை பதிவு செய்து கொண்டு, பின் பதிவு செய்ய வேண்டும். இதன் பிறகு நீங்கள் பதிவு செய்ய மொபைல் எண்ணுக்கு ஒரு ஒடிபி வரும். இதன் பிறகு உங்களது கூகுள்பே கணக்கிலிருந்து பாஸ்டேக்கிற்கு பணத்தினை அனுப்ப முடியும்.
பாஸ்டேக்கினை பெற பல வழிகள்
Amazon.in இணையதளம் மூலமாகவும், கூகுள் பே, போன் பே, ஏர்டெல் payments உள்ளிட்ட மொபைல் பேமண்ட் செயலிகள் மூலமாகவும் FASTag - ஐ வாங்கலாம். மேலும், ஹெச்டிஎப்டி (HDFC), ஐசிஐசிஐ வங்கி (icici bank), ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கோடக் மகேந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட இடங்களிலும் ஃபாஸ்டேக்கை வாங்கிக்கொள்ளலாம்.
ரீசார்ஜ் எப்படி?
உங்களது FASTag - ஐ ரீ சார்ஜ் செய்வது மிகவும் எளிதானது. வங்கிகள் மூலம் நீங்கள் பாஸ்டேக்கினை வாங்கியிருந்தால், அந்த வங்கிகள் கொடுத்திருக்கும் வாலட் மூலம் இன்டர்நெட் பேங்கிங் மூலமாக ரீ சார்ஜ் செய்யலாம், அல்லது வங்கி கிரெடிட் கார்டு (Credit card), டெபிட் கார்டு (Debit card) மூலமாகவும் பாஸ்ட்டேக்கினை ரீ சார்ஜ் செய்யலாம். இரண்டாவதாக, மொபைகளில் பயன்படுத்தும் பேமண்ட் செயலிகளான Paytm மற்றும் PhonePe, கூகுள் பே மூலமாகவும் ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம்.
Google Pay மூலம் மற்ற வங்கிகள்
கூகுள் பே மூலம் பல வங்கிகளில் வாங்கிய பாஸ்டேக்கினை இணைத்துக் கொண்டு, ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். குறிப்பாக ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கிகளில் வாங்கிய பாஸ்டேக்கினை கூகுள் பே-வில் இணைத்துக்கொள்ளலாம். அதோடு கோடக் மகேந்திரா வங்கி, IDFC First Bank, IndusInd Bank, Axis Bank, Bank of Baroda, ICICI Bank, Equitas Small Finance Bank, Federal Bank ஆகிய வங்கிகளின் சேவைகளும் கூகுள் பே வழங்குகிறது. இதற்காக நீங்கள் பிசினஸ் பில் என ஆப்சனை கிளிக் செய்து பாஸ்டேக்கினை தேர்வு செய்யலாம். அங்கு பல வங்கிகளின் பட்டியல் இருக்கும். அதில் உங்கள் வங்கியினை தேர்வு செய்து சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications