செல்ல மகளின் எதிர்காலத்திற்கு 1 கோடி ரூபாய் திரட்ட ஈசியான ஐடியா - SIP.. ஒரு எளிய கணக்கு..!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் பெண்கள் நுழைந்து பெரும் சாதனைகளை புரிந்து வருகின்றனர். இதற்குக் காரணம் இப்போதெல்லாம் பெற்றோர்கள் தங்களது மகளின் கல்வி மீது அதிக ஈடுபாட்டைக் காட்டுகின்றனர்.

இருப்பினும் இந்தியாவில் கல்விக்கு பெரும் செலவு செய்ய வேண்டியிருப்பதால் பிள்ளைகளை படிக்க வைக்க நிறைய பணம் தேவை. ஆனால் இதற்காக சோர்ந்து போய் உட்கார்ந்து விடாமல் உங்களது மகளின் கல்விச் செலவுக்காக இப்போதே நீங்கள் மியூச்சுவல் பண்டுகளில் எஸ்ஐபி எனப்படும் முறையான சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். அவற்றில் இருந்து சில ஆண்டுகாலம் கழித்து கிடைக்கும் வருவாயில் மகளின் கல்விச் செலவை சமாளிக்கலாம்.

செல்ல மகளின் எதிர்காலத்திற்கு 1 கோடி ரூபாய் திரட்ட ஈசியான ஐடியா - SIP.. ஒரு எளிய கணக்கு..!!

எஸ்ஐபி திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் முதலீடு செய்ய வேண்டும். உதாரணத்துக்கு ரூ.20 லட்சம் திரட்ட வேண்டுமென்றால் மாதம் ரூ.20,000 முதலீடு செய்ய வேண்டும். இதனால் ஆண்டுக்கு நீங்கள் ரூ.2,40,000 முதலீடு செய்கிறீர்கள். இந்த மாதாந்திர முதலீட்டை நீங்கள் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டும்.

இதன் மூலம் 6 ஆண்டுகளில் மொத்தம் ரூ.14.44 லட்சம் சேர்ந்திருக்கும்.
இந்த முதலீட்டுக்கு உங்களுக்கு ஆண்டுக்கு 12 சதவீத வருவாய் அளிக்கும் என கணக்கிட்டால் கூட்டு வட்டியும் வரும் பட்சத்தில் உங்களுக்கு மொத்தம் ரூ.6.75 லட்சம் வட்டியாகக் கிடைக்கும்.

இந்த சேமிப்பு முதிர்ச்சி அடையும்போது முதலீட்டு தொகை, கூட்டுவட்டி அனைத்தும் சேர்ந்து மொத்தம் ரூ.21.15 லட்சம் கிடைக்கும்.

ஆனால் ஐந்து ஆண்டுகள் என்பது நீண்டகால முதலீட்டுக்கு மிகக் குறைந்த காலகட்டமாகும். எனவே நீங்கள் உங்களது முதலீட்டை அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் உங்களது முதலீடானது கூட்டு வட்டி மூலம் மிக விரைவாக அதிகரிக்கும்.

நான்கு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் அல்லது பத்தாண்டுகளுக்கு மாதம் ரூ.20,000 முதலீடு செய்தால் உங்களது மொத்த முதலீட்டு தொகையானது ரூ.24 லட்சமாகும். அதன் மூலம் உங்களுக்கு ரூ.22.46 லட்சம் வட்டியாகக் கிடைக்கும். 10 ஆண்டுகளில் முதிர்ச்சி பெறும்போது ரூ.46.5 லட்சமாக பெருகியிருக்கும்.

உங்கள் மகள் பிறந்த உடனேயே நீங்கள் 15 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக முதலீட்டை செய்து வாருங்கள். அவளது உயர்கல்வியானது பள்ளிக்கல்வியை முடித்த பின்னர்தான் தொடரும் என்பதால் 15 ஆண்டுகாலம் என்பது உங்களுக்குப் போதுமானதாக இருக்கும். 12 சதவீத கூட்டு வட்டியில் நீங்கள் மாதா மாதம் ரூ.20,000 சேமித்து வந்தீர்களானால் அது ரூ.1 கோடிக்கும் மேல் பெருகிவிடும்.

மாதம் ரூ.20,000 என்ற கணக்கில் உங்களது எஸ்ஐபி திட்டத்தின் 15 ஆண்டுகால மொத்த முதலீடு ரூ.36 லட்சம் ஆகும். அதற்கு ரூ.64.92 லட்சம் வட்டியாகக் கிடைக்கும். எனவே உங்களுக்கு கிடைக்கும் முதிர்ச்சித் தொகையானது ரூ.1.01 கோடியாக இருக்கும். 15 ஆண்டுகள் கழித்து ரூ.1.01 கோடி என்பது கணிசமான தொகையாகும். உங்களது மகளின் கல்விச் செலவுக்கு போதுமானதாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+