ஓய்வு காலத்திற்காக சேமிக்கவும், முதலீடு செய்யவும் திட்டமிடும்போது இன்றைய பணத்தின் மதிப்பையும் இனி எதிர்காலத்தில் பணத்தின் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொண்டு தான் சேமிக்க வேண்டும். அடுத்த 20 முதல் 30 வருடங்கள் கழித்து பணத்தின் மதிப்பு அதேபோல் இருக்குமா? எனக் கேட்டால் கண்டிப்பாக இருக்காது. ஏனெனில் பணவீக்கம் படிப்படியாக பணத்தின் வாங்கும் சக்தியை குறைத்து வருகிறது. இன்று மலிவாக இருக்கும் ஒரு பொருள் எதிர்காலத்தில் மிகவும் விலை உயர்ந்ததாக மாறலாம்.
பணவீக்கம் என்றால் என்ன?: பணத்தின் வாங்கும் திறன் குறைவதையே பணவீக்கம் என்கிறோம். அதாவது 100 ரூபாயை கொண்டு இன்று நாம் வாங்கக்கூடிய பொருட்களை அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் வாங்க முடியுமா? எனக் கேட்டால்.. கண்டிப்பாக வாங்க முடியாது. உற்பத்தி விலை அதிகரிப்பு மற்றும் பிற விஷயங்களின் காரணமாக அவற்றின் விலை உயர்ந்திருக்கலாம்.

இப்படி இருக்கையில் பணவீக்கம் நமது அன்றாட தேவைகளின் விலையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். 2010-ல் சிலிண்டரின் விலை 350 ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது 1000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 7.6 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
அதேபோல 2009-ஆம் ஆண்டில் 100 ரூபாய்க்கு 2 லிட்டர் பெட்ரோல் வாங்கலாம். ஆனால் இன்று அந்த பணத்தில் 1 லிட்டர் மட்டுமே வாங்க முடிகிறது. இதை வைத்தே இன்றைய காலத்தில் பணவீக்கத்தால் வாங்கும் திறன் கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே இன்றைய ரூ. 1 கோடி அடுத்த 20 ஆண்டுகளில் எவ்வளவாக இருக்கும்? என்பதைப் பார்ப்போம்.
பணவீக்கத்தை அளவிட அரசு வைத்திருக்கும் ஒரு குறியீடு தான் நுகர்வோர் விலைக் குறியீடு. இதனை ஆங்கிலத்தில் CPI எனக் கூறுவர். உணவு, உடை, வீட்டு வசதி, போக்குவரத்து, சுகாதாரம் என அனைத்து பொருட்களின் விலை உயர்வை கணக்கிடவும் இந்த CPI பயன்படுத்தப்படுகிறது.
பணவீக்கத்திற்கு எதிரான சேமிப்பு: பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற முதலீட்டு திட்டங்கள் ஆண்டுக்கு 6 முதல் 8.25 சதவீதம் வரை வருமானத்தை வழங்குகின்றன. மறுபுறம் மியூச்சுவல் ஃபண்டுகள் இதற்கு நேர்மாறான வருமானத்தை வழங்குகின்றன. மியூச்சுவல் ஃபண்டுகள் 12 சதவீத முதல் 15 சதவீதம் வரை வருடாந்திர வருமானத்தை வழங்கியுள்ளன. ஆனால் பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால் மியூச்சுவல் ஃபண்டுகளின் உண்மையான வருமானம் 6 முதல் 9 சதவீதம் வரை இருக்கும்.
அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.1 கோடி சேமிக்க என்ன செய்ய வேண்டும்?: 40 வயதான ஒருவர் தன் ஓய்வுக்கான நிதியை சேமிக்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக அவர் 60 வயதில் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்றால், அவர் மாதம் 18,000 எஸ்ஐபி முதலீடு செய்ய வேண்டும்.
இதற்கு 15 சதவீத வருடாந்திர வருமானம் கிடைத்தால் இந்த நிதியை எளிதில் அடைந்து விடலாம். இந்த ஒட்டுமொத்த சேமிப்பு காலத்திலும் பணவீக்க விகிதம் 5% என வைத்துக்கொண்டோம். அப்படியானால் மொத்தமாக 43.2 லட்சத்தை முதலீடு செய்திருப்பார். இதற்கு ரூ. 59.64 லட்சம் வருமானம் கிடைக்கும். இதன் மூலம் 20 ஆண்டுகள் கழித்து ரூ.1.02 கோடி வருமானம் பெற முடியும்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications