தினமும் ரூ.50 முதலீடு செய்து ரூ.1 கோடி பெறுவது எப்படி?

எந்த ஒரு விஷயத்தையும் ஒரே நாளில் முடித்து விட முடியுமா? என்று கேட்டால் சற்று கடினம் தான். அதற்கு தினமும் சிறு முயற்சியை செய்ய வேண்டும். இதே போன்று தான் முதலீடும் தினமும் ஒரு சிறு தொகையை சேமித்தால் நீண்ட காலத்தில் பெரிய தொகையை பெற முடியும். பெரிய தொகையை உருவாக்கிய முதலீட்டாளர்களை பார்த்தோமானால் கண்டிப்பாக அவர்கள் ஒரு சிறிய முதலீட்டில் தான் தொடங்கி இருப்பார்கள். இந்த பதிவில் தினமும் ரூ. 50 சேமித்து எப்படி ரூ. 1 கோடியை பெற முடியும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

ஒரு நாளைக்கு 50 ரூபாய் சேமிப்பதன் மூலமும், கூட்டு வட்டியை வழங்கும் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமும் 1 கோடி ரூபாய்க்கு மேல் கார்பஸை உருவாக்க முடியும். இதை நம்புவதற்கு உங்களுக்கு சற்று கடினமாக தான் இருக்கும்.

 தினமும் ரூ.50 முதலீடு செய்து ரூ.1 கோடி பெறுவது எப்படி?

தினமும் ரூ.50 சேமித்து எப்படி ரூ.1 கோடி பெறுவது?: எந்த முதலீடானாலும் சரி முன்கூட்டியே தொடங்குவது அபரிமிதமான லாபத்தை வழங்கும். அதுவும் கூட்டு வட்டி திட்டங்களில் முதலீடு செய்யும்போது அற்புதங்களை பெற முன்கூட்டியே தொடங்குவது நல்ல வருமானத்தை பெற்று தரும்.

நீங்கள் தினமும் ரூ.50 சேமித்து ரூ.1 கோடி உருவாக்க வேண்டும் என்றால், முடிந்தவரை விரைவில் முதலீடு செய்ய தொடங்குங்கள். ஒரு நாளைக்கு ரூ.50 சேமித்தால், மாதத்திற்கு ரூ.1500 ரூபாய், அப்படியானால் ஒரு வருடத்திற்கு 18,000 ரூபாய்.

முதலீட்டை பழக்கமாக்கிக் கொள்ள, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை உங்கள் கணக்கிலிருந்து பிடித்துக் கொள்ளும்படி ஒரு மியூச்சுவல் ஃபண்ட் SIP திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்கலாம்.

இப்போது, நீங்கள் 25 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், ரூ.1 கோடி உருவாக்குவது எப்படி என்பதைப் பார்ப்போம்.

உங்களுடைய ஒட்டுமொத்த முதலீட்டு காலத்திற்கும் 14 சதவீத வருமானம் வழங்கப்பட்டால், 10 ஆண்டுகளில், உங்கள் முதலீடு ரூ.1,80,000 ரூபாயாக இருக்கும். இதற்கு நீண்ட கால முதலீட்டு வருமானம் ரூ.2,13,137 ஆகவும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த தொகை ரூ.3,93,137 ஆக இருக்கும்.

20 ஆண்டுகளில், உங்கள் முதலீடு ரூ.3,60,000 ரூபாயாக இருக்கும். இதற்கு நீண்ட கால முதலீட்டு வருமானம் ரூ.16,14,519 ஆகவும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த தொகை ரூ.19,74,519 ஆக இருக்கும்.

30 ஆண்டுகளில், உங்கள் முதலீடு ரூ.5,40,000 ரூபாயாக இருக்கும். இதற்கு நீண்ட கால முதலீட்டு வருமானம் ரூ.77,95,583 ஆகவும், 30 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த தொகை ரூ.83,35,583 ஆக இருக்கும்.

32 ஆண்டுகளில், உங்கள் முதலீடு ரூ.5,76,000 ரூபாயை நெருங்கும். இதற்கு நீண்ட கால முதலீட்டு வருமானம் ரூ.1,04,76,949 ஆகவும், 32 ஆண்டுகளில் மொத்த தொகை ரூ.1,10,52,949 ஆக இருக்கும்.

ஒவ்வொரு பத்தாண்டிலும் ரூ.1,80,000 முதலீடு செய்து, ரூ.2,13,137, ரூ.14,01,382, ரூ.61,81,064 என வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்லும். இதற்கு மிக முக்கிய காரணம் கூட்டு வட்டியின் நன்மை மட்டுமே.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.36,000 கூடுதலாக முதலீடு செய்தால், கூடுதலாக ரூ.26,81,366 கிடைக்கும்.

முதலீட்டைப் பொறுத்தவரை 32 ஆண்டுகள் நீண்ட காலம்தான். ஆனால், மாதம் ரூ.1500 முதலீடு செய்வது பெரிய தொகை அல்ல. அதனால், 25 வயதில் தொடங்கினால், 57 வயதில், வெறும் ரூ.5,76,000 முதலீட்டில் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும்.

நீங்கள் SIP முதலீடு தொடங்க இருந்தால் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய இருக்கிறீர்கள்? என்ற விவரங்களை கொடுத்தால் நீங்கள் முதிர்வு காலத்தில் எவ்வளவு வருமானம் பெறுவீர்கள் என்பதை SIP ஆன்லைன் கால்குலேட்டர்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கணக்கீடுகள் 50 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் ஈட்ட முடியும் என்பதை பற்றிய விவரங்களே. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. நீங்கள் SIP திட்டங்களில் முதலீடு செய்ய இருந்தால் உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி தக்க ஆலோசனை பெற்று, அதன் பின் முதலீட்டு முடிவுகளை எடுக்கவும்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+