நீங்கள் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வீர்கள் எனில் கடந்த 25 வருடத்தில் அதிகப்படியான லாபத்தை கொடுத்த பண்ட் எது என்பதை தெரிந்துக்கொள்ள கட்டாயம் ஆர்வம் இருக்கும்.
இந்திய முதலீட்டு சந்தையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த 36 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் 10,000 ரூபாய் தொகையை SIP முதலீட்டு முறையில் பணத்தை கொட்டிய முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கியுள்ளன.

நவம்பர் 4, 2000 முதல் நவம்பர் 4, 2025 வரையிலான காலக்கட்டத்தில் ஈக்விட்டி ஹைபிரிட் மற்றும் செக்டோரல் ஃபண்டுகளைத் தவிர்த்து ஈக்விட்டி ஃபண்டுகளை மட்டும் ஆய்வில் உட்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 18 ஃபண்டுகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் சந்தையில் உள்ளன.
இந்த 25 ஆண்டுகளில் ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமும் மாதம் 10000 ரூபாய் முதலீட்டின் மூலம் இன்று அதன் மதிப்பு எந்த அளவுக்கு உயர்ந்திருக்கும், இதேபோல் XIRR விகிதத்தின் விபரத்தையும் தெரிந்துக்கொள்வோம்.
XIRR என்பது Extended Internal Rate of Return என்பதன் சுருக்கம். இது முதலீட்டின் உண்மையான வருமான விகிதத்தை (Annual Return Percentage) கணக்கிடும் ஒரு முறை. சாதாரண வட்டி அல்லது SIP ரிட்டர்ன் போலல்லாமல், பணம் செலுத்திய தேதி, பெற்ற தேதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு துல்லியமாக கணக்கிடும்.
- நிப்பான் இந்தியா க்ரோத் மிட் கேப் ஃபண்ட் ரூ.8.81 கோடியாக உயர்த்தி 22.14% XIRR அளித்தது.
- ஃபிராங்க்லின் இந்தியா மிட் கேப் ஃபண்ட் ரூ.6.52 கோடி, 20.32% XIRR கொடுத்தது.
- HDFC ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் ரூ.5.91 கோடி, 19.72% XIRR பெற்றது.
- SBI கான்ட்ரா ஃபண்ட் ரூ.5.81 கோடி, SBI ELSS டாக்ஸ் சேவர் ரூ.5.50 கோடி, SBI லார்ஜ் & மிட்கேப் ரூ.5.02 கோடி அளித்தன.
- ஃபிராங்க்லின் இந்தியா ஃப்ளெக்ஸி கேப் ரூ.4.75 கோடி, 18.40% XIRR கொடுத்தது.
- HDFC ELSS டாக்ஸ் சேவர் ரூ.4.70 கோடி, ICICI ப்ரூ ELSS ரூ.4.69 கோடி அளித்தன.
- ICICI ப்ரூ லார்ஜ் & மிட் கேப் ரூ.3.93 கோடி, 17.24% XIRR பெற்றது.
- குவாண்ட் ஸ்மால் கேப் ரூ.3.37 கோடி, 16.31% XIRR.
- குவாண்ட் ELSS ரூ.3.35 கோடி, 16.26% XIRR கொடுத்தன.
- சுந்தரம் ELSS ரூ.3.20 கோடி, சுந்தரம் மல்டி கேப் ரூ.3.09 கோடி அளித்தன. LIC MF ஃப்ளெக்ஸி கேப் ரூ.1.55 கோடி, 11.47% XIRR பெற்றது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications