மாதம் ரூ. 2000 எஸ்ஐபி முதலீடு செய்தால் 10 ஆண்டுகள் கழித்து எவ்வளவு கிடைக்கும்? ஆச்சரியமான வருமானம்!

இப்போதெல்லாம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான பிரபலமான வழியாக SIP-கள் பார்க்கப்படுகிறது. இதன் முக்கிய நன்மைகளில் ஒன்று என்னவென்றால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலக்கெடுவைப் பொறுத்து முதலீடு செய்யலாம். அதாவது ரெக்கரிங் டெபாசிட்களை போல மாதம் மாதம் முதலீடு செய்யலாம். தேவைப்பட்டால் காலாண்டுக்கு ஒருமுறை முதலீடு செய்யலாம் அல்லது அரையாண்டுக்கு ஒரு முறை முதலீடு செய்யலாம். இப்படி நெகிழ்வான முதலீட்டு விருப்பங்களை கொண்டிருப்பதால் எஸ்ஐபி-கள் பல முதலீடாளர்களின் விருப்பத் தேர்வாக இருந்து வருகிறது.

இதனால் தற்போது எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்யும் இளைஞர்கள் அதிகரித்துவிட்டனர். நீண்ட காலத்திற்கு எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த பதிவில் ஒருவர் மாதம் 2000 ரூபாய் எஸ்ஐபி-களில் முதலீடு செய்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

மாதம் ரூ. 2000 எஸ்ஐபி முதலீடு செய்தால் 10 ஆண்டுகள் கழித்து எவ்வளவு கிடைக்கும்? ஆச்சரியமான வருமானம்!

எஸ்ஐபி என்றால் என்ன?: SIP என்பது ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்டதொகையை முதலீடு செய்ய உதவும் ஒரு திட்டமாகும். இந்த முதலீட்டு தொகை நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஃபண்டில் போடப்படும். ஒரு சிறிய தொகையுடன் கூட நீங்கள் எஸ்ஐபி திட்டத்தை தொடங்கலாம். இதன் மூலம் காலப்போக்கில் சேமிப்பதே தெரியாமல் பணத்தை அதிகரிக்க முடியும்.

மாதத்திற்கு ரூ. 2000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்?: ஒருவர் எஸ்ஐபி திட்டத்தில் மாதம் 2000 ரூபாய் முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு சராசரியாக 12 சதவீத ஆண்டு வருமானம் கிடைத்தால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தோராயமாக ரூ. 2,40,000-த்தை முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வட்டி வருமானமாக 2,24,678 ரூபாய் கிடைக்கும் .அதாவது நீங்கள் செய்த முதலீட்டுக்கு அப்படியே இரண்டு மடங்கு வருமானம். SIP திட்டத்தை பொருத்தவரையில் கூட்டு வட்டியின் மூலம் பலன் கிடைக்கும். கூட்டு வட்டி முறையில் பலன் கிடைப்பதால் உங்களுடைய முதலீடு வேகமாக வளரும்.

மாதம் 3000 ரூபாய் எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்?: நீங்கள் ஒரு மாதத்திற்கு ரூ.3000 என்ற வீதத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் 10 ஆண்டுகளில் உங்களுடைய முதலீடு 3,60,000 ரூபாயாக இருக்கும். இதற்கு வட்டி வருமானமாக 3,37,017 ரூபாய் வட்டி கிடைக்கும். அப்படியானால் 10 ஆண்டுகள் கழித்து 6,97,017 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.

எஸ்ஐபியின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று என்னவென்றால் நீங்கள் சிறிய அளவிலும் முதலீடு செய்யலாம். படிப்படியாக உங்களுடைய முதலீட்டை அதிகரிக்கலாம். இது தவிர ஒரே நேரத்தில் பெரிய அளவிலான முதலீடு செய்வதற்கு பதிலாக இது போன்ற முதலீடுகள் சாமானியர்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை ஆபாயங்களுக்கு உட்பட்டவை. எனவே ஒரு பண்டின் செயல் திறனின் அடிப்படையில் முதலீடு செய்யக்கூடாது. ஏனெனில் முன்பு நல்ல வருமானம் வழங்கிய ஒரு பண்டு எதிர்காலத்திலும் வருமானம் வழங்கும் என்று சொல்லிவிட முடியாது. அதேபோல எந்த ஒரு முதலீட்டு முடிவும் எடுப்பதற்கு முன்பு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யுங்கள்.

எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்தால் அடுத்த 10 வருடங்களில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதற்கான தோராயமான கணக்கீடு தான் இந்த பதிவு. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. எந்த ஒரு முதலீட்டு முடிவு எடுத்தாலும் சுய விருப்பத்தின் பேரில் எடுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+