உங்கள் 20 ஆண்டுகால உழைப்பின் பலன் கோடிகளாக மாறப்போகிறதா அல்லது வெறும் காகிதமாக மாறபோகிறதா என்பது, இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் தான் தீர்மானிக்கின்றன. உங்கள் மாத தவணை உங்கள் பணத்தை உறிஞ்சி, உங்களை நிதி ரீதியாக பெரிய அளவில் வளர விடாமல் தடுக்கும். இதே உங்கள் வங்கி வைப்பு நிதியானது பணத்தை பாதுகாப்பாக வைத்திருந்தாலும், பணவீக்கத்தை வெல்லுமா என்பது பெரிய கேள்வியே. ஆனால் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் எஸ் ஐ பி (SIP) , உங்கள் செல்வத்தை வளர்க்கும் அம்சமாக இருக்கும். இருப்பினும் இந்த மூன்றின் உண்மையான நிலவரம் என்ன விரிவாகப் பார்ப்போம்.
மூன்று பேர் ஒரே தொகையை ஒவ்வொரு மாதமும் வீட்டுக் கடன் தவணைக்காகவும், மாத எஸ் ஐ பி தவணையாகவும், ஆர்டி-க்காவும் ஒதுக்கீடு செய்வதாகவும் வைத்துக் கொள்வோம். அதற்கு சராசரியாக 8.5% வருமானம் வருவதாகவும் வைத்து கணக்கிட்டு பார்த்தால், முடிவுகள் ஒவ்வொன்றும் வேறு வேறாக இருக்கின்றன. இது குறித்து மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரான ஆதித் அஹ்லாவத், பேட்டி ஒன்றில் விரிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.

வீட்டுக் கடன் தவணை?
அதில் வீட்டுக் கடன் 20 லட்சத்திற்கு 8.5% வட்டி விகிதத்தில், 20 ஆண்டுகளுக்கு வாங்கினால், உங்கள் மாத தவணைத் தொகையானது சுமார் 17,356 ரூபாயாக இருக்கும். 20 ஆண்டுகளில் நீங்கள் செலுத்தும் மொத்த தொகை 41.65 லட்சமாகும். இதில் அசலை தாண்டி வட்டியாக மட்டும் 21.65 லட்சம் ரூபாய் செலுத்துவீர்கள். அதன் பயனாக நீங்கள் வாங்கிய வீடு உங்களுக்கு சொந்தமானதாகும்.
இதில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், வாங்கிய வீட்டின் மதிப்பு கோடிக்கணக்கில் அதிகரித்தும் இருக்கலாம் அல்லது சந்தை மதிப்பு குறைந்தும் இருக்கலாம். இதில் வீட்டை பராமரிக்கும் செலவுகள், அவசர தேவைக்கு என விற்பனை செய்ய நினைக்கும்போது பல சிரமங்கள் இதில் அடங்கும்.
எஸ் ஐ பி முதலீடு
மேற்கண்ட அதே 17,356 ரூபாய் தொகையை ஒருவர் மாதந்தோறும் மியூச்சுவல் ஃபண்ட் எஸ் ஐ பி மூலம் முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை 20 வருடங்கள் தொடர்வதாகவும், அதற்கு சராசரியாக 8.5% வருமானம் கிடைப்பதாகவும் கணக்கிட்டு பார்த்தால், உங்கள் பணம் 1.09 கோடி ரூபாய் அளவுக்கு வளர்ந்திருக்கும். இதில் நீங்கள் செலுத்திய தொகை 41.65 லட்சம் ரூபாய் தான். ஆனால் உங்கள் வருமானம் 67.16 லட்சம் ரூபாயாக வளர்ந்திருக்கும். பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் கூட்டு வட்டி எவ்வளவு பெரிய லாபத்தை ஈட்டி கொடுக்கும் என்பதற்கு இதுவே சாட்சி.
வங்கி வைப்பு நிதி / தொடர் வைப்பு நிதி
மேற்கண்ட அதே மாதம் 17,356 ரூபாய் தொகையை 8.5% வட்டி விகிதத்தில் ஒரு வங்கி தொடர் வைப்பு நிதித் திட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். அதன் மதிப்பு 1.01 கோடி ரூபாயாக வளர்ந்திருக்கும். இதன் மூலம் நீங்கள் ஈட்டிய வருமானம் சுமார் 59.10 லட்சம் ரூபாயாகும். இது நிலையான வருமானத்தைத் தந்தாலும், எஸ் ஐ பி மூலம் கிடைக்கும் லாபத்தை விட சற்று குறைவுதான்.
ஆக ஒருவர் பணத்தை வளர்க்க எவ்வளவு பணம் முதலீடு செய்கிறார் என்பதை விட, அதை எங்கே முதலீடு செய்கிறார் என்பதே முக்கியம். அதை எவ்வளவு காலம் முதலீடு செய்கிறார் என்பதும் முக்கியம். எஸ் ஐ பி-யை பொறுத்த வரையில் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது. இதே ஆர்.டி திட்டமானது லாபம் சற்று குறைவாக இருந்தாலும் பாதுகாப்பானது. மாத தவணையை பொறுத்த வரையில், பெரிய அளவிலான சொத்து கிடைக்கும். ஆனால் அவசரத்திற்கு பணமாக்க முடியாது. அதோடு பராமரிப்பு செலவுகளும் உண்டு. ஆக உங்கள் முதலீட்டை இலக்கிற்கு ஏற்ப சரியான ஆலோசனையுடன் திட்டமிடுங்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications