நம்முடைய பணத்தை சரியான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்தால் நிச்சயம் எதிர்பார்த்த வருமானத்தை கொடுக்கும். எனவே பணத்தை முதலீடு செய்வது என்பது ஒரு கலை . ஒரு சிலர் ஒரே மொத்த தொகையாக பணத்தை முதலீடு செய்வார்கள். ஒரு சிலர் மாதம் தோறும் எஸ் ஐ பி முறையில் செய்வார்கள் .
10,000 ரூபாயை மாதம் தோறும் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவர்கள் மற்றும் 10 லட்சம் ரூபாயை ஒரே முறையாக முதலீடு செய்பவர்கள் இந்த இரண்டு பேரில் யார் முதலில் கோடீஸ்வரர் ஆவார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எஸ்ஐபி முதலீடு: எஸ்ஐபி என்பது சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என அழைக்கிறோம் . அதாவது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உதாரணமாக மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்து கொண்டு வருவது. இதன் மூலம் நீங்கள் குறைந்த தொகை தான் மாதம் தோறும் உங்கள் பாக்கெட்டில் இருந்து முதலீடு செய்வீர்கள். ஆனால் நீண்ட கால அடிப்படையில் அது பெரிய சொத்தாக உங்களுக்கு வளர்ந்து நிற்கும்.
லம்ப்சம் முதலீடு: லம்ப்சம் முதலீடு என்பது உங்கள் கைவசம் ஒரு பெரிய அளவிலான தொகை இருக்கிறது அந்த தொகையை மொத்தமாக ஒரு திட்டத்தில் முதலீடு செய்து விடுவது. உதாரணமாக உங்களிடம் ஒரு ஐந்து லட்சம் ரூபாய் இருக்கிறது என்றால் ஐந்து லட்சத்தையும் மொத்தமாக ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து விடுவது. இந்த முதலீட்டைப் பொறுத்தவரை ஒரு பெரிய அளவிலான தொகை அந்த முதலீட்டில் சென்று விடும்.
எது முதலில் வளரும்: இந்த இரண்டு முதலீட்டிலுமே காம்பவுண்டிங் செய்யும் மேஜிக் தான் நம்மளுடைய பணத்தை பெரிய அளவிற்கு வளர்த்து காட்டுகிறது. நாம் தற்போது ஆண்டுக்கு 12 சதவீதம் லாபம் தரக்கூடிய ஒரு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறோம் என வைத்துக்கொள்ளலாம். மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாயில் எஸ்ஐபி முறையில் ஆண்டுக்கு 12 சதவீதம் லாபம் தரக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்கிறார் எத்தனை ஆண்டுகளில் 1 கோடி இலக்கை எட்டுவார், 10 லட்சம் ரூபாய் தொகையை மொத்தமாக ஒரே முறை முதலீடாக செய்பவர் எப்போது 1 கோடி இலக்கை எட்டுவார் என கணக்கிடலாம்.
எஸ்ஐபி:
மாதம் ரூ.10,000
ஆண்டு வளர்ச்சி - 12%
21 ஆண்டுகளில் - ரூ.1 கோடி
செய்த முதலீடு - ரூ.25.20 லட்சம்
கிடைக்கும் லாபம் - ரூ.88.66 லட்சம்
லம்ப்சம்:
ஒரு முறை முதலீடு - ரூ.10 லட்சம்
ஆண்டு வளர்ச்சி - 12%
21 ஆண்டுகளில் - ரூ.1 கோடி
செய்த முதலீடு - ரூ.10 லட்சம்
கிடைக்கும் லாபம் - ரூ.98 லட்சம்
இரண்டு முதலீடுமே நமக்கு 21 ஆண்டுகளிலேயே ஒரு கோடியாக வளர்ந்து விடுகிறது. ஆனால் எஸ்ஐபி முறையில் நாம் செய்த முதலீடு 25 லட்சம், லம்ப்சம் முறையில் நாம் செய்த முதலீடு 10 லட்சம் தான். இருந்தாலும் இந்த முடிவினை தனிநபர்கள் அவர்களின் வருமானம் செலவு உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு தான் எடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications