ரூ. 5000 முதலீடு.. 12 சதவீத வட்டி விகிதத்தில் லாபத்தை அள்ளி வழங்கும் SIP முதலீடு!

மியூச்சுவல் ஃபண்டு பற்றி அவ்வளவாக தெரியாத நபர்களும் அதிகம் முதலீடு செய்வது SIP முதலீடுகளில் தான். சில்லறை முதலீட்டாளர்களும் மியூச்சுவல் ஃபண்டு SIP முதலீட்டை ஒரு சிறந்த தேர்வாக பார்க்கின்றனர். SIP முதலீடுகள் முதலீட்டாளர்கள் இடையே பிரபலமாவதற்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால் மாதம் தோறும் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை என முதலீடுகளை பிரித்து முதலீடு செய்யும் ஆப்ஷன் இதில் உள்ளது. இந்த பதிவில் மியூச்சுவல் ஃபண்டு SIP முதலீட்டில் மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்து, 26 வருடங்களில் எப்படி பணக்காரராக முடியும் என்பதைப் பார்ப்போம்.

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் மாதாந்திர SIP பங்களிப்பு ரூ. 21,262 கோடி என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. மியூச்சுவல் ஃபண்டுகள் 40 முதல் 90 சதம் வரையிலான வருடாந்திர லாபத்தை வழங்கியுள்ளன.

 ரூ. 5000 முதலீடு.. 12 சதவீத வட்டி விகிதத்தில் லாபத்தை அள்ளி வழங்கும் SIP முதலீடு!


ஆக்சிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் கடந்த ஒரு வருடத்தில் 41.63 சதவீத லாபத்தையும், ஆதித்ய பிர்லா சன் லைஃப் PSU ஈக்விட்டி ஃபண்ட் 89.52 சதவீத லாபத்தையும் வழங்கியுள்ளன. இந்த லாபம் ஆகஸ்ட் 2023 முதல் ஆகஸ்ட் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில் வழங்கப்பட்டுள்ளன.

பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் 38.5 சதவீதமும், நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் 55.58 சதவீதமும், எஸ்பிஐ புளூசிப் ஃபண்ட் 28.27 சதவீதமும், கோடக் ஈக்விட்டி ஃபண்ட் 45.21 சதவீதமும் மற்றும் ஆக்சிஸ் மிட்கேப் போன்ற பிற பிரபலமான மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் கடந்த ஒரு வருடத்தில் சிறப்பான வருமானத்தை அளித்துள்ளது.

மாதந்தோறும் 5,000 ரூபாய் SIP முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்?: மாதம் மாதம் தொடர்ந்து ஒருவர் ரூ. 5,000 எஸ்ஐபி முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு ஆண்டு வருவாயாக 12 சதவீதம் வழங்கப்படுகிறது. மேலும் ஒரு நபர் 2024-ஆம் ஆண்டில் தொடங்கி.. தொடர்ந்து 26 ஆண்டுகளுக்கு மாதம் 5,000 முதலீடு செய்து வருகிறார்.

அப்படியானால் 2050-ஆம் ஆண்டிற்குள் முதலீடு செய்த தொகை ரூ. 15.6 லட்சமாக இருக்கும். மேலும் இதற்கான வருமானம் ரூ. 91.96 லட்சமாக இருக்கும். SIP முதலீடுகள் பொதுவாக கூட்டு வட்டியின் மூலம் பலன்களைத் தருகின்றன. கூட்டு வட்டி என்றால் உங்களுடைய வட்டிக்கு வட்டி வழங்கப்படும்.

மேலும் ஸ்டெப் அப் SIP-கள் இன்னும் சிறந்த தேர்வாக இருக்கும். ஸ்டெப் அப் SIP-கள் என்றால் வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை உயர்த்தி முதலீடு செய்வதை குறிக்கிறது.

அதே போல நீங்கள் ரூ.15.6 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்தால், 2050-ஆம் ஆண்டில் உங்களின் மொத்த வருமானம் ரூ.2.97 கோடியாக இருக்கும்.

பலருக்கும் இந்த கணக்கீடு பற்றிய குழப்பம் ஏற்படலாம். அப்படியானால் நீங்கள் எஸ்ஐபி கால்குலேட்டர்களை பயன்படுத்தலாம். ஆன்லைனிலேயே எவ்வளவு முதலீடு செய்ய இருக்கிறீர்கள்? எவ்வளவு வட்டி விகிதம்? என்ற விவரங்களை என்டர் செய்தால் போதும் முதிர்வு காலத்தின் போது உங்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது தெரிந்துவிடும்.

ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பதால் உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி தக்க ஆலோசனை பெற்று, சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+