ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் கனவுகள் அனைத்தும் அந்த ஒரு சிறு சேமிப்பில் தான் ஒளிந்துள்ளன. பிள்ளைகளின் படிப்பு, சொந்த வீடு, நிம்மதியான ஓய்வுக் காலம் என ஒவ்வொன்றுக்கும் நாம் சிறுக சிறுக சேர்க்கும் ஒவ்வொரு ரூபாயும் நமக்காக உழைக்க வேண்டும். ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் என்பது வெறும் முதலீடு மட்டுமல்ல, அது உங்கள் நம்பிக்கை.
அப்படிப்பட்ட தொகையை பாதுகாப்பு என்ற போர்வையில் வெறும் மிதமான வட்டியோடு திருப்தி அடைய போகிறீர்களா அல்லது சந்தையின் வேகத்திற்கு ஏற்ப உங்கள் பணத்தை பலமடங்கு வளர்க்கப் போகிறீர்களா? PPF தரும் நிம்மதியான உறக்கமா அல்லது SIP தரும் அசுர வளர்ச்சியா? இதில் எது உங்களை கோடீஸ்வரர் என்ற இலக்கை நோக்கி அழைத்து செல்லும்? 10 ஆண்டுகால இந்த நிதிப் பயணத்தில், உங்கள் பணத்தின் உண்மையான கிங் யார் என்பதை தெரிந்து கொள்வோமா?

எஸ்ஐபி என்பது சந்தையுடன் தொடர்புடைய முதலீட்டு திட்டமாகும். ஆனால் பிபிஎஃப் அரசின் பின்னணியில் உள்ள பாதுகாப்பான திட்டமாகும். இவ்விரண்டு திட்டங்களுமே நீண்ட கால நிதி பயணத்திற்காக உதவும் திட்டங்களாகும், இருப்பினும் இரண்டும் இரு வேறு பாதைகளில் பயணிக்கும் அம்சங்கள். பிபிஎஃப் - ல் வருமானம் மிதமாக இருக்கும். ஆனால் பாதுகாப்பான திட்டம். ஆனால் எஸ்ஐபி அப்படியில்லை. சந்தையுடன் தொடர்பில் இருப்பதால் ரிஸ்க்கும் அதிகம், வருமானமும் அதிகம். பிபிஎஃப் திட்டத்தின் காலம் 15 ஆண்டுகள். அதன் பிறகும் 5 ஆண்டு தொகுப்புகளாக நீட்டித்துக் கொள்ளலாம். எஸ் ஐ பி-க்கு குறிப்பிட்ட காலம் என எந்த கால வரம்பு கிடையாது. ஆக நீங்கள் 40 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்றால் கூட செய்ய முடியும்.
எஸ்ஐபி- ல் குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து கூட முதலீடு செய்து கொள்ளலாம். பிபிஎஃப் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டு தொகையை ஆண்டுக்கு 500 ரூபாய், அதிகபட்ச வரம்பு 1,5 லட்சம் ரூபாய். ஆனால் எஸ்ஐபி - ல் அதிகபட்ச வரம்பு எல்லாம் கிடையாது. எஸ்ஐபி ஆனது சந்தையுடன் தொடர்பில் இருப்பதால் வருமானத்தையும் இது தான் என கூறிவிட முடியாது. அதற்கென அதிகபட்ச வரம்பும் கிடையாது. சரசரியாக 12% என்பது எளிதாக கிடைக்க கூடிய ஒன்று தான். ஆனால் பிபிஎஃப் திட்டத்தில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% மட்டுமே.
உதாரணத்திற்கு நீங்கள் எஸ்ஐபி-ல் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். அதற்கு 12% வருமானம் கிடைக்கிறது என கொள்வோம். நீங்கள் மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்வீர்கள். இதே பிபிஎஃப் திட்டத்திலும் இதே 12,500 ரூபாய் தொகையை முதலீடு செய்கிறீர்கள். அதற்கு 7.1% வருமானம் கிடைக்கும்.
எஸ்ஐபி- ல் உங்களுக்கு கிடைத்த வருமானம் சுமார் 14,04,238 ரூபாய் ஆகும். இதன் மூலம் உங்களுடைய மொத்த கார்ப்பஸ் 29,04,238 ரூபாயாக இருக்கும். இதுவே பிபிஎஃப்-ல் உங்களுடைய வருமானம் 10 ஆண்டுகளில் 5,82,282 ரூபாயாக இருக்கும். ஆக 10 ஆண்டுகள் கழித்து உங்களுடைய மொத்த கார்ப்பஸ் தொகையானது சுமார் 20,82,282 ரூபாயாகும். ஆக எனக்கு பாதுகாப்பு தான் முக்கியம் எனில், ரிஸ்க் குறைவான பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இல்லை வருமானமும் அவசியம் எனில் எஸ்ஐபி திட்டத்தை தேர்வு செய்யலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

SIP vs STP vs SWP:சரியான முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது எப்படி? முதலீட்டாளர்களின் சக்சஸ் எது?

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

பணக்காரர்களின் ரகசியப் பாதை! ஏன் ராபர்ட் கியோசாகியின் முதலீட்டு டிப்ஸ் இன்றும் ஒரு மந்திரம்?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்

டாடா மோட்டார்ஸ் பங்குகளை கைகழுவிய ராதாகிஷன் தமானி: சில்லறை முதலீட்டாளர்களே கவனம்..

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!



Click it and Unblock the Notifications

