ஈரான் போர் உலக பொருளாதாரமே தற்போது ஸ்தம்பித்து போய் இருக்கிறது. அடுத்த கட்டமாக உலக பொருளாதாரம் எந்த பாதையை நோக்கி செல்ல போகிறது என யாராலும் கணிக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் பங்குச் சந்தைகள் புதிய புதிய வீழ்ச்சிகளை சந்திக்கின்றன.
இந்த சூழலில் பிரபல முதலீட்டு நிபுணரும் ரிச் டேட் புவர் டேட் அதாவது பணக்கார தந்தை ஏழை தந்தை புத்தகத்தின் எழுத்தாளருமான ராபர்ட் கியோசாமி முக்கியமான ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாக ஃபாலோவர்களுக்கு முதலீட்டு அறிவுரையை இவர் வழங்கி வருகிறார்.

இந்நிலையில் அவர் வெள்ளியில் முதலீடு செய்ய வேண்டும் என கூறியிருப்பது விவாதத்தை எழுப்பி இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை உலகளவிலும் இந்தியாவிலும் வெள்ளியின் விலை பல மடங்கு உயர்ந்தது. இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 4,25,000 ரூபாய் என வரலாற்று உச்சத்தை தொட்டது.

ஜனவரி 29ஆம் தேதிக்கு பிறகு விலை படிப்படியாக குறைந்தது. தற்போது 2 ,90,000 ரூபாயிலிருந்து 3,15,000 ரூபாய்க்குள் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இறந்து வருகிறது. ஒரு மாத காலமாகவே வெள்ளியின் விலை பெரிய அளவில் உயரவும் இல்லை, சரியவும் இல்லை. இந்த சூழலில் தான் ராபர்ட் கியோசாகி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் என்னுடைய புத்தகத்தில் வரலாற்றிலேயே இல்லாத பெரிய பங்கு சந்தை வீழ்ச்சி வரப்போகிறது நான் என நான் கூறியிருந்தேன் நான் ஏன் அப்படி ஒரு கணிப்பை வெளியிட்டேன் தெரியுமா என கேட்டிருக்கிறார்.
2008ஆம் ஆண்டும் நான் சிஎன்என் பேட்டியில் பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து பேசினேன் சில நாட்களிலேயே அது நடந்தது என கூறியுள்ள அவர் 2026ஆம் ஆண்டில் பிளாக் ராக் நிறுவனத்தின் தனியார் கடன் திட்டம் பெரிய அளவில் பங்கு சந்தையை வீழ்ச்சி அடைய செய்யும் என கூறியிருக்கிறார். இந்த உலகமே பெரிய கடனில் சிக்கி இருக்கிறது , திரும்ப செலுத்த முடியாத கடன் வலையில் இருக்கிறது என கூறியிருக்கிறார்.
எனவே தங்கம், வெள்ளி, பிட்காயினில் முதலீட்டை அதிகரித்து கொள்ளுங்கள், எண்ணெய் நிறுவனங்களில் கூட்டு வைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். 2026 ஆம் ஆண்டில் ஒரு 10 டாலர் உங்கள் கையில் இருந்தால் கூட உடனடியாக சென்று வெள்ளியை வாங்கி விடுங்கள் என கூறியிருக்கிறார். ஒரு வேளை உணவினை மிச்சப்படுத்தியாவது வெள்ளியை வாங்கி வையுங்கள் இது பின்னாளில் பெரிய அளவில் உங்களுக்கு உதவும் என தெரிவித்துள்ளார். 1 மாதமாக வெள்ளி விலை மாறாமலே இருக்கும் நிலையில் ராபர்ட் கியோசாகியின் அறிவுரை முக்கியத்துவம் பெறுகிறது.
வெறும் பத்து டாலரில் கூட வாங்கும் விலைக்கு தற்போது வெள்ளி கிடைக்கிறது என கூறும் அவர் வெள்ளி வாங்க வேண்டும் என்பதற்காக ஒரு நாள் சாப்பாட்டை கூட நீங்கள் நிறுத்திக் கொள்ளலாம் என கூறியிருக்கிறார். இது பின்னாலில் உங்களை செல்வ வளத்தோடு வாழ வைக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!



Click it and Unblock the Notifications