சொந்த வீடு வாங்குவது பலருக்கும் உள்ள கனவுதான். இதனை அடைவதற்கு சிலரிடம் சேமிப்பு இருக்கும். பலரிடம் இருக்காது. இது போன்ற நபர்களுக்கு உதவுவதற்காக தான் வங்கிகள் வீட்டு கடன்களை வழங்குகின்றன. வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டு கடன்களை வாங்கிவிட்டு, அதன் பிறகு அதனை அடைக்கப் படாதபாடு படுகின்றனர். சிலர் EMI சிக்கலில் சிக்கி எதற்காக வீட்டு கடன் எடுத்தோம்? என்று சிந்திக்கும் அளவிற்கு நிதி சிக்கலுக்கு ஆளாகின்றனர். எனவே இந்த பதிவில் உங்களுடைய வீட்டுக் கடன் EMI-ஐ எப்படி 7 ஆண்டுகள் வரை குறைத்து முடிக்க முடியும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
28/36 விதி: வீடு வாங்குவதற்கான அடிப்படை விதிகளில் ஒன்று 28/36 விதி. இதன்படி, உங்கள் மாத வருமானத்தில் 28 % மட்டுமே வீட்டுக்கடன் தவணைக்கு செலவிட வேண்டும். மொத்த கடனுக்காக 36 சதவீதத்திற்கு மேல் செலவிடக்கூடாது. இது உங்களை நிதி நெருக்கடியில் இருந்து காக்கும். மொத்த கடனில் வீட்டுக்கடன், கார் கடன், கல்வி கடன், கிரெடிட் கார்டு கடன் ஆகியவை அடங்கும்.

உதாரணமாக, உங்கள் மாத வருமானம் ரூ.1,00,000 என்றால்,
வீட்டுக் கடனுக்கான அதிகபட்ச EMI செலவு = ரூ.1,00,000 x 0.28 = ரூ.28,000
மொத்த கடனுக்கு அதிகபட்ச செலவு = ரூ.1,00,000 x 0.36 = ரூ.36,000
உங்கள் மொத்த கடனுக்கான அதிகபட்ச செலவை தாண்டி செலவு செய்யக்கூடாது. அப்படியானால் நிதி நெருக்கடியில் சிக்கும் அபாயம் உள்ளது.
ஹோம் லோன் ஆப்ஷன்களை புரிந்து கொள்வது: பொதுவாக ஹோம் லோன்கள் இரண்டு வகையில் கிடைக்கின்றன. பிக்சட் ரேட் ஹோம் லோன்களில் கடன் காலம் முழுவதும் வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது. மாதத் தவணையும் நிலையான ஒன்றாக இருக்கும். உங்கள் வீட்டை நீண்ட காலத்திற்கு வைத்திருக்க திட்டமிட்டால் இந்த வீட்டுக் கடன்கள் சிறந்தது.
ஃப்ளோட்டிங் ரேட் ஹோம் லோன்கள்: இந்த வகை கடன்களில் வட்டி விகிதம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்ற இறக்கமாக இருக்கும். அதனால் மாதத் தவணை அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பு உள்ளது. இந்த வகை கடன்களில் வட்டி விகிதம் பொதுவாக 5 வருட சுழற்சியில் மாறுபடும். சில வருடங்களில் வீட்டை விற்று விடலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த வட்டி ஏற்றது.
பிற செலவுகள்: வீடு வாங்கும்போது ஏற்படும் கூடுதல் செலவுகள் பொதுவாக வீட்டு விலையில் 6 முதல் 8% வரை இருக்கும். இதில் ஸ்டாம்ப் டூட்டி, பதிவு கட்டணம் போன்றவை அடங்கும்.
உங்கள் வீட்டுக் கடன் காலத்தை எவ்வாறு 7 ஆண்டுகள் குறைப்பது?: உதாரணமாக, ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டிற்கு 9% வட்டி விகிதத்தில் 20 வருட கடன் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ரூ.20 லட்சம் முன்பணம் கொடுத்து, ரூ.80 லட்சம் கடன் வாங்குகிறீர்கள். மொத்தமாக நீங்கள் செலுத்தும் தொகை ரூ.1,92,74,738. இதில் ரூ. 92,74,738 வட்டி மட்டும். இது வீட்டு விலையில் கிட்டத்தட்ட சமம். இந்த உதாரணம் வட்டி விகிதம் மற்றும் கடன் காலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
எனவே நீண்ட நாட்களுக்கு வெறும் மாதத் தவணை தொகையை மட்டும் செலுத்தி வந்தால் வட்டியும் அசலும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும். எனவே எவ்வளவு சீக்கிரம் உங்கள் கடனை முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும். அப்பொழுதுதான் அதிக வட்டி செலுத்துவதை தவிர்க்க முடியும்.
எக்ஸ்ட்ரா EMI: உங்களுடைய வீட்டுக் கடன்களில் கூடுதல் தொகையையும் சேர்த்து வரவு வையுங்கள். இதனை நீங்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் செய்யலாம். இதனால் கடன் தொகை குறைந்து வட்டி சுமையும் குறையும். மேலும் தவணைத் தொகையை 10 சதவீதம் அதிகரித்தால் கடன் காலத்தை 4 வருடங்கள் வரை தோராயமாக குறைக்க முடியும். மேலும் ரூ.22,48,950 வரை வட்டி சேமிக்கலாம். தவணை தொகையை 20 சதவீதம் அதிகரித்தால், கடன் காலத்தை 7 வருடங்கள் குறைக்கலாம். இதன் மூலம் ரூ. 35,61,366 வட்டி சேமிக்கலாம்.
ரூ.1 கோடி ரூபாய் வீட்டுக் கடனுக்கு, ரூ. 92 லட்ச ரூபாய் வரை வட்டி கொடுப்பது, அவ்வளவு நல்ல விஷயமாக இருக்காது. இதை உணர்ந்து மாத மாதம் அசலில் வரவு வைக்க முயற்சி செய்யுங்கள்.
மேலும் உங்கள் வீட்டுக் கடனை குறைப்பதற்கு உங்களுக்கு வருடாந்திர போனஸ்கள் அல்லது உங்களுடைய முதலீடு என அனைத்தையும் சேர்த்து செலுத்த முயற்சிக்கலாம். போனஸ் என்பது கூடுதலாக கிடைக்கூடிய தொகை. போனஸ் இல்லாமலும் உங்களுடைய செலவு நடந்து கொண்டுதான் இருக்கும். எனவே கூடுதல் வருமானம் வருகிறது என்றால், அதனை முழுவதுமாக நம்பி அதையும் செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு மாறாக அதை வரவு வைப்பதற்கு முயற்சி செய்யலாம்.
இது போன்ற யுக்திகளை பின்பற்றினால், உங்களுடைய வீட்டுக் கடன் EMI-ஐ குறுகிய காலத்தில் கட்டி முடிக்க முடியும். மேலும் நீங்களும் நிதி சிக்கலுக்கு ஆளாகாமல் இருக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications