உச்ச லாபம் கொடுக்கும் ஸ்மால் கேப் ஃபண்டுகள்!

பொதுவாகவே, மியூச்சுவல் ஃபண்ட் என்றால் ரிஸ்கை குறைத்து, ஓரளவுக்கு நிலையான வருமானத்தைக் கொடுக்க உதவும் ஒரு முதலீட்டு முறை என்று தான் பார்க்கிறோம்.

அந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் கூட, மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் விரைவாகவும், நிறையவும் லாபம் பார்க்கலாம் அல்லது சொத்து உருவாக்கலாம் என்று சொல்வார்கள்.

உச்ச லாபம் கொடுக்கும் ஸ்மால் கேப் ஃபண்டுகள்!

அது ஒரு பக்கம் உண்மை என்றாலும், ஒட்டு மொத்த சந்தையும் அடி வாங்கும் போது, அதிகம் நஷ்டத்தைக் கொடுக்கக் கூடிய ஃபண்டுகளும் இந்த ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் ஃபண்டுகள் தான்.

மிட் கேப் (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன..?

பொதுவாக ஒரு பங்கின் சந்தை மதிப்பு 10,000 கோடி ரூபாய்க்கு மேலும், 25,000 கோடி ரூபாய்க்கு கீழும் இருந்தால் அந்த பங்குகளை மிட் கேப் பங்குகள் எனச் சொல்வோம். செபி அமைப்பின் வழி காட்டுதலின் படி, இந்தியாவின் டாப் 250 சந்தை மதிப்பு கொண்ட பங்குகளில் 101 முதல் 250 வரை இருக்கும் நிறுவன பங்குகளைத் தான் மிட் கேப் பங்குகள் எனச் சொல்கிறார்கள்.

மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்

இந்த மிட் கேப் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் திரட்டப்படும் நிதிகள், இந்த மிட் கேப் ரக பங்குகளில் முதலீடு செய்யப்படும். இந்த பங்குகள் விலை ஏறும் போது, கிடைக்கும் விலை ஏற்றத்தைத் தான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நமக்கு லாபமாகத் தருகிறார்கள்.

ஸ்மால் கேப் ஃபண்டுகள்

ஒரு பங்கின் சந்தை மதிப்பு 10,000 கோடி ரூபாய்க்கு கீழ் இருந்தால் அந்த பங்குகளை ஸ்மால் கேப் பங்குகள் எனச் சொல்வோம். செபி அமைப்பின் வழி காட்டுதலின் படி, இந்தியாவின் டாப் 250 சந்தை மதிப்பு கொண்ட பங்குகள் தவிர மற்ற பங்குகள் எல்லாமே ஸ்மால் கேப் பங்குகள் தான்.

ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்

இந்த ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் திரட்டப்படும் நிதிகள், இந்த ஸ்மால் கேப் ரக பங்குகளில் முதலீடு செய்யப்படும். இந்த ஸ்மால் கேப் பங்குகள் விலை ஏறும் போது, கிடைக்கும் விலை ஏற்றத்தைத் தான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நமக்கு லாபமாகத் தருகிறார்கள்.

மிட் & ஸ்மால் கேப் ஃபண்டுகளின் கடந்த காலம்

சென்செக்ஸ் 30 இண்டெக்ஸின் மாதாந்திர சார்ட்டை எடுத்துப் பார்க்கும் போது கடந்த மே 2019 வரை தொடர்ந்து ஏற்றம் கண்டு இருக்கிறது. அதன் பின் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் தொடர்ந்து சரிவைக் கண்டு இருக்கின்றன. அதன் பின் செப்டம்பர் 2019-ல் இருந்து மெல்ல சென்செக்ஸ் ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது.

பயங்கர நஷ்டம்

மேலே சொன்னது போல, கடந்த ஜூன் 2019, ஜூலை 2019, ஆகஸ்ட் 2019 ஆகிய மாதங்களில், மிட் கேப் & ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் நஷ்டத்தைத் தான் சந்தித்து இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஜூலை 2019-ல் ஸ்மால் கேப் -9.15 % மற்றும் மிட் கேப் -7.70% நஷ்டத்தைச் சந்தித்தன.

குட்டி லாபம்

அதற்கு அடுத்த செப்டம்பர் 2019-ல் இருந்து ஒட்டு மொத்த சந்தையும் ஒரு வழியாக உயரத் தொடங்கியது. அப்போது ஸ்மால் கேப் ஃபண்டுகள் 5.63 சதவிகிதம் மற்றும் மிட் கேப் 5.4 சதவிகிதம் லாபம் கொடுக்கத் தொடங்கின. ஆனால் இது நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. அதற்கு அடுத்து அக்டோபர் 2019 முதல் டிசம்பர் 2019 வரை சொல்லிக் கொள்ளும் படி மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பெரிய அளவில் லாபம் கொடுக்கவில்லை.

ஜனவரி 2020

ஆனால் நம் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் விதத்தில், ஜனவரி 2020-ல் அதிக லாபம் கொடுத்த ஃபண்டுகள் பட்டியலில் ஸ்மால் கேப் 7.58 சதவிகிதம் லாபம் கொடுத்து முதலிடம் பிடித்து இருக்கிறது. அதற்கு அடுத்து 5.49 சதவிகிதம் லாபம் கொடுத்து மிட் கேப் இரண்டாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது. எனவே மக்களே மீண்டும் தைரியமாக ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+