இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகள் எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கின்றன. லார்ஜ் கேப் எனப்படும் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள், மிட் கேப் எனப்படும் மத்திய அளவிலான மூலதன மதிப்பு கொண்ட நிறுவனங்கள், ஸ்மால் கேப் எனப்படும் சிறு நிறுவனங்களின் பங்குகளில் பிரத்தியேகமாக முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன.
மியூச்சுவல் ஃபண்டுகள்: கடந்த பத்தாண்டுகளில் இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களையும், மறுபுறம் விறுவிறுப்பான வளர்ச்சியையும் கண்டுள்ளது. இந்த காலக் கட்டத்தில் லார்ஜ்-கேப், மிட்-கேப், ஸ்மால்-கேப் ஆகிய மூன்று முக்கிய ஈக்விட்டி நிதி வகைகளில் முதலீடு செய்தவர்களில் எந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு சிறந்த லாபம் தந்துள்ளது என்பதை பார்க்கலாம்.

10 ஆண்டுகளில் எதில் அதிக லாபம்: கடைசி பத்தாண்டுகளில் ஸ்மால்-கேப் நிதிகள் சராசரியாக 17.35% வருமானத்தையும், மிட்-கேப் நிதிகள் சராசரியாக 16.27% வருமானத்தையும் அளித்துள்ளன. லார்ஜ்-கேப் நிதிகளின் சராசரி செயல்பாடு 12.79% ஆக இருந்தது. ஆனால் இந்த மூன்றிலும் அதற்கே உரிய ரிஸ்க் மற்றும் ரிவார்டு இருப்பதை உணர்ந்து முதலீடு செய்வது நல்லது.
ஸ்மால் கேப் : ஸ்மால் கேப் பிரிவில் செயல்படும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் 22.67% வளர்ச்சி பெற்றுள்ளது. அதே போல ஆக்சிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் 20.43% , குவான்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் 20.34%, எஸ்.பி.ஐ ஸ்மால் கேப் ஃபண்ட் 20.33%, ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால் கேப் ஃபண்ட் 20.17% என வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது.
மிட் கேப் :மிட் கேப் பிரிவில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளில் ,கடந்த பத்தாண்டுகளில் சுமார் 19% முதல் 20% வரை வருமானத்தை ஈட்டியவை குறித்து தெரிந்து கொள்ளலாம். இதில் இன்வெஸ்கோ இந்தியா மிட் கேப் ஃபண்ட் 20.33%, கோடக் மிட்கேப் ஃபண்ட் 19.82%, எடெல்வைஸ் மிட் கேப் ஃபண்ட் 19.60%, மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட் 19.29%, நிப்பான் இந்தியா குரோத் மிட் கேப் ஃபண்ட் 18.98% லாபம் தந்துள்ளன.
லார்ஜ் கேப்: லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் குவான்ட் ஃபோகஸ்டு ஃபண்ட் 16.03% , நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட் 15.68%, ஐ.சி.ஐ.சி.ஐ ப்ரூடென்ஷியல் லார்ஜ் கேப் ஃபண்ட் 15.60% , கனரா ரோபேகோ லார்ஜ் கேப் ஃபண்ட் 15.52%, இன்வெஸ்கோ இந்தியா லார்ஜ்கேப் ஃபண்ட் 14.90% என லாபம் தந்துள்ளன.
எதில் ரிஸ்க் அதிகம்: ஸ்மால் கேப் நிதிகள் அதிக வருமானத்தை வழங்கி இருந்தாலும் அதிக ரிஸ்கையும் கொண்டுள்ளன. சந்தை வீழ்ச்சியின் போது இவை பெரிதும் பாதிக்கப்படும். மிட் கேப் நிதிகள் சீரான வகையைச் சேர்ந்தவை. இவற்றில் வளர்ச்சி வாய்ப்புகளும் சிறப்பாக உள்ளன, மேலும் ஸ்மால்-கேப் நிதிகளை விட ரிஸ்க் குறைவு.லார்ஜ் கேப் நிதிகள் நிலையான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றில் ரிஸ்க் ஒப்பீட்டளவில் குறைவு, ஆனால் பிற வகைகளுடன் ஒப்பிடுகையில் வருமானமும் குறைவாகவே இருக்கும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications