FD-க்கு அதிக வட்டி கொடுக்கும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள்.. இது வங்கி வட்டிய விட அதிகமா இருக்கே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான சூழலில் பாதுகாப்பான முதலீடு எது என்று நம்மவர்களிடம் கேட்கும் போது, அவர்களிடம் இருந்து அடுத்த நொடியே வரும் பதில் வங்கி வைப்பு நிதி தான்.

ஏனெனில் குறைவான வருமானமாக இருந்தாலும், பாதுகாப்பான நிலையான வருமானம் தரக்கூடிய ஒரு திட்டமாகும்.

அதிலும் தற்போது வங்கிகளை விட, ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் அதிக வட்டி கொடுக்கின்றன என்றால் வேண்டாம் என்றா சொல்ல முடியும். சரி வாருங்கள் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? என்பதை பார்க்கலாம்.

வங்கிகளில் பிக்ஸ்ட் டெபாசிட்

வங்கிகளில் பிக்ஸ்ட் டெபாசிட்

பொதுவாக வணிக வங்கிகள் கூட வங்கி பிக்ஸ்ட் டெபாசிட்களுக்கு 6.2% வரை தான் வட்டி கொடுத்து வருகின்றன. இதே 2 கோடி ரூபாய் வரையிலான டெர்ம் டெபாசிட்களுக்கு கூட 6.7% வரை வட்டி கொடுக்கப்படுகிறது. ஆனால் சில ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் தேர்தெடுக்கப்பட்ட சில திட்டங்களுக்கு அதிகம் வருமானமும் கொடுக்கின்றன. ஏனெனில் அவர்களில் நிதி சேர்த்தலில் அதிக கவனம் செலுத்துகின்றன.

ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள்

ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள்

இது ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் பெரிய வங்கிகளைப் போலவே 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையில் பலவிதமான திட்டங்களை வழங்குகின்றன. இதில் இன்று நாம் பார்க்கவிருப்பது ஈக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி, உத்கர்ஷ் சிறு நிதி வங்கி, ஏயு ஸ்மால் பைனான்ஸ் உள்ளிட்ட சிறு பைனான்ஸ் வங்கிகள் 3.5% முதல் 8.5% வரை வட்டி விகிதங்களை கொடுக்கின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு நல்ல வருமானம் கொடுக்க கூடிய திட்டங்களையும் கொண்டுள்ளன.

ஈக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் எவ்வளவு வட்டி?

ஈக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் எவ்வளவு வட்டி?

இந்த வட்டி விகிதமானது ஜூன் 1 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் மூத்த குடிமக்களுக்கு 60 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.

பொதுமக்களுக்கு
7 முதல் 14 நாட்களுக்கு - 3.60%
15 முதல் 29 நாட்கள் வரையில் - 3.60%
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 4.10%
46 நாட்கள் முதல் 62 நாட்கள் வரையில் - 4.60%
63 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 5.60%
91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையில் 5.85%
121 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் 5.85%
181 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில் - 6.10%
211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரையில் - 6.10%
271 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையில் - 6.60%
1 வருடம் முதல் 18 மாதம் வரையில் - 7.10%
1 வருடம் 5 நாட்கள் முதல் 1 வருடம் 11 நாட்கள் வரையில் 5.40%
18 மாதம் 1 நாள் முதல் 2 வருடம் வரையில் - 7.10%
2 வருடம் 1 நாள் முதல் 887 நாட்கள் வரையில் 7.15%
888 நாட்களுக்கு - 7.35%
889 நாள் முதல் 3 வருடம் வரை 7.15%
3 வருடம் 1 நாள் முதல் 4 வருடம் வரையில் 6.75%
4 வருடம் 1 நாள் முதல் 5 வருடம் வரையில் 6.75%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடம் வரையில் 6.75%

உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி வட்டி விகிதம்?

உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி வட்டி விகிதம்?

உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி வட்டி விகிதமானது ஆகஸ்ட் 4 முதல் நடைமுறையில் உள்ளது. இதில் மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.

பொதுமக்களுக்கு
7 முதல் 29 நாட்களுக்கு - 3.05%
30 நாட்கள் முதல் 89 நாட்கள் வரையில் - 4.05%
90 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் - 4.80%
180 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையில் - 5.20%
211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரையில் - 6.10%
1 வருடம் முதல் 2 வருடம் வரையில் - 6.50%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடம் வரையில் - 6.05%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடம் வரையில் - 5.80%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடம் வரையில் - 5.55%

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் வட்டி விகிதம்?

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் வட்டி விகிதம்?

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் வட்டி விகிதமானது ஜூலை 13லிருந்தே இதே விகிதம் தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.

பொதுமக்களுக்கு
7 முதல் 14 நாட்களுக்கு - 4.50%
15 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் - 5.25%
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 6.25%
91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் - 6.50%
181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையில் - 6.75%
1 வருடத்திற்கு - 7.25%
1 வருடம் முதல் 3 வருடம் வரையில் - 7.50%
3 வருடத்திற்கு மேல், 5 வருடத்திற்குள் - 7%
5 வருடத்திற்கு - 7.25%
5 வருடம் முதல் 10 வருடம் வரையில் - 6.50%

உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி வட்டி விகிதம்?

உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி வட்டி விகிதம்?

உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் வட்டி விகிதமானது கடைசியாக ஜூலை 3 அன்று மாற்றாப்பட்டது. பொதுமக்களுக்கான வட்டி விகிதத்துடன் 50 அடிப்படை புள்ளிகள் மூத்த குடிமக்களுக்கு அதிகமாகும்.

7 முதல் 45 நாட்களுக்கு - 3.50%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 4.00%
91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் - 4.50%
181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையில் - 6.50%
365 நாட்கள் முதல் 699 நாட்கள் வரையில் - 7.75%
700 நாட்களுக்கு - 8%
700 நாட்கள் முதல் 3652 நாட்கள் வரையில் 7.75%

ஏயு ஸ்மால் பைனாஸ் வங்கி வட்டி விகிதம்?

ஏயு ஸ்மால் பைனாஸ் வங்கி வட்டி விகிதம்?

ஏயு ஸ்மால் பைனாஸ் வங்கியில் வட்டி விகிதமானது கடைசியாக ஜூலை 14 அன்று மாற்றாப்பட்டது.

பொதுமக்களுக்கான வட்டி விகிதம்

7 நாட்கள் முதல் 1 மாதம் 15 நாட்கள் வரையில் - 4.00%
1 மாதம் 16 நாட்கள் முதல் 3 மாதம் வரையில் - 4.50%
3 மாதம் 1 நாள் முதல் 6 மாதம் வரையில் - 5.50%
6 மாதம் 1 நால் முதல் 12 மாதங்கள் வரையில் - 6.00%
12 மாதம் 1 நால் முதல் 15 மாதங்கள் வரையில் - 7.05%
15 மாதம் 1 நால் முதல் 18 மாதங்கள் வரையில் - 7.00%
18 மாதம் 1 நால் முதல் 24 மாதங்கள் வரையில் - 7.00%
24 மாதம் 1 நால் முதல் 36 மாதங்கள் வரையில் - 7.25%
36 மாதம் 1 நால் முதல் 45 மாதங்கள் வரையில் - 7.00%
45 மாதம் 1 நால் முதல் 60 மாதங்கள் வரையில் - 7.00%
60 மாதம் 1 நால் முதல் 120 மாதங்கள் வரையில் - 7.00%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Small finance bank fd rates comparison, annual returns up to 8.5%

FD rates.. Equitas Small Finance Bank, Ujjivan Small Finance Bank, Jana Small Finance Bank, Utkarsh Small Finance Bank. AU Small Finance Banks interest rates update.
Story first published: Wednesday, August 12, 2020, 13:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X