மகளின் கல்யாணம், மகனின் உயர்கல்வி அல்லது ஓய்வுகால நிம்மதி - இப்படி ஒவ்வொரு முக்கிய தருணத்திலும் நடுத்தர குடும்பங்களில் கைகொடுப்பது அவரவர் சிறு சேமிப்பு திட்டங்களே. அப்படி ஒவ்வொரு குடும்பமும் வியர்வை சிந்தி சேர்த்த பணத்தை சிறு சேமிப்பு திட்டங்களில் போடும்போது, அந்த பணத்தை வெறும் எண்களாக மட்டும் பார்ப்பதில்லை. அவை தான் அவர்களின் எதிர்கால கனவுகளை பூர்த்தி செய்யும் அம்சம்.
2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஒரு நல்ல விஷயமாக தெரியலாம். ஆனால் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பணத்தை, அவசர அவசரமாக அவசரமாக பூட்டி வைப்பது ஏனோ? ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள். வட்டி விகிதம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக மட்டும் பணத்தைப் போட்டுவிட்டு, அவசர தேவைக்கு எடுக்க முடியாமல் தவிப்பவர்கள் எத்தனை பேர்? பணம் பெருகினால் மட்டும் போதுமா? அது சரியான நேரத்தில் நம் கைக்கு கிடைக்குமா? பணவீக்கத்தை அது முறியடிக்குமா? உங்கள் உழைப்பின் பலன் முழுமையாக உங்களை வந்தடைய, முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் சரிபார்க்க வேண்டிய அந்த 5 முக்கிய ரகசியங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்வோமா?

ஒரு புதிய நிதியாண்டில் காலடி வைத்திருக்கும் இந்த தருணத்தில் சிறு முதலீட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சு விடும் வகையில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது ஏப்ரல் - ஜூன் வரையிலான காலகட்டத்தில் அப்படியே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உங்களுடைய பொது வருங்கால வைப்பு நிதி(PPF) திட்டத்திற்கு 7.1% வட்டி விகிதமும், சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) திட்டத்திற்கு 8.2% வட்டியும், கிசான் விகாஸ் பத்திரம்(KVP) திட்டத்திற்கு 7.5 வட்டியும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்(SCSS) 8.2% வட்டியும், தேசிய சேமிப்பு பத்திரம்(NSC) 7.7% வட்டியும், அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு 4% வட்டியும், முந்தைய காலாண்டுகளை போலவே வட்டி தொடரும். இது முதலீட்டாளர்களுக்கு ஒரு நிலையான வருமானத்தை தரும் என்றாலும், அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப இது போதுமானாதா என்றால் நிச்சயம் இல்லை.
கவனிக்க வேண்டிய 5 காரணிகள்?
மேற்கண்ட திட்டங்களில் உங்கள் முதலீட்டை முடக்கும் முன்பு, யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதிகரித்து வரும் விலைவாசியை சமாளிக்க இது உதவுமா என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
1. இலக்குகளுக்கு ஏற்ப திட்டமிடல்
நீங்கள் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள். ஆனால் அதை எதற்காக செய்ய நினைக்கிறீர்கள். உங்கள் குழந்தையின் உயர்கல்விக்கா அல்லது பெண் குழந்தையின் திருமணத்திற்கான அல்லது வீடு கட்டவா, மருத்துவ செலவா என எதற்காக என்பதை முதலில் தீர்மானித்து அதற்கேற்ப திட்டங்களை தேர்வு செய்யுங்கள்.
2. கால அளவு மற்றும் லாபம்
முதலீடு செய்வதற்கு முன்பு எந்த திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள். அது எத்தனை ஆண்டு திட்டம், அதில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என அனைத்து விவரங்களையும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அது நீண்ட கால திட்டங்களான பிபிஎஃப் அல்லது சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டமா என முடிவெடுக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து நீண்ட கால திட்டங்களிலும் பணத்தை இடையில் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். எனினும் அதற்கென சில நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் உண்டு. ஆக அதையும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப தேர்வு செய்ய வேண்டும்.
3. வட்டி விகிதம்
நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்தில் வட்டி விகிதம் இந்த காலாண்டில் சிறப்பாக இருக்கலாம். ஆனால் அடுத்த காலாண்டிலும் அப்படியே தொடருமா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் சர்வதேச அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல்களுக்கு மத்தியில், மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் மாறினால், அதனால் உங்கள் சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதமும் குறையலாம். ஆக அதையும் முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அதற்கேற்ப திட்டமிடுதல் நல்லது.
4. வரிச் சலுகைகள்
உங்கள் பணத்தை நீண்ட காலத்திற்கு ஒரு திட்டத்தில் லாக் செய்வதற்கு முன்னால், அதில் வரி சலுகைகள் ஏதேனும் இருக்கிறதா, அது உங்கள் போர்ட்போலியோவுக்கு பொருந்துமா என்பதையும் பார்த்து தேர்வு செய்யுங்கள்.
5. அவசர தேவைக்கு பணம் கிடைக்குமா?
10 - 15 வருடம் உங்கள் பணத்தை ஒரு திட்டத்தில் முடக்கும் முன்பு, உங்களுக்கு ஏதேனும் ஒரு அவசரம் என்றால், அந்த பணத்தை திரும்ப எடுக்க முடியுமா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் திடீரென தேவை ஏற்படும் போது, பணத்தை வெளியில் எடுக்க முடியாமல் கூட போகலாம். ஆக உங்கள் வசம் பணமே இருந்தாலும் கூட, அதிக வட்டிக்கு கடன் வாங்க நேரிடலாம்.
மேற்கண்ட திட்டங்களுக்கு வட்டி மாறவில்லை என்பது நல்ல விஷயமாக இருந்தாலும், அதிகரித்து வரும் விலைவாசிக்கு மத்தியில் இது போதுமானாதா என்பதையும் யோசித்து முடிவெடுங்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications

