பங்குச்சந்தை என்று தற்போது ஒவ்வொரு வீடுகளின் முக்கியமான முதலீட்டு பிரிவாக மாறியுள்ளது, ஒரு காலத்தில் தங்கம், வெள்ளி, பிக்சட் டெபாசிட், சிட்பண்ட் ஆகியவை முக்கியமான முதலீடாக இருந்த நிலை மாறி தற்போது இளம் தலைமுறையினர் அதிகப்படியான தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதேவேளையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் அனைவருக்கும் லாபம் கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை, அதிலும் குறிப்பா F&O பிரிவில் முதலீடு செய்யும் 10ல் 9 பேர் நஷ்டத்தை மட்டுமே எதிர்கொள்வதாக பல ஆய்வுகள் கூறுகிறது. இப்படியிருக்கையில் பங்குச்சந்தையில் எப்படி தான் முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும், இதற்கான அட்வைஸ் தான் டிவிட்டர் பதிவு மிகவும் சுவாரஸ்யமாக விளக்குகிறது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது, குறைந்த விலையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், நிறுவனத்தின் அடிப்படை வலிமை மற்றும் வளர்ச்சி திறனை ஆராய்ந்து முடிவெடுப்பது முக்கியம் என்று சமூக ஊடகத்தில் @makeanoffer என்ற பயனரின் பதிவு வலியுறுத்துகிறது. இதேபோல் பங்குச் சந்தை முதலீட்டில் நீண்டகால முதலீட்டிற்கு எவ்வாறு அணுக வேண்டும் என்பதை எளிமையாக விளக்குகிறது.
சின்ன கல்லு பெத்த லாபம்
பங்குச் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் பங்குகள் பலரை ஈர்க்கின்றன, ஏனெனில் இவை குறைந்த முதலீட்டில் அதிக பங்குகளை வாங்க உதவுகின்றன. ஆனால், இவை பெரும்பாலும் அதிக ஆபத்தை உள்ளடக்கியவை.
உதாரணமாக, சுஸ்லான் எனர்ஜி பங்கு 6-7 ரூபாயாக இருந்தபோது ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தவர், இன்று பத்து மடங்கு லாபம் பெற்றார். மறுபுறம், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பங்கில் முதலீடு செய்தவர் முழு முதலீட்டையும் இழந்தார்.
இந்த உதாரணங்கள், குறைந்த விலை பங்குகளில் முதலீடு செய்வது அதிக லாபத்தை அளிப்பதை காட்டினாலும், முதலீட்டை முழுவதும் இழக்கும் ஆபத்தையும் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன. ஆகவே, பங்குகளை தேர்ந்தெடுக்கும் முன், நிறுவனத்தின் நிதி நிலை மற்றும் சந்தை நம்பகத்தன்மையை ஆராய வேண்டும்.
நிறுவனத்தின் வலிமையே முதலீட்டின் அடித்தளம்
நீண்டகால முதலீட்டில் வெற்றி பெற, நிறுவனத்தின் அடிப்படை வலிமையை மதிப்பிடுவது அவசியம். உதாரணமாக 2014ஆம் ஆண்டு, MRF பங்கு ஒரு பங்குக்கு 20,000 ரூபாயாக இருந்தபோது, அதிக விலை காரணமாக நான் அதை வாங்காமல், குறைந்த விலையில் வேறு இரு நிறுவன பங்குகளை தேர்ந்தெடுத்தேன்.
ஆனால், அவற்றில் ஒரு நிறுவனம் திவாலாகி, பங்குச் சந்தையிலேயே இல்லை, மற்றொரு பங்கு குறிப்பிடத்தக்க லாபத்தை தரவில்லை.
மறுபுறம், MRF பங்கு எட்டு மடங்கு உயர்ந்து தற்போது ஒரு பங்கு விலை 1,60,000 ரூபாய விலையில் உள்ளது. இதன் மூலம் நிதி மற்றும் வர்த்தகத்தில் வலிமையான நிறுவனங்களில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது என இந்த பதிவில் makeanoffer விளக்கியுள்ளார்.
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி, நிதி நிலை, மற்றும் சந்தை செயல்பாடு ஆகியவை, முதலீட்டின் மதிப்பை சீராக உயர்த்தும். இது, விலையை மட்டும் கருதாமல், நிறுவனத்தின் தரத்தை மதிப்பிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
எச்சரிக்கை அவசியம்
பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்போதும் ஆபத்தை உள்ளடக்கியது. ஆனால், எச்சரிக்கையுடன் முதலீடு செய்வது இழப்புகளை குறைக்க உதவும்.
குறைந்த விலை பங்குகளை தேர்ந்தெடுப்பதற்கு முன், நிறுவனத்தின் நிதி அறிக்கைகள், சந்தை நிலை, மற்றும் எதிர்கால வளர்ச்சி திறனை கவனமாக ஆராய வேண்டும். வெறுமனே விலை குறைவாக இருப்பதால் முதலீடு செய்வது, நீண்டகால லாபத்தை உறுதி செய்யாது.
மாறாக, வலுவான அடிப்படைகளைக் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்வது, சந்தையின் ஏற்ற இறக்கங்களை சமாளித்து, நிலையான லாபத்தை அளிக்கும். இந்த அணுகுமுறை, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்து, பங்குச் சந்தையில் வெற்றிகரமான முடிவுகளை எடுக்க உதவுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?



Click it and Unblock the Notifications