சென்னை: ஒரு புது காரை வாங்குவது முழு குடும்பத்திற்கும் உற்சாகத்தைத் தருகிறது. ஏனெனில், சௌகரியமான பயணத்தை தான் அனைவரும் விரும்புகின்றனர். இருப்பினும் இந்த உற்சாகத்திற்கு மத்தியில ஒரு முக்கியமான கருத்து என்னவென்றால், அதற்கு நாம் செய்யும் செலவு.
புதிய காரை தேர்வு செய்வதற்கு முன்பு கவனமான திட்டமிடல் முக்கியம். தரத்தில் சமரசம் செய்யாமல், செலவைக் குறைக்கும் வகையில், நீங்கள் வாங்கும் கார்கள் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டிய யுக்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விரிவான ஆய்வை மேற்கொள்ளுங்கள்: நீங்கள் கார் வாங்குவதற்கு முன்பு, பல கார் தயாரிப்பு நிறுவனங்களின் விலையையும் ஒப்பிட்டு பார்த்து தரத்தில் சமரசம் செய்யாமல் முடிவு எடுங்கள். மேலும் கார் விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள கஷ்டமர் ரிவ்யூக்களை, நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களின் வாயிலாகத் தெரிந்து கொள்ளுங்கள். பராமரிப்பு, எரிபொருள் திறன், மற்றும் காப்பீடு போன்றவற்றையும் கருத்தில் கொண்டு தேர்வு செய்யுங்கள்.
வட்டி விகிதங்கள்: கார் வாங்கும் போது, நீங்கள் ஒரே பேமெண்டாக செட்டில் செய்து வாங்கினால், சில விஷயங்களை நீங்கள் ஆராய வேண்டும். அவை என்னவென்றால் அடுத்தடுத்து வரும் அவசர தேவைகளை, உங்களால் பூர்த்தி செய்ய முடியுமா என்பதுதான். அதேபோல சிலர் வங்கிகளில் லோன் பெற்று கார்களை வாங்குவார்கள். அதுபோல வாங்க நினைத்தால், நீங்கள் பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இது நீங்கள் செலுத்தும் வட்டிச் சுமையை குறைக்க உதவுகிறது.
புத்திசாலித்தனமாக பேச்சுவார்த்தை நடத்துங்கள்: கார்களின் சந்தை விலைகள் பற்றிய அறிவைப் பெற்று டீலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது, அந்த தகவல்களைப் பயன்படுத்துங்கள். காருக்கான செலவு, சேமிப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பண்டிகை கால தள்ளுபடிகள் மற்றும் டீலர்ஷிப் சலுகைகளை ஆராயுங்கள்.
கார்களுக்கான பராமரிப்புச் செலவு: புதிய கார்கள் வாங்கிய, சில ஆண்டுகளில் கணிசமான தேய்மானம் ஏற்படலாம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீண்ட காலம் கார்களைப் பாதுகாக்க விரும்பினால், அதனைச் சரிவர பராமரிப்பது முக்கியம். தேவைப்படும் கார்களை மறு விற்பனை செய்வதற்கு ஏற்றவாறு பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
எரிபொருள் சிக்கனம்: எரிபொருள் சிக்கனத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். கார் மாடலைத் தேர்ந்தெடுக்கும் போது, அதிக மைலேஜ் தரும் எரிபொருள் திறன் கொண்ட காரணிகளை ஆராயுங்கள். காலப்போக்கில் எரிபொருள் செலவை சேமிக்க, மின்சாரம் அல்லது எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வாகனத்தைத் தேர்வு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications